Posts

Showing posts with the label Index 013 அடக்கமுடைமை

013 அடக்கமுடைமை

Image
பால்  - அறத்துப்பால் இயல்  - இல்லறவியல் அதிகாரம்  - அடக்கமுடைமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் குறள் 122 காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்  அதனினூஉங் கில்லை உயிர்க்கு குறள் 123 செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் குறள் 124 நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்  மலையினும் மாணப்  பெரிது குறள் 125 எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து குறள் 126 ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்  எழுமையும் ஏமாப் புடைத்து குறள் 127 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு குறள் 128 ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும் குறள் 129 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு குறள் 130 கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து பதிவு வரிசை