Posts

Showing posts with the label Index 049 காலமறிதல்

049 காலமறிதல்

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - காலமறிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 481 பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது குறள் 482 பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு குறள் 483 அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் குறள் 484 ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின் குறள் 485 காலம் கருதி இருப்பர் கலங்காது  ஞாலம் கருது பவர் குறள் 486 ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து குறள் 487 பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் குறள் 488 செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை குறள் 489 எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல் குறள் 490 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து பதிவு வரிசை