Posts

Showing posts with the label Index 007 மக்கட்பேறு

007 மக்கட்பேறு

பால் - அறத்துப்பால் இயல் - இல்லறவியல் அதிகாரம் - மக்கட்பேறு சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 61 பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற குறள் 62 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் குறள் 63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் குறள் 64 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் குறள் 65 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு குறள் 66 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்  மழலைச்சொல் கேளா தவர் குறள் 67 தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் குறள் 68 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது குறள் 69 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் குறள் 70 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் பதிவு வரிசை