குறள் 730 உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார் [பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை] பொருள் உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர் எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும் இல்லாரொடு - இல்லார் - இல்லாதவர் ஒப்பர்- ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை. களன் - மருதநிலம்; இடம்; பொய்கை; ஒலி; கழுத்து; தொடர்பு; மயக்கம். அஞ்சிக் - அஞ்சுதல் - பயப்படுதல் கற்ற - கற்கை - பயிலுதல் செலச் - செறிவாக, மனம் உணரும் அளவிற்கு சொல்லுவார் - உரைப்பவர், சொல்லுபவர், விளுக்குபவர் சொல்லாதார் - சொல்லாதவகள்; உரைக்காதவர்கள் முழுப்பொருள் உளர் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்களை எடுத்துக்கொள்ளாலாம். அப்படி எடுத்தால் பொருள் என்னவென்ற பார்க்கலாம் 1. உளர் - உடையது/(கல்விச்)செல்வம்; நூல்கள் பல கற்று/வாசித்து கல்விச்செல்வத்தை பெற்றிருந்தாலும் சான்றோர்கள் அறிஞர்கள் கூடியுள்ள அவையில் செறிவாக தெளிவாக நன்றாக பேச அஞ்சுபவர் கல்வி அறிவில்லாதவர் (கல்வியில் வறுமையானவர்க்கு) ஒப்பானவர்கள். ஏனெனில் கல்லாதவரும்...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.