Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

மறப்பினும் ஓத்துக் கொளலாகும்

குறள் 134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]

பொருள்
மறத்தல் - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு.

மறப்பினும் - மறந்தாலும் ; நினைவில் இருந்து போனாலும்

ஓத்துக் -ஓதுகை, ஓதப்படுவது; வேதம்; ஓரினப்பொருளைஒருவழிவைத்திருக்கும்இயல், நூற்பிரிவு; விதி.

கொளல் ஆகும் - கொண்டாலும் ; பின்னர் உரைத்துக்கொள்ளலாம்

பார்ப்பான் - பிராமணன்; பிரமன்; யமன்.

பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்

குன்றக் - குன்று-தல் - kuṉṟu-   5 v. intr. cf. kṣud.[K. kundu.] 1. To decrease, diminish, becomereduced; குறைதல் 2. To be ruined; அழிவடைதல். குன்றாமுதுகுன்றுடையான் (சிவப். பிரபந். பிக்ஷாட.2). 3. To fall from high position; நிலைகெடுதல் குன்றினனையாருங் குன்றுவர் (குறள், 965). 4. (Gram.)To be omitted, as a letter; எழுத்துக்கெடுதல்.(தொல். எழுத். 109.) 5. [T. kundu.] To droop,languish; to be dispirited; வாடுதல் அவன் துயரத்தால் மனங்குன்றினான். 6. To become stunted; tobe arrested in growth; வளர்ச்சியறுதல். சிறுகன்றுகளின் முதுகிற் கையைவைத்தாற் குன்றிவிடும்.

கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

முழுப்பொருள்
வர்ண சாஸ்திரத்தின் படி நான்கு குலங்கள் உண்டு. அவை 1) பிராமணர்கள் 2) சத்ரியர்கள் 3) வைசியர்கள் 3) சூதர்கள். பிராமணர்கள் எனப்படுபவர்கள் வேதங்களை படித்து உபதேசித்து வரும் சந்ததியினருக்கு கற்றுத்தந்து வேதத்தை காக்கும் கடமையை உடையவர்கள். சத்ரியகர்கள் நாட்டை ஆளவேண்டும் வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும் சூதர்கள் பிற தொழில்களை செய்ய வேண்டும்.

பிராமணர்கள் அடிப்படை வேலையே வேதங்களை கற்று ஓதவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அவர்களின் கடமையில் இருந்து தவறுகிறார்கள். அப்படி வேதத்தை மறந்து வேதம்தனை ஓதாமல் கூட இருக்கலாம். ஆனால் ஒருவன் ஒழுக்கத்தில் இருந்து தவறினால் அவனுடைய புகழும் அவன் குடும்பத்தினுடைய புகழும் குலத்தினுடைய புகழும் குன்றி விடும். ஆதலால் ஒருவருடைய புகழ் அவர் ஒழுக்கத்தில் உள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் ஒரு கேள்வி க்கு ராகவேந்திரர் பதில் சொல்வார்
கேள்வி : ஒரு பிராமணர் ஆவது பிறப்பாலா ஒழுக்கத்தாலா அல்லது படிப்பாலா?
ராகவேந்திரரின் பதில் :  ஒரு பிராமணர் ஆவது ஒழுக்கத்தினால்.



(@ 47:20)


பார்பனர்கள் சமூகத்தின் ஒழுக்க நெறிக்கு ஒரு நெறிவரம்பாக, அளவு வரையாக இருக்கவேண்டும். அவர்கள் அதிலிருந்து தவறினால், அவர்களுக்குக் கடுமையான தண்டனையும், தாழ்ந்தவர்களுள் ஒருவராக கருதப்படும் இழிமையும் உண்டாகும்

இன்னா நாற்பது “இன்னா, ஓத்தில்லா பார்ப்பான் உரை” என்கிறது. சிலப்பதிகாரமும் “ வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதி” என்கிறது.

”ஓத்தொடு புணர்ந்த காப்புடை ஒழுக்கின்
.............................................................................................
அந்தணர்”  என்றென்கிறது பெருங்.3.3:83-7


மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகனின் எண்ணங்கள் கீழ்வருமாறு "பார்ப்பான் பிறப்பொழுக்கம்"
குறளின் பொருளை கொள்ளும்போது அது உருவான காலகட்டத்தின் பொதுவான சமூகச்சூழல், அன்றிருந்த அறவியல், குறள் ஒட்டுமொத்தமாக முன்வைக்கும் பார்வை ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் பொருள்கொள்ளவேண்டும்.

குறள் சமணப்பண்பாடு தமிழகத்தில் வேரூன்றிய களப்பிரர் காலகட்டத்தில், ஒரு சமணக் குரவரால், இங்கு அவர்கள் உருவாக்கிய கல்விப்பணிகளின் பொருட்டு எழுதப்பட்ட அறநூல் என்பது என் எண்ணம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஏறத்தாழ எல்லாமே சமண – பௌத்த பின்னணி கொண்டவை. தங்கள் கல்விப்பணிகளின்பொருட்டு இலக்கணநூல்கள், அறநூல்கள் ஆகியவற்றை இந்தியாவெங்கும் சமணர் உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆனால் குறள் சமணத்தை போதிக்கும் நூல் அல்ல. பொதுவான அறத்தையே அது முன்வைக்கிறது. சமணம் இன்று நம்மில் கற்பிதம் செய்வதுபோல வேதமதத்திற்கு எதிரானது அல்ல. மாற்றான பார்வை ஒன்றை முன்வைத்தது, கொள்கையளவில் முரண்பட்டது எனலாம். ஆனால் வைதிகமதத்திற்கும் சமணத்திற்கும் பொதுவான தொன்மங்களும் அறங்களும் தத்துவங்களுமே மிகுதி.

இக்குறள் அந்தணரின் ஒழுக்கம் பற்றியே பேசுகிறது. சங்கப்பாடல்கள் தொட்டு தமிழிலக்கியத்தில் எங்கெல்லாம் அந்தணர் குறிப்பிடப்படுகிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் இரண்டு இயல்புகளைக் கொண்டு அடையாளப்படுத்தப் படுகிறார்கள். ஒன்று அவர்களின் நோன்பு வாழ்க்கை. இரண்டு அவர்களின் மூவேளை எரியோம்பும் கடமை. அந்தப் பார்வையின் நீட்சியே இதில் உள்ளது.

ஆனால் நுட்பமான ஒரு வேறுபாடும் உள்ளது. வைதிகமதத்தைப் பொறுத்தவரை கற்றவேதத்தை மறப்பதே அந்தணம் சென்றடையும் அறுதியான இழிநிலை. குறள் அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம் தன் குடிக்குரிய ஒழுக்கநெறிகளை அவன் கைவிடுவது அதைவிடவும் கீழானது என்கிறது. உடைமையின்மை, கொல்லாநெறி, இன்சொல் என அந்தணருக்கான ஒழுக்கநெறிகள் அன்று வகுக்கப்பட்டிருந்தன. அவையே முதன்மை, வேதமோதுவதோ வேள்வியோ அல்ல என்று குறள் சொல்கிறது. அது சமணத்தின் பார்வையாக இருக்கலாம்

ஜெ

பாடல்களைப் பொருள்கொள்வதில் வாசிப்புச் சுதந்திரத்திற்கு இடமுண்டு. எப்படி? படிமங்களை கற்பனையால் வளர்த்தெடுப்பதில். சொற்களின் வைப்புமுறையை வைத்து பொருள்கொள்வதில், சொற்பொருள் கொள்வதில். இவை மூன்றினூடும் கவிதை முன்வைக்கும் அறிதலும் அனுபவமும் பெருகவேண்டும், சுருங்கலாகாது.

சொற்பொருள் கொள்ளும் நெறி என்ன? அச்சொல்லுக்கு அவ்வண்ணம் பொருள்கொள்ள அந்தக் காலகட்டத்து சொல்முறைமை ஒத்துச்செல்கிறதா என்று பார்க்கவேண்டும். உரிய அகராதிகளில் நிகண்டுக்களில் அச்சொற்பொருளுக்கு ஆதாரமுண்டா என்று பார்க்கவேண்டும். முந்தைய நூல்களில் அச்சொல் அவ்வண்ணம் பயின்று வந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்,

ஆனால் கருத்தியல்சார்ந்து, உள்நோக்குடன், பாடல்களை ஆராய்பவர்கள் அவ்வண்ணம் செய்வதில்லை. உதாரணம் ஞானசம்பந்தரின் திருவுளப்பத்து பாட்டில்  ‘அமண் சமணர் கற்பழிக்கத் திருவுளமே’ என்று வருகிறது. அதை சமகாலப்பொருள்கொண்டு சமணப் பெண்டிரை கற்பழிக்க ஞானசம்பந்தர் ஈசனிடம் வரம்வேண்டினார் என பேசிப்பரப்பி, இன்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கற்பழித்தல் என்பது நவீன நாளிதழ்கள் ரேப் என்பதற்குச் சமானமாக உருவாக்கிய சொல்லாட்சி. தினத்தந்திச் சொல் அது. பழங்காலத்தில் அந்த பொருள் இல்லை. கற்பு என்றால் கல்வி என்றே முதற்பொருள். எழுதாக்கற்பின் நின்நூல் என குறுந்தொகை சொல்வது எழுதாமல் கற்பது என்ற பொருளில்.

சமணர் மந்திரநூல்களில் வல்லவர்கள், அக்கல்வியை வெல்ல ஆயுதமாக சிவனருள் அமையவேண்டுமென ஞானசம்பந்தர் கோருகிறார். வாதுக்குச் செல்ல அனுமதி கோரும் பாடல் அது. சமணர்கள் சபைகளில் பெண்களை கொண்டுவருவதில்லை. ஆண்களை கற்பழிக்கும் வழக்கம் பொதுவாக இல்லை. ஆனால் இந்த அபத்தத்தைப் பேசுபவர்களுக்கு எந்த கூச்சமும் இல்லை.

அந்தக் கூச்சமில்லா பொருள்கோடலின் இன்னொரு தரப்பு இது. பார்ப்பான் என்னும் சொல் பார்ப்பவன் என்னும் பொருளில் குறள் காலகட்டத்து நூல்களில் எதிலும் கையாளப்பட்டதில்லை. ஞானிகள் அவ்வாறு கூறப்பட்ட முன்னுதாரணமே இல்லை. ஞானி,பரமஹம்சர்,அவதூதர், சித்தர் என பல பெயர்கள் உள்ளன. பார்ப்பவர் என்ற பொருளில் எச்சொல் உள்ளது?

ஆங்கிலத்தில் seer என்ற சொல் உள்ளது. அதன் பண்பாட்டுவேர் இருப்பது கிரேக்க மரபில். கிரேக்க மரபில் உச்சகட்ட மத அதிகாரம் கொண்டவர்கள் தெய்வங்களை கண்டு உரையாடி குறிசொல்பவர்கள். அவர்களை clairvoyant, oracle என்றெல்லாம் சொல்கிறார்கள். அதில் ஒரு சொல் seer. அது அங்கிருந்து கிறித்தவ மெய்யியலுக்கு வந்தது.

பின்னாளில் ஆங்கிலேயர் இந்துமெய்யியலை மொழியாக்கம் செய்தபோது இங்கிருந்த ஞானி, அவதூதர், பரமஹம்சர் போன்ற சொற்களுக்கு அவர்களுக்கு இணைச்சொல் இல்லாமையால் seer என்னும் சொல்லை கையாண்டனர். அச்சொல்லுக்கு இந்து மெய்ஞானமரபில் பண்பாட்டுப்பின்புலமே இல்லை.

அச்சொல்லை மீண்டும் தமிழுக்கு மொழியாக்கம் செய்து பார்ப்பவன் என்றாக்கி பார்ப்பான் என மாற்றி இக்குறளுக்கு பொருள்கொண்டிருக்கிறார். அதன் நோக்கம் ஒன்றே. அதாவது மெய்ஞானியாக இருந்தாலும்கூட பிறப்புக்குரிய ஒழுக்கநெறிகளை கடைப்பிடிக்கவேண்டும் என்ற ஆசாரவாதத்தை முன்வைப்பது. அதற்காக மறப்பினும் ஒத்துக்கொள்ளலாகும் என்ற வரியை விட்டுவிடுகிறார். அவதூதர்கள் எதை மறக்காமலிருக்கவேண்டும்?

சுருக்கமாகச் சொன்னால், ரமணராக இருந்தாலும் சந்தியாவந்தனம் செய்தாகவேண்டும் என்று சொல்லவருகிறார். பிராமணச் சடங்குகளை முறையாகச் செய்யாமையால் ராமகிருஷ்ண பரமஹம்சர் கெட்டவர்தான் என்று நிறுவ விரும்புகிறார்.ஊரிடும் சோறு, துணிதரும் குப்பை என இங்கே வாழ்ந்து மறைந்த சித்தர்களும் அவதூதர்களும் நெறிபிழைத்த வீணர்கள் என்கிறார். அதை நம்புகிறவர்கள் அந்த ஆசாரவாதத்திற்குள் செல்லலாம். எனக்கு அவர்கள் ஆயிரம் காதம் அப்பால் நிற்பவர்கள். அவர்களிடம் பேச ஒன்றுமில்லை.

இக்குறள் இல்லறவியலில், ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் வருகிறது. இது மெய்ஞானத்தைப் பேசவில்லை.

ஜெ

பரிமேலழகர் உரை
ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.).

மணக்குடவர் உரை
பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

சாலமன் பாப்பையா உரை
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

No comments:

Post a Comment