குறள் 433
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
பொருள்

[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]
தினைத் - சிறுதானியவகை; தினைவகை; ஒருபுல்வகை; மிகச்சிறிய அளவு
துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).
யாம் - yām pron. [K. ām.] We; தன்மைப்பன்மைப் பெயர். (தொல். சொல். 164.)
யாம்மியோத்தராந்தம் yāmmiyōttar-āntam, n. yāmyaC. G.
குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு
வரினும் -வரிதல் - எழுதுதல்; ஓவியந்தீட்டுதல்; பூசுதல்; மூடுதல்; கட்டுதல்.
வெளிவருதல் - பலராலும்அறியப்படுதல்; பலருக்குங்கிடைக்குமாறுபதிப்பிக்கப்படுதல்.
பனை - ஒருமரவகை; ஒருபேரளவு; அனுடநாள்; ஒருமீன்வகை.
பனைத்துணையாக் - பனைத்துணை - பனையளவு; பேரளவு.
ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல்.
கொள்(ளு)-தல் - koḷ- 2 v. [T. konu, K.M. koḷ.] tr. 1. To seize, grasp; கையால் எடுத்துக்கொள்ளுதல் கொண்ட வாளொடும் (சீவக. 430). 2.To receive, as a gift; பெறுதல் நல்லா றெனினுங்கொளறீது (குறள், 222). 3. To buy, purchase;விலைக்கு வாங்குதல் கோதையினுங்கொள்வார் (நைடத.நகரப். 18). 4. To acquire, take possession of, occupy; உரிமையாகக் கொள்ளுதல் விடலையைக் காணவோடி . . . வீதிகொண்டார் (சீவக. 457). 5. Tomarry; விவாகம் செய்தல் தாங்கொண்ட மனையாளை(நாலடி, 3). 6. To abduct, carry off; கவர்தல் மனையாளை மாற்றார்கொள (நாலடி, 3). 7. To contain,hold; தன்னட்கொள்ளுதல். சிதரரிக் கண்கொண்டநீர் (நாலடி, 394). 8. To draw in, gather up; முகத்தல் குணகடல் கொண்டு குடகடன் முற்றி (மதுரைக்.238). 9. To learn; கற்றுக்கொள்ளுதல் கொள்ளுநர்கொள்ள (கல்லா. 11, 21). 10. To consider, think;கருதுதல். யார்க்குங் கொடுத்தியெனக் கொள்கின்றிலம்(இலக். வி 650, உரை). 11. To regard, esteem;நன்குமதித்தல். கொளப்பட்டே மென்றெண்ணி(குறள், 699). 12. To celebrate; கொண்டாடுதல் தண்பதங் கொள்ளு
கொள்வர் - பெறுவர் , கருதுவர்
பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.
நாணுவார் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்
பரிமேலழகர் உரை
பழி நாணுவார் - பழியை அஞ்சுவார், தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர்.
(குற்றம் சாதிப்பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார், பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.).
மணக்குடவர் உரை
தினையளவு குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர் பழிக்கு நாணுவார்.
மு.வரதராசனார் உரை
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை
பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.

முழுப்பொருள்
தினை என்பது ஒரு சிறுதானிய வகை. ஒரு தினையின் அளவு என்பது மிக மிக சிறிதாகும். அப்படிப்பட்ட சிறிய அளவு குற்றம் ஆனாலும் அதனை ஒரு பனைமரத்தின் உயரத்தை போன்ற பெரிய அளவு குற்றமாக கருதுவார்கள் பழிக்கு(குற்றத்திற்கு) அஞ்சுபவர் பழிக்கு வெட்கப்படுபவர். இது தனி நபருக்கும் அரசருக்கும் பொருந்தும். குற்றத்தில் சிறிய குற்றம் பெரிய குற்றம் என ஏதும் இல்லை. சிறிய குற்றம் ஆனாலும் அதனை பெரிய குற்றமாக கருதவேண்டும். ஆதலால் பழிக்கு(குற்றத்திற்கு) அஞ்சி வெட்கப்படுவோர் குற்றம் நடக்காதவண்ண்ம் பார்த்துக்கொள்ளவேண்டும்.
சிறிய குற்றம் என நினைக்க ஆரம்பித்தால் அலட்சியம் வந்துவிடும். சிறு சிறு குற்றங்கள் பெருகி பெரிய குற்றமாக வளர்ந்துவிடும்.

மேலும்: அஷோக் உரை
பழி நாணுவார் - பழியை அஞ்சுவார், தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர்.
(குற்றம் சாதிப்பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார், பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.).
மணக்குடவர் உரை
தினையளவு குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர் பழிக்கு நாணுவார்.
மு.வரதராசனார் உரை
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை
பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.
Thirukkural - Management - Ethical Behavior
Those who are afraid of bad reputations will fear even a millet size fault. They consider a fault of that size to be as big as the size of a palm fruit and keep themselves away from those faults, asserts Kural 433.
To one who would avoid a bad name
A millet of fault is as big as a palm fruit.
No comments:
Post a Comment