குறள் 727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்
[பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை]
பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.
அகத்துப் - அகம் - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.
பேடி - பெண்தன்மைமிகுந்தஅலி; வீரியமின்மை; நடுவிரல்; அச்சம்.
கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.
ஒள் - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.
வாள் - ஒளி; கத்தி; கத்தரிகை; கூர்மை; ஈர்வாள்; விளக்கம்; புகழ்; கொல்லுகை; கலப்பை; உழுபடையின்கொழு; கயிறு; நீர்; கச்சு.
அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.
அகத்து - அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.
அஞ்சும் - அஞ்சுதல் - பயப்படுதல்.
அவன் - ஆண்பால்சுட்டுப்பெயர்
கற்ற - படித்தல்
நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.
முழுப்பொருள்
நாட்டில் பல போர் பயிற்சிகள் பெற்றும் பகைவர் முன்னே போரிட அச்சம் கொள்பவனின் கையில் வாள் இருந்தும்பயனில்லை. அவ்வாளை பயன்படுத்த வேண்டிய நேரத்தில் பயன்படுத்த தெரியாதவனிடம் இருந்தால் அதற்கு பயனுமில்லை சிறுமையும் அடைகிறது. அத்தகையவன் கோழை.
அதுப்போல பல நூல்கள் கற்றும் சான்றோர் கூடியுள்ள அவையினில் பேச பயப்படுவானென்றால் அவனால் அவன் கற்ற நூல்களுக்கும் சிறுமை அவன் கற்றவற்றால் ஒரு பயனும் இல்லை. ஏனெனில் தேவையான நேரத்தில் பயன்படுத்தவேண்டியதே கல்வி. இல்லையேல் அதனால் பயன் என்ன? அத்தகையவன் அறிவிலி.
அவையில் அஞ்சாது பேசுபவன் உண்மையான அறிவுடையவன்.
ஒப்புமை
“நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்
புல்லவையுள் தன்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார்
புடைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள்வில் லேற்றி
இடைக்கலத் தெய்து விடல்” (பழமொழி 249
பரிமேலழகர் உரை:
பகையத்துப் பேடி கை ஓள்வாள் - எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல் - சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல். (பேடி : பெண் இயல்பு மிக்கு ஆண் இயல்பும் உடையவள்.களமும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்றாயினாற் போல, அவையும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும், கற்றவன் குற்றத்தால் நூல் சிறப்பின்றா யிற்று.) .
மணக்குடவர் உரை
பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும், அவையின்கண் அஞ்சுமவன் கற்றநூலும்.மேல் பயனில்லை யென்றார் இங்குப் பயனில்லாதவாறு காட்டினார்.
மு.வரதராசனார் உரை:
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.
Thirukkural - Management - Public Speaking - Fear of speaking
Two Kurals deal with the damages caused by fear of speaking in front of an audience and the relevance to overcome that fear. Many research works have shown that stage fear/fright or fear of speaking in public is the second or third common fear among people. Many highly educated people are afraid of speaking in public. Even professional speakers experience fear at the beginning of their speeches. But, they are extremely confident that they know how to camouflage their fear tactfully so that their audience cannot see their fear. Their fear is not visible to their audience. Valluvar uses a smile in Kural 727 to communicate his message on fearless speaking.
The learning of the tongue-tied
Is a sword in a poltroon’s hand.
A person who is equipped with knowledge but possesses fear of speaking in public is similar to a fearful person who is holding a sword in the battlefield. That person cannot wield his weapon as he is afraid of his enemies. Though the weapon is in his hand, that is not handy to him. Similarly, if a speaker has fear of his audience, his knowledge alone cannot help him to speak.
No comments:
Post a Comment