Posts

Showing posts with the label Index 021 தீவினையச்சம்

021 தீவினையச்சம்

Image
பால்  - அறத்துப்பால் இயல்  - இல்லறவியல் அதிகாரம்  - தீவினையச்சம் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 201 தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு குறள் 202 தீயவை தீய பயத்தலால் தீயவை  தீயினும் அஞ்சப் படும் குறள் 203 அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல் குறள் 204 மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்  அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு குறள் 205 இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து குறள் 206 தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான் குறள் 207 எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும் குறள் 208 தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று குறள் 209 தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்  துன்னற்க தீவினைப் பால் குறள் 210 அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின் பதிவு வரிசை