குறள் 140 உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் [அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை] பொருள் உலகத்தோடு - உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம் ஒட்ட - அடியோடு; கிட்ட; இறுக; அணுக; போல. ஒழுகல் - ஒ ழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல். ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம். பல - ஒன்றுக்குமேற்பட்டவை கற்றும் - கற்கை - படித்தல். கல்லார் - நெறிநூல்கள் கல்லாதவர் அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா இலாதார் - இல்லாதவர் அறிவிலாதார் - அறிவு இல்லாதவர்கள் முழுப்பொருள் உலகம் என்றால் உயர்ந்தோர் என்று பொருள் கொள்ள வேண்டும். "உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர்" என்று திருமுருகாற்றுப்படையிலும் வருகிறது. ஆதலால் உயர்ந்தோருடன் ஒட்டி அவர்கள்கடைப்பிடிக்கின்ற ஒழுக்கத்தை பின்பற்றி ஒருவர் வாழவேண்டும். அப்படி உயர்ந்தோருடன் ஒட்டி வாழாம...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.