Skip to main content

Posts

Showing posts with the label குற்றங்கடிதல்

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

குறள் 440 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்] பொருள் காதல - தான் விழைந்தவைகளுள் காதல் - அன்பு; காமவிச்சை; விரகம் , பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல். அறியாமை - அறியாத்தன்மை; மடமை உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல் பின் -  பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு. உய்க்கிற்பின் -  நடத்திக்கொள்பவர்களிடம் ஏதில் - ē til  - s. Strangeness, foreignness, not being one's own (people, &c.), அன்னியம். 2. Vicinity, neighborhood, proximity, nearness, அயல். (probably from ஏது, cause and இல்், neg .) (p.) ஏதில -  எண்ணம் நிறைவேறாது ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர். நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை ; சாத்திர...

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

குறள் 439 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்] பொருள் வியத்தல் - செருக்குறுதல்; அதிசயப்படல்; நன்குமதித்தல்; பாராட்டுதல்; கொடுத்தல்; கடத்தல். வியவற்க -  வியந்து தற்பெருமையில் தருக்கு கொள்ளற்க எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும். தன்னை  -தலைவன்; தமையன்; தமக்கை; தாய். நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடுகூறும்புறத்துறை. நயவற்க - அதேபோல விழைந்து செல்லவேண்டாம் நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம். பயவா - பயக்காத, தாராத, பிறருக்கு பயன் தரக்கூடிய தன்மைய இல்லாத வினை-  தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. முழுப்பொருள் எக்காலத்திலும் எந்...

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

குறள் 438 பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்] பொருள் பற்று   - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை. உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை. என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். இவறன்மை -  கடும்பற்றுள்ளம்; அசட்டை ஆசை எற்றுள்ளும் - எவற்றுள்ளும் எண்ணப்படுவது - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல். ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீட...

செயற்பால செய்யா திவறியான் செல்வம்

குறள் 437 செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும் [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்] பொருள் செயற்பால -  செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு. செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். செய்யாது -  இயற்றாமல் இருத்தல் இவறி - கைவிடாது; ஆசைப்பட்டு, விரும்பி இவறியான்  -   கைவிடாதவர்; ஆசைப்பட்டோர். செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு. உயற்பாலது  - உயர்தல் - uyar-   4 v. intr. [M. uyar.] 1.To rise, as water; to ascend, as a body in theair; to move toward the meridian, as a heavenlybody; மேலெழுதல். வடபுவி தாழ்ந்து தென்பா லுயர்தலும் (கந்தபு. பாயி. 63). 2. To be high, elevated,tall, lofty; உன்னதமாதல். உயர்ந்த மலை 3. Togrow, increase, expand; வளர்தல் நெல்லுயரக்குடியுயரும். 4. To be excellent, exalted, eminent,dignified, superior; மேன்மையுறுதல். உயர்ந்தவர்க்குதவிய வுதவி (கம்பர...

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

குறள் 434 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்] பொருள் குற்றமே - குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு. காக்க - காத்தல், பாதுகாத்தல், தடுத்தல்; காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான். பொருளாக -  பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்...

தினைத்துணையாங் குற்றம் வரினும்

குறள் 433 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்] பொருள் தினைத் - சிறுதானியவகை; தினைவகை; ஒருபுல்வகை; மிகச்சிறிய அளவு துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). யாம் - yām   pron. [K. ām.] We; தன்மைப்பன்மைப் பெயர். (தொல். சொல். 164.) யாம்மியோத்தராந்தம் yāmmiyōttar-āntam, n. yāmyaC. G. குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு வரினும் -வரிதல் - எழுதுதல்; ஓவியந்தீட்டுதல்; பூசுதல்; மூடுதல்; கட்டுதல். வெளிவருதல் - பலராலும்அறியப்படுதல்; பலருக்குங்கிடைக்குமாறுபதிப்பிக்கப்படுதல். பனை - ஒருமரவகை; ஒருபேரளவு; அனுடநாள்; ஒருமீன்வகை. பனைத்துணையாக்  - பனைத்துணை - பனையளவு; பேரளவு. ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொரு...

இவறலும் மாண்பிறந்த மானமும்

குறள் 432 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்] பொருள் இவறலும் - இவறல் - ivaṟal   n. இவறு-. 1. Wish;விருப்பம். யாதுகொ லிவற லென்றான் (இரகு. சீதை 13). 2. Covetousness, avarice; பேராசை இவறலின்றிக் கோத்தொழி னடாத்து மன்றே (சீவக. 2583).3. Miserliness, niggardliness; உலோபம் (தொல்.சொல். 396, உரை ) 4. Forgetfulness; மறதி (பிங்.)   மாண்பு - பெருமை; அழகு; நன்மை; மாட்சிமை. இறந்த - இறந்துபடுகை; சாவு மானமும் - மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு; பற்று; இகழ்ச்சி; வெட்கம்; குற்றம்; வானூர்தி; கோயில்விமானம்; மண்டபம்; கத்தூரி; சவ்வாது; வானம்; ஒருதொழிற்பெயர்விகுதி; ஓர்இடைச்சொல். மாண் - மாட்சிமை; மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர். மாணா - மாட்சிமையற்ற தன்மை மாணார் - மாட்சிமையற்றபகைவர் உவகையும்  - உவகை - மகிழ்ச்சி; களிப்பு; அன்பு; காமம்; இன்பச்சுவை ஏதம் - துன்பம், குற்றம், கேடு. இறைக்கு -...

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

குறள் 431 செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் செருக்கும் - அகந்தை; மகிழ்ச்சி; ஆண்மை; மயக்கம்; செல்வம்; செல்லம். சினமும் - சினம் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை (கடுமை). சிறுமையும் - சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை. இல்லார் - இல்லாதவர் பெருக்கம் - வளர்ச்சி; மிகுதி; செல்வம்; வெள்ளம்; நிறைவு; நீடிப்பு. பெருமித - பெருமிதம் - பேரெல்லை; மேம்பாடு; தருக்கு; உள்ளக்களிப்பு; கல்விமுதலியபெருமைகளில்மேம்பட்டுநிற்கை. நீர்த்து - நீர்  - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. முழுப்பொருள் தான் என்னும் அகந்தை, மயக்கம் ஆகிய செருக்ககளும்; கோபம், கடுமை ஆகிய சினங்களும், கீழ்மை, பிறர் மனத்தை வருத்து...

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை

குறள் 435 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்  வைத்தூறு போலக் கெடும் [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வரும் முன்னர்க் - வருங்காலத்தில் / எதிர்க்காலத்தில் நிகழும் முன் (ஒரு செயலின் விளைவாகவோ அல்லது ஏதேர்ச்சையாகவோ) கா - பாதுகாப்பு, காப்பாற்ற,  காவாதான் - பாதுகாப்பாக இருத்தல் வாழ்க்கை  எரி - வால் நட்சத்திர வகை, நெருப்பு , அக்நி, நரகம் முன்னர் - முன்பாக வைத்தூறு - வைக்கோற் குவை, Straw-stack, வைக்கோற்போர், வைக்கோல் போல - போன்று கெடு - கேடு, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; அழகின்மை. கெடும் - அழியும் முழுப்பொருள் வைக்கோலின் முன் நெருப்பு / தீ இருந்தால் அனலினாலோ, காற்றினாலோ தீ பற்றி வைக்கோல் எரிந்து விடும். இதற்கு வைக்கோலின் மேல் தீ வைக்க வேண்டும் என்றில்லை வைக்கோலின் அருகே தீ இருந்தால் கூட பற்றிக்கொள்ளும். வைக்கோலில் தீ மிக வேகமாக பரவிக்கொள்ளும். அருகே உள்ள மற்ற வைக்கோல்களுக்கும் பரவி விடும். கட்டுப்படுத்த முடியாது (அதற்கு நேரமே இருக்காது)...

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங்

குறள் 436 தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்  என்குற்ற மாகும் இறைக்கு. [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தன் - தன்னுடைய குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு தன்குற்றம் - தன்னுடைய குற்றங்களை, (தனது நாட்டின் / குடும்பத்தின் குற்றங்கள்) நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல் நீக்கிப் - கண்டு உணர்ந்து பின்பு களைந்து சரி செய்து பிறர் - அயலார், அன்னியர் குற்றம்  - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு பிறர்குற்றங் - பிறர் குற்றங்களை காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு. காண்கிற்பின் - பின்பு காண்கின்றவன் நீதி சொல்கின்றவன் என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்...