குறள் 133
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
பொருள்
ஒழுக்கம் - olukkam n. ஒழுகு-. 1. Conduct, behaviour, demeanour; நடை நல்லொழுக்கந் தீயொழுக்கங்கள். 2. Good conduct, morality, virtue, decorum; சீலம் ஒழுக்க முயிரினுமோம்பப் படும் (குறள், 131). 3. Behaving in conformity with the canons of right conduct laiddown for observance; விதித்த கடமைகளினின்று வழுவாதுநடக்கை. (குறள், உரைப்பாயிரம்.) 4. Acting according to established rules or customs; உலகத்தோடொட்ட ஒழுகுகை. (சி. சி 2, 23, சிவஞா.) 5.Going, passing; செல்லுகை. 6. Way; வழி (திவா.) 7. Height, elevation; உயர்ச்சி (சூடா.)8. Caste, tribe, family; குலம் (பிங்.)
உடைமை - uṭaimai n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).
உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் (நகை) உரிமை உரியவை
உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் (நகை) உரிமை உரியவை
குடிமை - kuṭimai n. id. 1. Mannersand customs of the higher classes, of nobility;உயர்குலத்தாரது ஒழுக்கம் (தொல். பொ 273.) 2.Supreme quality of advancing the status of afamily; பிறந்தகுடியை உயரச்செய்யுந் தன்மை மடிமை குடிமைக்கட் டங்கின் (குறள், 608). 3. Lineage,family, descent; குடிப்பிறப்பு குணனுங் குடிமையும் (குறள், 793). 4. Allegiance, homage, as ofsubjects to their sovereign; அரசரது குடியாயிருக்குந் தன்மை குடிமை மூன்றுலகுஞ் செயுங் கொற்றத்து(கம்பரா. நிந்தனை 37). 5. Domestic economy;குடித்தனப்பாங்கு. (W.) 6. Slavery, servitude,feudal dependence, feudatory in reference tohis chief; அடிமை குடிமைசெய்யுங் கொடும்புலையன்(அரிச். பு சூழ்வினை 70). 7. A tax, certain duesfrom tenants; குடிகளிடமிருந்து பெறும் ஒருவகைவரி. (S.I.I. iii, 110.)
இழுக்கம் - iḻukkam n. இழுக்கு-. 1.Fault, offence, transgression; பிழை நாளிழுக்கநட்டார் செயின் (குறள், 808). 2. Violation of socialand caste rules; ஒழுக்கந்தவறுகை. இழுக்க மிழிந்தபிறப்பாய் விடும் (குறள், 133). 3. Ignominy, discomfiture; ஈனம் மழுவாளவ னிழுக்கமுற்ற வன்றினும் (கம்பரா. அயோத். மந்திர. 42). ; பிழை; ஒழுக்கந்தவறுகை; தீயநடத்தை; ஈனம் தளர்வு தாமதம்
இழிந்த - தாழ்ந்தநிலை
இழிந்தோர் - தாழ்ந்தநிலையில்இருக்கின்றவர்.
இழிந்தோர் - தாழ்ந்தநிலையில்இருக்கின்றவர்.
பிறப்பாய் - பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.
விடும் - ஆகும்
முழுப்பொருள்
மு.கு: பொதுவாக வர்ணத்தின் படி பிறப்பினால் உயர்ந்த குலம் தாழ்ந்த குலம் என்று வகுக்கும் அவலம் இன்னும் இவ்வுலகில் உள்ளது. ஆனால் வள்ளுவரோ அன்றே அதனை மறுக்கவே இக்குறளை எழுதி இருக்கிறார்போலும். அன்று வர்ணத்தினால் மக்கள் பாகுபட்டு இருந்தாலும் அவர்களுக்குள் உயர்ச்சியும் தாழ்ச்சியும் இல்லாமல் இருந்திருக்கலாம். அவரவர் குலம்/வர்ணத்திற்கு ஏற்ப வேலை இருந்திருக்கலாம். ஆனால் அன்றுப் போல் இன்று இல்லை. பிறப்பினால் மக்கள் பாகுபடுக்க படுகின்றனர். அதற்காகவே அன்று திருவள்ளுவர் கூறியுள்ளார் என்று நினைக்கிறேன்.
உலக ஒழுக்கம் என்பது இவ்வுலகம் விதிக்கபட்ட விதிகளில் இருந்து ஒருவர் வழுவாது நடப்பது ஆகும். மனிதனுக்கு தாழ்வு தராமல் உயர்ச்சி தருவது ஒழுக்கமாகும். ஒழுக்கம் துன்பம் தராது. ஒழுக்கம் என்பது ஒரு வழி என்றும் சொல்லலாம். நம் முன்னோர்கள் நடந்து/கடந்து சென்று வீடுபேறு அடைந்த சரியான பாதையை ஒழுக்கம் எனலாம். ஆனால் ஒழுக்கம் என்பது ஒரு சடங்கு அல்ல. அது ஒரு வாழும் முறை. இன்னும் எளிதாக சொன்னால் அறத்திலிருந்து வழுவாது இருப்பது ஒழுக்கம். இல்லையே அது ஒழுக்கமில்லை/ஒழுக்கமற்றது.
வாழ்வில் ஒருவர் ஒழுக்கத்துடன் இருக்கிறார் என்றால் அதுவே அவருக்கு உடைமை. உடைமை என்றால் செல்வம், அணிகலன் என்று பொருள். ஒழுக்கமே ஒருவருக்கு சிறந்த நகை(அணிகலன் ஆகும்). செல்வம் என்பது பெருகிக்கொண்டே இருக்கும்.
இத்தகைய இவ்வொழுக்கத்தை பொருத்தே ஒருவரின் குலத்தின் குணத்தை சொல்ல முடியும். ஒருவர் நல்லொழுக்கத்தை கடைப்பிடித்தார் என்றால் அவரின் குலம் உயர்ச்சி பெறும். இல்லை என்றால் அவரின் குலத்திற்கு கெட்ட பெயர் வந்து சேரும். நல்லொழுக்கத்தினார் தன் குலம் மேம்படும். அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
ஆனால் ஒழுக்கத்திற்கு மாறாக தீயொழுக்கம் கொள்வதும், பிழை செய்வதும், தீயநடத்தை பின்பற்றுவதும், தளர்வு கொள்வதும் (சோம்பல்), தாமதம் செய்வதும் ஒருவருக்கு இழுக்கை தரும் தாழ்ச்சியை கொடுக்கும். அவருடைய பிறப்பை (பிறப்பின் அர்த்தத்தை, பொருளை, மேன்மையை) குறைத்துவிடும். ஆதலால் அவரால் வீடுபேறு அடைய முடியாமல் போகும். அதுமட்டும் இன்றி அவருடைய குலத்திற்கும் (குடும்பத்திற்கும்) கேட்டை கொடுக்கும். தன் வருங்கால சந்ததியினருக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருப்பார். அவரின் தீயொழுக்கத்தால் அவர் தாழ்ச்சி அடைந்தார். அவர் குலமும்/குடும்பமும் இதனால் பாதிக்கப்பட கூடும்.
தொல்காப்பியரே, வள்ளுவரின் இக்குறளுக்கு வழிகாட்டி என்பதை, “குடிமையாவது குடிப்பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கம்” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்), என்பதால் அறியலாம். ஔவையார் மூதுரையில், “குலத்தளவேயாகுமாம் குணம்” என்பார். ஆனால் வள்ளுவரோ அதற்கு எதிர்மாறாக “குணத்தளவேயாம் குலம்” என்ற கருத்தைச் சொல்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

ஒப்புமை
“குலம்சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம்” (கம்ப.நாட்டுப்.38)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.).
மணக்குடவர் உரை
ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.
மு.வரதராசனார் உரை
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
சாலமன் பாப்பையா உரை
தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.
சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.
நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.
No comments:
Post a Comment