குறள் 539 இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து [பொருட்பால், அரசியல், பொச்சாவாமை] பொருள் இகழ்ச்சியின் - அவமதிப்பு; குற்றம் விழிப்பின்மை; வெறுப்பு; ikaḻcci n. id. 1. Detraction,disparagement, undervaluing; அவமதிப்பு (குறள்,995.) 2. Fault; குற்றம் (பிங்.) 3. Remissness,negligence, forgetfulness; அசாக்கிரதை இகழ்ச்சி கெட்டாரை - அழிந்தார், வறுமையடைந்தார், பாழானார், உள்ளுக - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். தாந்தம் - தாம் தம் ; ஒவ்வொருவரும் தம்முடைய மகிழ்ச்சியின் - உவகை, சந்தோஷம் மைத்தல் - கறுத்தல்; ஒளிமழுங்குதல். மதப்பு - களிப்பு; மிகுகாமம்; வெறிகொள்ளுகை; நிலம்முதலியவற்றின்செழிப்பு. மைந்துறும் - மதப்படையும் போழ்து - பொழுது முழுப்பொருள் நான் உயர்ச்சி அடைந்துவிட்டேன்! நான் வெற்றிப் பெற்றுவிட்டேன்! எனக்கு என்ன சொல்லுகிறீர்கள்? நாம் மகிழ்ச்சியில் களிப்படைந்து மனஒளிமழுங்கும் பொழுது, (சோர்வடையும் பொழுது) மறதியால் கெட்டு அழிந்தவரை நினைவில் கொள்க. ...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.