Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்

குறள் 1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இரந்தும் - இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

உயிர்  - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

வாழ்தல்  - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்

வேண்டின் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

பரபரத்தல் - paraparattal   பரபரப்பு, v. n. hurrying hastening, தீவரித்தல்; 2. feeling a sensation of crawling or tingling, தினவு; 3. rumbling in the intestines; 4. activity, energy, avidity, முயற்சி.

பரந்து - உடனடியாக ; அலைந்து தெரிந்து

கெடுக - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

இயற்றியான் - செய்தவன்

முழுப்பொருள்
குறளாசிரியனின் அறச்சீற்றமாக நெருப்பு எரியும் வரிகள் இவை. ஏனெனில் இறைவனையே சபிக்கிறது.

பிறர் ஒருவரிடம் யாசித்து தான் ஒருவர் உயிர் வாழ வேண்டும் என்ற ஒரு நிலை இவ்வுலகில் இருந்தால் அலைந்து திரிந்து யாசித்தவன் பட்ட கஷ்டத்தை அனுபவித்து அழியட்டும் (கெடட்டும்) இவ்வுலகை படைத்த இறைவன் என்று சபிக்கிறார் திருவள்ளுவர். 

அப்படி என்றால் இவ்வுலகில் எவ்வளவோ பேர் பிச்சை எடுக்கிறார்கள். உலகத்தை படைத்தவனை அழிக்க வேண்டுமா? எனக்கு எவ்வாறு தோன்றுகிறது என்றால் 

1) "இரந்து உயிர் வாழ்தல் வேண்டின்" என்று திருவள்ளுவர் கூறவில்லை. அதற்கு யாசித்து தான் ஒருவன் உயிர்வாழவேண்டுகின்ற நிலை என பொருளாகிவிடும் . சிலரால் ஒரு வேலையும் செய்ய முடியாத உடம்பின் இன்னல்கள் இருக்கலாம், குடும்ப சூழ்நிலைகள், துறவு, பிரம்மச்சர்யம் (உபநயனம் எடுத்த பிராமணர்கள் கிரஹஸ்தம் (அதாவது கல்யாணம் ஆகும் வரை) யாசகம் செய்தே சாப்பிட வேண்டும்)  போன்ற பல காரணங்கள் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் பிச்சை எடுத்து தான் உயிர் வாழ வேண்டும். ஆதலால் இந்த காரணங்களை திருவள்ளுவர் கூறியதாக தெரியவில்லை. 

2)"இரந்தும் உயிர் வாழுதல் வேண்டின்" - ஒருவர் யாசித்தப்  பிறகும் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்றால் இவ்வுலக மக்கள் மனதில் இரக்கம் என்பதே இல்லை என்று அர்த்தம். அப்படிபட்ட இரக்கமற்ற உலகை படைத்த இறைவன் இரக்கமற்ற இவ்வுலகில் அலைந்து தெரிந்து அழியட்டும். என்பதே பொருளாக இருக்க கூடும். இது தனிமனிதனுக்கும் பொருந்தும். இரக்கமற்று இருந்தால் நாமும் அழிவோம். 

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பின்னாளில் பாரதி வெம்பிப் பாடியதை, அவனுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேறுவிதமாக திருவள்ளுவர் பாடியிருப்பது வியக்கத்தக்கது.

இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து, நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று உரமோடு சுட்டிய நக்கீரன் என்னும் தமிழ் புலவரைப் போலவே இறைவனையே சரியான காரணத்துக்காக, வள்ளுவர் சபிக்கவும் செய்தார் என்பதைக் கூறும் குறள்.

இறைவனைச் சாடிய வரிகளை சங்க இலக்கியங்களில் காணலாம். “ஐதே கம்மஇவ் உலகுபடைத் தோகனே” என்கிறது நற்றிணைப் (240:1) பாடல் வரி. “படைத்தோன் மன்றஅப் பணிபி லாளன்”, என்னும் புறநானூற்றுப் (194:5) பாடல் வரியொன்று.

உலகில் மனிதனாகப் பிறந்தவன் தொடர்ந்து உயிர் வாழ வேண்டும்: தனக்கெனச் சம்பாத்தியம் உடையவனாக மானத்தோடு உயிர் வாழத்தக்கவன் மனிதன். வறுமை நிலையில் மானம் இழந்து உயிர் வாழ்தல் கொடுமை. இந்த வறியநிலையை இறைவன் ஒவ்வொருவருக்கும் பிறக்கும் பொழுதே. தீர்மானித்து அனுப்புவதாகச் சிலர் கூறுகின்றனர். இறைவன் இவ்வாறு படைக்கு முன்னரே விதித்து அனுப்புதல் என்பது அறநெறியாகத்  தோன்றவில்லை. இவ்வாறு விதித்துப் பிறப்பித்திருப்பான் என்றால், அந்தக் கடவுளும், தான் செய்த தவற்றைப் புரிந்து கொள்ளும் வகையில், தான் செய்த தவற்றுக்கே கழுவாய் என்ற முறையில் இரந்து திரிவானாக...! எப்பொழுதாவது வறியவர்  துன்பத்தை உணர்ந்து அத்தகைய முறையில் விதித்துப் படைப்பதை நிறுத்துவானாக. இறைவன் என்று அருளுணர்வோடு ஒருவன் இருப்பானானால் மனிதர்க்கு நன்மை செய்பவனாக இருத்தல் வேண்டும்.  தீமை செய்யப் புகுந்தான் என்றால் அவன் தேவையில்லை. உலகத்தையே படைத்தவனுக்கு, மனிதர் விதியை மாற்றக்கூடிய ஆற்றல் இல்லை என்பது எப்படி இருக்க முடியும்? இத்தகைய பல நல்ல கருத்துக்களை உள்ளடக்கியது இக்குறள் என்பதில் ஐயமில்லை. 


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர் வாழ்தலையன்றி, இரந்தும் உயிர் வாழ்தலை வேண்டி விதித்தானாயின்; பரந்து கெடுக - அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் அலமந்து கெடுவானாக. (மக்களுயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தால் கருவொடுங் கலந்தவன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும் ஒரு செய் தொழிலாகக் கற்பித்தானாயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும். இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது.

மு.வரதராசனார் உரை
உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.

சாலமன் பாப்பையா உரை
பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.

அனைத்தையும் விட மேலாக நிற்பவை குறளாசிரியனின் அறச்சீற்றமாக நெருப்பு எரியும் வரிகள்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான்
என்று சீறும் குரல் நீதிநூலாசிரியனுடைய்தோ தத்துவசிந்தனையாளனுடையதோ அல்ல , அது கவிஞனின் குரல்.

English Meaning - As I taught a kid - Rajesh
If a situation arises When a person begs for alms and is not helped by the people in this society, then it let this world, the society's ruler/king/government, and its creator/God cease to exist. Because if a society cannot help a person then it means that the society doesn't have any compassion to help others. Such a compassionless society need not exist

Questions that I ask to the kid
When should the world's creator or God cease to exist?
Why should the world cease to exist if a person is not helped? (compassionless society need not exist)

2 comments:

  1. Sir enaku ithu full a book ah kedaikuma. Contact no 8825598005

    ReplyDelete
  2. Sorry Sir. This Thirukkural blog is not going to published as a book. It is only a blog 1) for my personal study/analysis/revision and 2) for everyone to read.

    ReplyDelete