Posts

Showing posts with the label Index 011 செய்ந்நன்றி அறிதல்

011 செய்ந்நன்றி அறிதல்

Image
பால்  - அறத்துப்பால் இயல்  - இல்லறவியல் அதிகாரம்  - செய்ந்நன்றி அறிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது குறள் 102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது குறள் 103 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் குறள் 105 உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து குறள் 106 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு குறள் 107 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு குறள் 108 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று குறள் 109 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும் குறள் 110 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை  செய்ந்நன்றி கொன்ற மகற்கு   பதிவு வரிசை