Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_030

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

குறள் 300 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் யாம் - தன்மைப்பன்மைப்பெயர். மெய்யாக் - மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து கண்ட - கண்டது - காணப்பட்டபொருள்; சம்பந்தமற்றசெய்தி. காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. கண்டவற்றுள்  - அறிந்தவற்றுள்  இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. எனைத்து -   எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு, எந்த நிலையானாலும் ஒன்றும் -   சிறிதும், oṉṟum   oNNum ஒண்ணும் (+ neg.) nothing வாய்மையின் -  உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி. நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான. பிற - மற...

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

குறள் 299 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எல்லா - எல்லாம் - முழுதும், அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்., அறிவொழுக்கங்களால்நிறைந்த பெரியோர் விளக்கும்   - விளக்கு  - ஒளிதருங்கருவி; ஒளிப்பிழம்பு; ஒளிபெறச்செய்கை;  விளக்கு  - ஒளிதருங்கருவி; ஒளிப்பிழம்பு; ஒளிபெறச்செய்கை;  அல்ல -  இல்லை, அன்று   சான்றோர்க்குப் - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர், அறிவொழுக்கங்களால்நிறைந்த பெரியோர் பொய்-த்தல் - poy-   11 v. பொய். intr. 1.To fail, as a prediction or omen; to deceivehope, as clouds; தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13). 2. To prove false; தம் செயலினின்று பின்வாங்குதல். பொய்த்தோர் வில்லிகள்போவாராம் (கம்பரா. சூளா. 41). 3. To go to ruin;கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம்(குறள், 753).--tr. 1. To lie, utter falsehood;to make false pretences; பொய்யாகப் பேச...

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

குறள் 298 புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில். தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை. நீரால் - நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. அமையும் - அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு. தூய்மை -  துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை. வாய்மையால்  - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி. காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குத...

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

குறள் 297 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] பொருள் பொய்யாமை - பொய்பேசாமை; நடுவுநிலைமை பொய்யாமை -  பொய்பேசாமை; நடுவுநிலைமை பொய்-த்தல் - poy-   11 v. பொய். intr. 1.To fail, as a prediction or omen; to deceivehope, as clouds; தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13). 2. To prove false; தம் செயலினின்று பின்வாங்குதல். பொய்த்தோர் வில்லிகள்போவாராம் (கம்பரா. சூளா. 41). 3. To go to ruin;கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம்(குறள், 753).--tr. 1. To lie, utter falsehood;to make false pretences; பொய்யாகப் பேசுதல்.தன்னெஞ் சறிவது பொய்யற்க (குறள், 293). 2. Todeceive, cheat; வஞ்சித்தல். நின்றோடிப் பொய்த்தல் (நாலடி, 111). பொய்யா - என்றும் தவறாத; என்றும் அணையாத ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் அறம் - தரு...

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை

குறள் 296 பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும் [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] பொருள் பொய்யாமை - poyyāmai   n. id + id. 1.Being truthful; பொய் சொல்லாமை. பொய்யாமையன்ன புகழில்லை (குறள், 296). 2. Impartiality;நடுநிலைமை. பொய்யாமை நுவலுநின் செங்கோல்(கலித். 99). அன்ன - அத்தன்மையானவை; ஓர் அஃறிணைப் பன்மைக்குறிப்பு வினைமுற்று; ஓர்உவமஉருபு. புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை இல்லை - இருக்காது, தங்காது எய்யாமை - அறியாமை எல்லா - முழுதும்; விளிப்பெயர்; முன்னிலைப்பெயர். அறமும் - அறம்  - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். தரும் - கொடுக்கும் முழுப்பொருள் பொய் சொல்லாமல் ஒருவன் தன் வாழ்வில் வாழ்வானென்றால் அவனுக்கு அதுப்போல புகழ்/பெருமை தருவது வேறில்லை. அந்த வாய்மையை அவன் வாழ்நாள் எல்லாம் கடைப்பிடிப்பான் என்றால் அவனை அறியாமலே அறம் அவனுக்கு தருகின்ற எல்லா பயனும் (தருமம் தலைகாக்கும்) வந்து சேரும். சமுதாயத்தை உயர...

உள்ளத்தாற் பொய்யா தொழுகின்

குறள் 294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன் [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] பொருள் உள்ளத்தால் - உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை. பொய் - மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கை யானது; சிறுசிறாய். பொய்யாது   - போலியாக இல்லாமல்; செயற்கையாக இல்லாமல்; ஒழுகின் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல். உலகத்தார் - உலகிலுள்ளோர், உலகமக்கள்; உயர்ந்தோர் உலகப்பற்றுடையார். உள்ளத்துள் - உள்ளத்தினில் - உள்ளத்தின் உள்ளே எல்லாம் - முழுதும் உளன்   - அவர் நினைக்கும்படியாக வாழ்வார் முழுப்பொருள் உள்ளத்தினால் தன்னுடைய எண்ணங்களில் சொற்களில் முயற்சிகளில் செயல்களில் என்று எல்லாவற்றிலும் உண்மையாக பொய்யாக இல்லாமல் போலியாக இல்லாமல் நடந்துகொண்டால் (செயல்புரிந்தால்) அவர் உயர்ந்தோர் உள்ளங்களில் எல்லாம் நினைக்...

பொய்மையும் வாய்மை யிடத்த

குறள் 292 பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த  நன்மை பயக்கும் எனின் [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] பொருள் பொய்ம்மையும் - பொய்மை - poymai   s. Falsehood, falsity, பொய். 2. Unreality, illusion, மாயம். 3. That which is counterfeit, artificial, கரவடம். (p.) வாய்மை - vāymai   n. id. 1. Word;சொல். சேரமான் வாரா யெனவழைத்த வாய்மையும்(தனிப்பா. i, 97, 19.) 2. Ever-truthful word;தப்பாதமொழி. பொருப்பன் வாய்மை யன்ன வைகலொடு (கலித். 35). 3. Truth; உண்மை. வாய்மையெனப் படுவ தியாதெனின் (குறள், 291). 4.(Buddh.) Sublime truths, numbering four,viz., tukkam, tukkōṟpatti, tukka-nivāraṇam,tukka-nivāraṇa-mārkkam; துக்கம் துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் எனநால்வகைப்பட்ட பௌத்தமத உண்மைகள். ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது (மணி. 30, 188).5. Strength; வலி. (சூடா.) இடத்த - இடத்தல் - பிளவுபடுதல்; உரிதல் தோண்டுதல் பிளத்தல் பெயர்த்தல் குத்தியெடுத்தல்; உரித்தல் புரை - குற்றம்; உட்டுளைப்பொருள்; குரல்வளை; விளக்குமாடம்; உள்ளோடும்புண்; கண்ணோய்வகை; பொய...

வாய்மை எனப்படுவது யாதெனின்

குறள் 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்  தீமை இலாத சொலல் [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி. எனப்படுவது - என்பது யாது ? எனின் - எதுவென்றால் யாது   - எது ஒன்றும் - சிறிதும் தீமை -  கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; தீங்கு, கேடு, முதலியன இலாத - இல்லாத சொலல் - சொல் முழுப்பொருள் பொய் சொல்லாத மெய் (வாய்மை, உண்மை) என்பது என்னவென்றால் எக்காலத்திலும் பிறருக்கு (பிற உயிர்களுக்கு) மனதளவிலோ உடல் அளவிலோ சிறிதும் தீங்கு விளைவிக்காத சொற்களை பேசுதல் என்பதாகும். உதாரணம்: வலைதளங்களில் இப்புராணக் கதையை படித்தேன். இது உண்மையான கதை என்று சொல்ல முடியாது. ஆனால் மைய கருத்து, இக்குறளை ஒத்தியே இருக்கிறது. ஒரு கிராமத்தில் சன்னியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்போதுமே உண்மையே பேசுவார். அவர் வசித்த தெருவழியே ஒரு நாள் ஒரு பசுமாடு ஓடியது. சில வினாடிகளில் அந்த வழியே மனிதன் ஒடி வந்தான். ஓடி வந்த மனிதன...

தன்நெஞ் சறிவது பொய்யற்க

குறள் 293 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்  தன்நெஞ்சே தன்னைச் சுடும் [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தன் நெஞ்சு - தன்னுடைய மனம்/ நெஞ்சம் (பிறர் அறியாதது) அறிவது - அறிந்துக்கொள்வது / அறிவது / தெளிந்துக்கொள்வது / உண்மையானது பொய்யற்க - (அதனை) பிறர் அறியவில்லையே என்று எண்ணி பொய்யினை கூறாதே பொய்த்தபின் - மீறி பொய் சொன்னால், அதன் பின் தன் நெஞ்சே - தன்னுடைய நெஞ்சமே தன்னைச் சுடும் - குற்ற உணர்ச்சியால் தன்னை சுட்டெரிக்கும் நெருப்பாக ஆகிவிடும் முழுப்பொருள் பல உண்மைகள் எல்லோருக்குமே தெரிந்து இருக்கும். ஆதலால் பொய் சொன்னாலும் மற்றவர்கள் சுட்டிக்காட்டி தகுந்த தண்டனை கொடுத்து ஒருவனை அழித்து விடுவர். ஆனால் பிறருக்கு தெரியாத சில உண்மைகள் தனக்கு மட்டும் தெரிந்த சில உண்மைகள் பல நேரம் அமையும். குறிப்பாக குடும்பங்களில், அலுவலங்களில், நட்பு வட்டாரத்தில். அத்தகைய நேரங்களில் பிறருக்கு தெரியாதே எனக்கு மட்டுமே தெரிந்த உண்மையாயிற்றே என்று எண்ணாமல் உண்மையை சொல்லுக. பொய்யை சொல்லாதே, உண்மையை மறைக்காதே. மீ...

மனத்தொடு வாய்மை மொழியின்

குறள் 295 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு  தானஞ்செய் வரின் தலை [அறத்துப்பால், துறவறவியல்,  வாய்மை ] பொருள் மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு. மனத்தொடு - மனதுடன் வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி. மொழி - சொல்; கட்டுரை; சொற்றொகுதி; பேச்சுமுறை; வாக்குமூலம்; பொருள்; மணிக்கட்டு, முழங்கால், கணுக்கால்முதலியவற்றின்பொருத்து; மரக்கணு. மொழியின் - மொழிதல் - சொல்லுதல் தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ. தவத்தொடு - தவத்துடன்  தானம் - இடம்; இருப்பிடம்; பதவி; கோயில்; இருக்கை; சக்தி; துறக்கம்; செய்யுட்பொருத்தத்தில்வரும்நிலைகள்; எழுத்துப்பிறக்குமிடம்; எண்ணின்தானம்; நன்கொடை; யானைமதம்; நால்வகைஉபாயத்துள்ஒன்றாகியகொடை; குளித்தல்; இசைச்சுரம்; சாதகசக்கரத்திலுள்ளவீடு; ஆற்றலில்சமமாயிருக்கை; இல்லறம்; மகரவாழை. செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் செய்வரின் - செய்பவரை விட  தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உ...