குறள் 537
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
[பொருட்பால், அரசியல், பொச்சாவாமை]
பொருள்
அரிய - செய்வதற்கு கடினாமான / இயலாத செயல்;
அரியகாட்சி - rare sight
அரிய - ariya adj. அரு-மை. Precious,dear, excellent, rare, difficult; அருமையான.
என்று - என்று
ஆகுதல் - ஆதல், ஆவது எனப்பொருள்படும் இடைச்சொல், உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்
ஆகாத - முடியாத
இல்லை - இல்லை
பொச்சாவாமை - மறவாமை - மறதி இல்லாமை - மறதியின்மை
பொச்சாப்பு - மறதி; பொல்லாங்கு; குற்றம்; உறுதியின்றிமனம்நெகிழ்ந்திருக்கை
பொச் சாவாக் -> பொச்சாவாமை
கருவி - ஆயுதம்; சாதனம்; கவசம்; கேடகம்; குதிரைக்கலணை; குதிரைச்சம்மட்டி; தொகுதி; மேகம்; தொடர்பு; ஆடை; ஓவியம்; அணிகலன்; துணைக்காரணம்; இசையுண்டாதற்குரியயாழ்முதலியகருவிகள்
கருவியால் - (மனம் எனும்) சாதனம் / உபகரணம் / இயந்திரம் / ஆயுதம் கொண்டு.
போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்.
போற்றிச் - மனதில் துதித்து (நினைத்து)
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்
செயின் - செய்தால்.
முழுப்பொருள்
ஒருவர் செய்ய இயலாத செயல், கடினமான செயல் என்று ஏதும் இல்லையாம். இந்த செயலை செய்து முடிக்க வேண்டும் என்ற நினைவு வேண்டும். அதற்கு மறவாமை அவசியம்.
செயல் செய்வதற்கு மனமே ஒரு கருவிதான். மன ஒருமைப்பாடு வேண்டும். கவனத்தைக் குவித்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
ஆக, செயலுக்குரிய எதையும் மறவாத (மறதியின்மை) மனம் கொண்டு இடைவிடா முயற்சியும் வியூகமும்(strategy) உடையார் செய்யும் செயல்கள் எல்லாம் எளிதில் முடியும்.
- மறதியின்மை மனம் சம்பந்த பட்டது - மூளை சம்பந்த பட்டது எல்ல என்பதை நாம் இங்கு காண வேண்டும். ஆதாவது உள்ளம் உடைமை வேண்டும். அப்படி இருந்தால் தானாக மற்றவை நடக்கும்.
மேற்சொன்ன குறளுடன் தொடர்புபடுத்திப்பார்த்தால் ஒருவர் தான் வைத்துக்கொண்ட இலக்கை மறவாமல் (இலக்கை குறைத்துக்கொள்ளாமல்) இருந்தால் அவர் அவ்விலக்கை எண்ணியப்படியே அடைவார். அதற்கு மனதிட்பமும் அவசியம் மறவாமையும் அவசியம்.
மகாத்மா காந்தியைப் பாருங்கள் அவர் அளவு உழைத்தவர்கள் மிக மிக அரிது. அவர் ஒருப்பக்கம் சுதந்திரப்போரட்டத்திற்கு பாடுபாட்டாலும், அவர் தொடர்ந்து இந்தியா முழுவதும் பயணங்களும், தினமும் பலர் கடிதங்களும் பதில்களும், கிராம முன்னேற்றம், இயற்கை மருத்துவம் போன்ற பலதளங்களில் செயலாற்றிக்கொண்டு இருந்தார். ஒரு மனிதனின் செயலாற்றும் திறன் ஒருவர் நினைத்துப்பார்க்கக்கூடியதைவிட மிக மிக அதிகம். அதற்கு ஒருவர் உணரவேண்டியது வாழ்வில் சோர்வினாலோ எக்காராணத்தினாலோ ஒரு நிமிடத்தையும் வீணடிக்கலாகாது என்பது தான்.
மேலும் அஷோக்
நன்றி: அம்மன் தரிசனம்
கவனமாக மனத்தையும், அதைச் செய்யும் கருவி, கர்த்தா முதலிய சாதனங்களோடும் செய்தால், இஃது அரிய செயல் என்று ஏதுமில்லை.
செயல் செய்வதற்கு மனமே ஒரு கருவிதான். மன ஒருமைப்பாடு வேண்டும். கவனத்தைக் குவித்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
அர்ச்சுனனுக்கு வில்வித்தை கை வந்ததற்கு அவனுடைய மன ஒருமைப்பாடுதான் காரணம். எல்லாரிடமும் வில் இருந்தது. அதனால் அவர்கள் பெருமை பெற்றுவிடவில்லை. கருவிகளைக் கையாளும் மனம் ஒரு முக்கியக் கருவி. ஆதலால், கவனமாக, போற்றிச் செய்யும்போது, அரிய செயல் ஏதுமில்லைதான்.
நன்றி: ரிஷ்வன்
மறதி இன்றி
உறுதியுடன் முனைந்தால்
முடியாத செயல் கூட
அடிபணிந்து வெற்றி தரும்.
பரிமேலழகர் உரை
அரிய என்று ஆகாத இல்லை - இவை செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை; பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப் பெறின்.
விளக்கம் ['பொச்சாவாத' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. அந்தக் கரணமாகலின் 'கருவி' என்றார். இடைவிடாத நினைவும் தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை
செயற்கு அரியனவென்று செய்யலாகாதன வில்லை; மறவாமையாகிய கருவியாலே பாதுகாத்துச் செய்வானாயின். இது வினை செய்யுங்கால் மறவாமை வேண்டுமென்றது.
ஞா. தேவநேயப் பாவாணர்
பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தினால் எண்ணிச் செய்தால் ; அரிய என்று ஆகாத இல்லை - செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவருக்கு முடியாத கருமங்கள் இல்லை.
இது பரிமேலழகர் கல்வியாரவார உரையைத்தழுவியது . மனத்திற்கு அகக்கரணம் என்று பெயரிருத்தலால் , 'கருவி' என்பதற்கு அவர் மனம் என்று பொருள் கொண்டார் , கரணம் கருவி. இப்பொருட்குப் 'பொச்சாவா' ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
'பொச்சாவாக்' கருவி என்னுந் தொடரைப் பொச்சாவாமையாகிய கருவி என்று இருபெயரொட்டாகக் கொள்வதே இயற்கையான முறையாம் . இப்பொருட்குப் 'பொச்சாவா' ஈறுகெட்ட எதிர்மறைத் தொழிற்பெயர் போல்வதாம் . இடைவிடா முயற்சியும் சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம்.
மு.வரதராசனார் உரை
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
சாலமன் பாப்பையா உரை
மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.
Thirukkural - Management - Memory
No task is difhcult to achieve, if a person is in possession of the superior tool or weapon, that is., memory. A person with optimal memory will not give up the execution of a task claiming that that task is difhcult to achieve, assures Kural 537.
Nothing is impossible to a man
Armed with vigilance.
Memory helps a person connect the events and people of past and present. Resource is not a challenge in today's context. But to be resourceful is a challenge. Memory makes a person resourceful. Definitely, Thirukkural is management Treasure will make you more resourceful.
No comments:
Post a Comment