Posts

Showing posts with the label Index 063 இடுக்கணழியாமை

063 இடுக்கணழியாமை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - இடுக்கணழியாமை குறள் 621 இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில் குறள் 622 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் குறள் 623 இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் குறள் 624 மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து குறள் 625 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும் குறள் 626 அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர் குறள் 627 இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் குறள் 628 இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் குறள் 629 இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் குறள் 630 இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு பதிவு வரிசை