குறள் 1070 கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர் [பொருட்பால், குடியியல், இரவச்சம்] பொருள் கரவு - மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை. கரப்பவர்க்கு - வஞ்சனை செய்பவர்க்கு, களவு செய்பவர்க்கு, பொய் செய்பவர்க்கு யாங்கு - எங்கு; எப்படி; எவ்வாறு; எவ்விடம். ஒளிக்கும் - ஒளித்தல் - மறைத்தல்; மனத்திலடக்குதல்; பதுங்குதல். கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை கொல்(லு)-தல் - kol- 3 v. tr. [K. M. kol.]1. To kill, slay, murder; வதைத்தல் கொன்றன்னவின்னா செயினும் (குறள், 109). 2. To destroy,ruin; அழித்தல் கொன்றான்காண் புரமூன்றும் (திருவாச. 12, 16). 3. To fell, cut down; வெட்டுதல் மரங்கொஃ றச்சர் (சிலப். 5, 29). 4. To reap, asthe heads of grain; கதிரறுத்தல். நெற்கதிரைக்கொன்று களத்திற் குவித்து (தொல். பொ 76, உரை).5. To afflict, tease; துன்பப் படுத்துதல் நின்னலங் காட்டி யெம்மைக் கொன்றாயென (சீவக. 642).6. To neutralize metallic properties ...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.