கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்

thirukkural meaning விளக்கம் குறள் 1144 கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்
குறள் 1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
கவ்வையால் - கவ்வை - ஒலி; பழிச்சொல்; துன்பம்; கவலை; பொறாமை; கள்; 
செயல்; எள்ளிளங்காய்; ஆயிலியம்.

கவ்வு - kavvu   s. greatness, பெருமை; 2. fork of a branch; 3. grasp of the mouth; 4. eating.

கவ்விது - வளர்ந்தது 

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

இன்றேல் - இல்லை என்றால்

தவ்வு  - கெடுகை; பலகையிலிடும்துளை; பாய்ச்சல்.

தவ் - தவ்வுதல் - tavvu-   5 v. intr. தபு-. 1. Tolessen, decrease, shrink; குறைதல் (அக. நி ) 2.To close the petals, as a flower; குவிதல் தவ்வாதிரவும் பொலிதாமரையின் (கம்பரா. சரபங். 2). 3.To perish, decay, waste away; கெடுதல் 4. Tofail; தவறுதல் எறிந்த வீச்சுத் தவ்விட (கம்பரா. அதிகாயன் 213).  ; tavvu-   v. intr. தாவு-. [K.tavu.] 1. To leap, jump, spring; தாவுதல் தவ்வுபுனல் (திருவாலவா. 30, 32). 2. To tread gently மெல்ல மிதித்தல் தவ்விக்கொண்டெடுத்த வெல்லாம்(இரகு. ஆற்று 19). 3. To boast; to be arrogant;அகங்கரித்தல். அதிகமாகத் தவ்வாதே. 

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

தன்மை குணம்; இயல்பு; நிலைமை; முறை; பெருமை; ஆற்றல்; நன்மை; மெய்ம்மை; தன்னைக்குறிக்குமிடம்; ஒரணி.

இழந்து - இழத்தல் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்

முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் காதலிக்கிறார்கள். அக்காதலை வளர்ப்பது இந்த ஊர் மக்கள் என்கின்றனர் காதலர்கள். ஏனெனில் ஊர் மக்கள் காதலர்களின் காதலைப் பற்றிப் புறத்தில் பேசி பேசி இவர்கள் காதலை வளர்க்கின்றனர். அப்படி இவர்கள் மட்டும் பேசிவளர்க்கவில்லையென்றால் இவர்கள் காதல் காதலின் தன்மையான வளர்தலை இழந்து மெலிந்து சும்பி போயிருக்கும்.

இங்கே நாம் முக்கியமாக நோக்கவேண்டியது காதலின் தன்மையானது வளர்தல் - வளர்ந்துகொண்டே இருத்தல். அது வளர்ந்துக்கொண்டே இருக்கும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”தாதுளர் கானல் தவ்வென் றன்றே” (நற்.319:2)
“வெவ்வெங் கலுழி தவ்வென்க் குடிக்கிய” (குறுந் 356:4)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) காமம் கவ்வையால் கவ்விது - என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று; அது இன்றேல் தன்மை இழந்து தவ்வென்னும் - அவ்வலர் இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும். (அலர்தல்: மேன்மேல் மிகுதல். செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார். இயல்பு: இன்பம் பயத்தல், 'தவ்வென்னும்' என்பது குறிப்பு மொழி: 'நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென றசைஇத் தாழ்துளி மறைப்ப' (நெடுநல்.184-85) என்புழியும் அது.).

மணக்குடவர் உரை
அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம்; அவ்வலரில்லை யாயின் தனது தன்மை யிழந்து பொலிவழியும். செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்.

மு.வரதராசனார் உரை
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

சாலமன் பாப்பையா உரை
ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain