Posts

Showing posts with the label Index 034 நிலையாமை

034 நிலையாமை

Image
பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - நிலையாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 331 நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை குறள் 332 கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்  போக்கும் அதுவிளிந் தற்று குறள் 333 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் குறள் 334 நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின் குறள் 335 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் குறள் 336 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு குறள் 337 ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல குறள் 338 குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு குறள் 339 உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு குறள் 340 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு பதிவு வரிசை