Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

கற்றாருள் கற்றார் எனப்படுவர்

குறள் 722
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்
[பொருட்பால் - அமைச்சியல் - அவையஞ்சாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கற்றாருள் - கற்றவர்களுள், அறிவுடையவர்களுள், சான்றோர்களுள்
கற்றார் - கற்றவர், சான்றோர்
எனப்படுவர் - என்று அறியபடுபவர்
கற்றார்முன் - அங்கே அவையில் கூடி இருக்கும் கற்றவர்கள் முன்பு
கற்ற - கற்றவற்றை, சொல்லவேண்டியவற்றை
செலச் - செறிவாக, மனம் உணரும் அளவிற்கு
சொல்லுவார் - உரைப்பவர், சொல்லுபவர், விளுக்குபவர்

முழுப்பொருள்
ஒருவர் பல நூல்களை கற்று இருக்கலாம். அதனை அறிவில்லாதவர்களிடம் சொல்லி கைதட்டல்கள் வாங்கலாம். அவர் கற்றவர் என்று நாம் சொல்லிவிட முடியாது. 

ஆனால் உண்மையில் கற்றவர் எனப்படுபவர் கற்றவர்கள் இருக்கும் இடத்தில் தான் கற்றவற்றை அஞ்சாமல் கற்றவர்கள் ஏற்கும் அளவிற்கு திறம்பட கூற வள்ளவரே கற்றவர். இது சொற்ப்பொழிவு ஆற்றலினால் மட்டும் வந்துவிடாது. தான் கற்றவற்றை மிக தெளிவாக தன் உளமார கற்றிருந்தால் தான் அடுத்தவர் புரிந்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு உரைக்க முடியும். 

கற்றவர் ஒரு அவையில் பேச அஞ்சக்கூடாது. ஒழுங்காக கற்றக்கவில்லை என்றால் தான் அஞ்சவேண்டும். ஒழுங்காக கற்றிருந்தால் அஞ்சாவேண்டாம். 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
கற்றாருள் கற்றார் எனப்படுவர்- கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரால் சொல்லப்படுவார்; கற்றார் முன் கற்ற செலச் சொல்லுவார் - கற்றார் அவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும் வகை சொல்ல வல்லார். ( உலகம் அறிவது அவரையே ஆகலின் அதனால் புகழப்படுவாரும் அவர் என்பதாம்.)

அறிஞர்களும் நிபுணர்களும் கூடியுள்ள ஒரு அவையில் (உதாரணமாக ஒரு நிர்வாகத்தில் Head, director, senior managers கூடியுள்ள ஒரு business review meetingஇல்) செறிவான விஷயத்தையும் தெளிவாக செறிவாக ஒரு குழந்தைக்கு புரியக்கூடிய அளவு எளிமையாக சொல்ல வேண்டும். ஏன் செறிவாக சொல்லவேண்டும்? ஏனெனில் கற்றவர்களுக்கு செறிவாக சொன்னால் விளங்கும் அவர்களுக்கு பாமர மொழியில் சொல்லி ஒவ்வொன்றாக விளக்கு இரண்டு மூன்றுமுறை சொல்லி மனதில் பதியவைக்க வேண்டிய அவசியமில்லை. ஏன் தெளிவாக சொல்லவேண்டும்? நம்மிடம் தெளிவு இல்லையென்றால் நாம் முழுதாக அதனை கற்கவில்லை என்று பொருள். ஆதலால் கற்றோர் நம்மீது நம்பிக்கை இழப்பர். நம்மிடம் அந்த செயலை (project) கொடுக்க தயங்குவர். ஏன் குழந்தைக்கு சொல்வதுப் போன்று சொல்லவேண்டும்? ஏனெனில் எளிமையான வார்த்தைகளைக்கொண்டு குறைவான நேரத்தில் குழந்தைகளுக்கு சொல்லவேண்டும். அப்பொழுது தான் குழந்தைகள் கவனம் சிதறாது. இல்லையென்றால் குழந்தைகள் வேறு ஏதாவது விளையாட்டு விளையாட சென்றுவிடுவர். 

"If you can't explain it simply, you don't understand it well enough". - Albert Einstein
"If you can't explain it to a six year old, you don't understand it yourself" - Albert Einstein
என்ற வரிகளையும் நினைவில் கொள்க

மணக்குடவர் உரை
கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார், தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார்.

இது கற்றாரென்பார் அவையஞ்சாதார் என்று கூறிற்று.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கற்ற கற்றார்முன் செலச் சொல்லுவார்-தாம் கற்றவற்றைக் கற்றாரவைக்கண் அவர் உளங் கொள்ளும்வகை சொல்லவல்லவர்; கற்றாருள் கற்றார் எனப்படுவர்-கற்ற ரெல்லாருள்ளும் நன்கு கற்றவரென்று கற்றாரால் உயர்த்துச் சொல்லப்படுவர்;

"புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம்-நலமிக்க
பூம்புன லூர ! பொதுமக்கட் காகாதே
பாம்பறியும் பாம்பின கால்."

(பழமொழி, 7).

கற்றார் என்னும் சொல் பன்முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலை யணியாம்.

மு.வ உரை
கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

சாலமன் பாப்பையா உரை
தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.

Thirukkural - Management - Public Speaking - Fear of speaking 
A person is considered learned when he can confidently present his views, ideas, and thoughts in the presence of learned people. Besides presenting information confidently, a speaker has to present convincingly so that the other learned and educated people accept his learning, convinces Kural 722.

Most learned among the learned is he 
Whose learning the learned accept. 

Therefore, to become more learned than the learned, a person must have courage and competence to present convincingly his views, ideas, and opinions. 

Based on the discussion on fear of speaking in public we can infer that the fear of speaking in public is not a new phenomenon. Fear of speaking in public existed even during the period of Valluvar.

English Meaning - As I taught a kid - Rajesh
A person can be called well-read (most learned) amongst learned only if he / she can express their learnings / views / ideas / thoughts / findings / work compellingly /effectively / eloquently in front of a forum of learned audience. Such a command and courage would come only if the person has deeply learnt the subject through various means such as reading, learning from scholars, discussing with others, self analyzing, teaching others etc. A person who didn't learn properly would have fear while talking in front of learned forum. 

Also, on a side note, remember that it is natural to have stage fears initially. One can overcome that through practice. One can talk small topics for a small set of audience and then gradually increase the breath and depth of the topic as well as the nature of the audience (in terms of qualification) 

Questions that I ask to the kid
Who is said to be well read?

No comments:

Post a Comment