குறள் 1150 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர் [காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்] பொருள் தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. வேண்டின் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். நல்குதல் - கொடுத்தல், விரும்புதல், படைத்தல், To show deep love -> தலையளி செய்தல் [தலையளி - ideal love - உத்தம அன்பு], To rejoice -> உவத்தல் நல்குவர் - தலையான அன்பிற்கு பாத்திரமானவர் - விருப்பதிற்கு உரியவர் காதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள். யாம் - தன்மைப் பன்மைப் பெயர் வேண்டும் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். கௌவை - ஒலி; வெளிப்பாடு; பழிச்சொல்; துன்பம்; கள்; எள்ளிளங்காய்; ஆயிலியநாள்; செயல். எடுக்கும் - எடுத்தல் - நிறுத்தலளவு; எடுத்தலோசை; உயர்த்துதல்; சுமத்தல்; தூக்குதல்; நிறுத்தல்; திரட்டுதல்; உரத்துச்சொல்லுதல்; குரலெடுத்துப்பாடுதல்; மேம்படுத்திச்சொல்லுதல்; பாதுகாத்தல்;...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.