Skip to main content

Posts

Showing posts with the label புணர்ச்சிவிதும்பல்

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

  குறள் 1288 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு [காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்] பொருள் இளி-த்தல் - iḷi-   11 v. cf. இளி¹-. [M. iḷi.]tr. 1. To disgrace, condemn; அவமதித்தல் (W.) 2. To laugh, scorn, ridicule; பரிகசித்தல்.(W.)--intr. To grin; to show the teeth, as incringing or in craving servilely; பல்லைக் காட்டுதல்  தக்க -  takka   தகுந்த, adj. part. see under தகு. இளித்தக்க -  இழிவைத் தரக்கூடிய இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் செயினும் - செய்தாலும்  களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல் களித்தார்க்குக் - கள்ளுண்டு தற்காலிகமாகவாது கவலை மறந்து மகிழ்ந்திருந்தார்க்கு கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை. அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை அற்றேல் - அப்படியானால் அற்றே - அப்படியானால் கள்வ - கள்வம் - திருட்டுச்செயல்; கவர்ச...

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

  குறள் 1286 காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை [காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்] பொருள் கால் - ஒருவினையெச்சவிகுதி காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்; பார்த்தல் காணுங்கால் - காணும் பொழுது காணேன் - காணவில்லை  தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு. ஆய - ஆகும் காணாக்கால் - அவர் என்னைப் பிரிந்து நான் அவரை காணாதிருக்கும்போது காணேன்  - காணவில்லை   தவறு  - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு. அல்லவை -  தீயவை; பயனின்மை; மற்றவை ; அல்லாதவற்றை முழுப்பொருள் என் அன்பிற்கு இனிய தலைவனை காணும் பொழுது அவரது தவறுகளை நான் காண்பதில்லை. தவறுகள் இருப்பினும் என் கண்களுக்கு அவை தெரிவதில்லை. ஆனால் அவர் என்னை பிரிந்து சென்றுள்ள பொழுது, அவரை நான் காணாத பொழுது அவரது தவறுகள் தவிர வேறு ஏதும் தெரியவில்லை என்று தனது சிக்கலை கூறுகிறாள் தலைவி.  கூடி இருக்கும் பொழுது அவர் வருங்காலத்தில் பிரிந்து செல்லக்கூடும் என்ற அவரது தவறை அவள் காணவில்லை. அதுவே பிரிந...

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

  குறள் 1287 உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து [காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்] பொருள் உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல் அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல்  உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். புனல் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய்குறுகியகுப்பிகளில்நீர்மப்பொருளைஊற்றஉதவுங்கருவி. பாய்தல் - தாவுதல்; நீர்முதலியனவேகமாய்ச்செல்லுதல்; மேல்நின்றுகுதித்தல்; நீருள்மூழ்குதல்; எதிர்செல்லுதல்; பரவுதல்; வரைந்துபடிதல்; விரைந்தோடுதல்; தாக்குதல்; விரைவுபடுதல்; அகங்கரித்தல்; மடிப்புவிரிதல்; கூத்தாடுதல்; ஓடிப்போதல்; தாக்கிப்பேசுதல்; குத்துதல்; வெட்டுதல்; முட்டுதல். பாய்பவரேபோல் -  பாய்பவரைப்போல; தாவுபவர் போல பொய்த்தல் - பொய்யாதல்; தவறுதல்; பின்வாங்குதல் ; கெடுதல்; பொய்யாய்ப்பேசுதல்; வஞ்சித்தல் அறிந்து -  அறிதல்  -...

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

குறள் 1285 எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து [காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்] பொருள் எழுதுங் - எழுதுதல் - எழுத்துவரைதல்; ஓவியம்வரைதல்; இயற்றுதல்; விதியேற்படுத்துதல்; பாவைமுதலியனஆக்குதல்; அழுந்தப்பதித்தல்; பூசுதல். எழுது - eẕutu   III. v. t. write, pain, draw, வரை; 2. predestine, foreordain (as Brahma by writing on the head); 3. engrave, சித்திரம் வெட்டு; v. i. become indented by pressure. அழுந்திப்பதி. கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு. எழுதுவரிக்கோலம் - மகளிர்ஆகத்துஎழுதுங்கோலம். எழுதுங்கால் - விழியில் அஞ்சனம் (மை) தீட்டும்போத...

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

குறள் 1284 ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு [காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்] பொருள் ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம் ஊடற்கண் - ஊடல் செய்ய நினைத்தேன் செலுத்தல் - செல்¹(லு)-தல்  -> To be effective; to have influence;பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி,115). -> To last, endure, exist; நிலைத்திருத்தல்.செல்லாதவ் விலங்கை வேந்தர்க் கரசென (கம்பரா.இந்திரசித். 56) எண்பொருளவாகச் செலச்சொல்லி -> Communicating your thoughts in language easy to be understood; சொல்ல வேண்டிய சிந்தனைகளை / கற்றவற்றை எளிமையாக மனதில் புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லுதல். மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறி...

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்

குறள் 1283 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண் [காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்] பொருள் பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல். பேணாது - போற்றாமல்  ; மதிக்காமல் பெட்பவே - பெட்ப - peṭpa   adv. பெள்-. Much, exceedingly; மிக. பெட்ப நகுகின்றது (சீவக. 1662).பாதுகாப்பு. பெட்பு - peṭpu   s. desire, lust, ஆசை. செய்யினும் - செய்தாலும் கொண்கனைக் -  கணவன்; நெய்தல்நிலத்தலைவன். காணாது - காணாமல் அமை - அமைதல்   - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அல - ala   same as அல்ல, see under அல்; அமையல - அமையாது கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். முழுப்பொருள் காதலி என்னை விரும்பவேண்டும் போற்றவேண்டும்...

தினைத்துணையும் ஊடாமை வேண்டும்

குறள் 1282 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின் [காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்] பொருள் தினைத் - சிறுதானியவகை; தினைவகை; ஒருபுல்வகை; காண்க:சாமை; தினையளவு. துணையும் - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல் ஊடாமை - மனதளவில் வேற்றுமை / மாறுபாடு இல்லாது (இருத்தல் வேண்டும் ) வேண்டும் - வேண்டும் பனைத் - ஒருமரவகை; ஒருபேரளவு; அனுடநாள்; ஒருமீன்வகை. துணையும் - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்) காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. நிறைய - நிரம்ப வரின் - வரும் முழுப்பொருள் தினை என்பது மிக சிறிய அளவு உள்ள ஒரு சிறுதாணியம் ஆகும். அந்த சிறுஅளவுக்குக்கூட காதலிரடம் மன வேறு...

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

குறள் 1281 உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு [காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்] பொருள் உள்ளக் - உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை. களித்தலும் - களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல். உள்ளக்களிப்பு - மனமகிழ்ச்சி காண - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். மகிழ்தலும் - மகிழ்தல் - அகங்களித்தல்; உணர்வழியஉவகைஎய்துதல்; குமிழியிடுதல்; விரும்புதல்; உண்ணுதல். கள்ளுக்கு - கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை. இல் - இல்லை காமத்திற்கு - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினை முற்றுச் சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல் முழுப்பொருள் என் காதலரை பற்றியும் எங்கள் காதலை பற்றியும், நாங்கள் பு...

கண்ணின் துனித்தே கலங்கினாள்

குறள் 1290 கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்  என்னினும் தான்விதுப் புற்று. [காமத்துப்பால், கற்பியல்,  புணர்ச்சிவிதும்பல்] பொருள் கண்ணின்  - கண்ணின் அளவு சிறிதான துனித்தே  - துனி - வெறுப்பு (ஊடல்); சினம்; புலவிநீட்டம்; பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை. கலங்கினாள்  - கலங்குதல் - நீர் முதலியன குழம்புதல்; மனங்குழம்புதல்; தெளிவின்றாதல், மயங்குதல்; அஞ்சுதல்; துன்புறுதல்; தவறுதல். புல்லுதல்  - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல். என்னினும்  - என்றாலும் தான்  - தான் விதுப்பு  - நடுக்கம்; விரைவு; பரபரப்பு; வேட்கை (Desire, longing). உற்று  - uṟṟu   part. உறு-. A sign of comparison; ஓர் உவமவாசகம் தோளுற்றோர் தெய்வம்(சீவக. 10).   விதுப்புற்று  - விரைந்து வேட்கை தீர்த்துக்கொண்டாள் முழுப்பொருள் தலைவனும் தலைவியும் சில காரணங்களால் பிணக்குக்கொண்டு ஊடலில் தவிக்கின்றனர். தலைவியின் ஊடலோ கண்ணின் அளவு மிக மிக மிக சிறிதா...

மலரினும் மெல்லிது காமம்

குறள் 1289  மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்  செவ்வி தலைப்படு வார். [காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்] பொருள் மலர் -  பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர். இனும் -   இன்னும் மலரினும் - மலரை விட. மெல்லிது - மென்மைவாய்ந்தபொருள்; ஒல்லி. காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை, காதல் ( புணர்ச்சி ). சிலர் - சிலபேர், மிக சிலர் மட்டுமே. அதன் - அதனுடைய, It's   It's   It's   செவ்வை - நேர்மை; மிகுதி; வழிமுதலியவற்றின்செப்பம்; சரியானநிலை செவ்வை - cevvai   n. id. 1. [M. cevva.]Correctness, fitness, accuracy, straightness;நேர்மை. தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி(சிலப். வழக். 68). 2. Abundance; மிகுதி செவ்வையாய்க் கொடுத்தான். 3. Evenness, smoothness வழி முதலியவற்றின் செப்பம் அந்தவழி செவ்வையாகஉள்ளது. 4. Sound condition, as of mind, body,etc.; சரியான நிலை அவனுக்குத் தேகம் செவ்வ...