046 சிற்றினஞ்சேராமை
பால் - பொருட்பால் இயல் - அரசியல் அதிகாரம் - சிற்றினஞ்சேராமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் குறள் 452 நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு குறள் 453 மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல் குறள் 454 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு குறள் 455 மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும் குறள் 456 மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை குறள் 457 மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும் குறள் 458 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து குறள் 459 மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து குறள் 460 நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் பதிவு வரிசை