குறள் 1068
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்
முழுப்பொருள்
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]
பொருள்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.
ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து.
இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.
தோணி - ஓடம்; மிதவை; மரக்கலம்; நீர்; நீரத்தொட்டி; சேறு; மதிலுறுப்பு; அம்பு; இரேவதிநட்சத்திரம்; சிறுவழுதுணங்காய்.
கரவு - மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை.
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.
பார் - பரப்பு; தேரின்பரப்பு; வண்டியின்நெடுஞ்சட்டம்; பூமி; நிலம்என்னும்பூதம்; நாடு; வன்னிலம்; பாறை; தடை; உரோகிணிநாள்; பருமை; வரம்பு; முத்துவிளையும்திட்டு; மறையோன்; புத்தன்; பாத்திபலகொண்டபகுதி; அடுக்கு; தடவை.
தாக்கப் - தாக்குதல் - எதிர்த்தல்; மோதுதல்; முட்டுதல்; பாய்தல்; தீண்டுதல்; அடித்தல்; வெட்டுதல்; பற்றியிருத்தல்; எண்கூட்டிப்பெருக்கல்; குடித்தல்; சரிக்கட்டுதல்; உறைத்தல்; கடுமையாதல்; பழிவாங்குதல்; தலையிட்டுக்கொள்ளுதல்; பலித்தல்; பெருகுதல்; பாரமாதல்; நெளித்துப்போதல்.
பக்கு - பிளவு; கவர்படுகை(double dealing, duplicity); பை; மரப்பட்டை; புண்ணின்அசறு; பற்பற்று; பொருக்கு
விடும் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.
முழுப்பொருள்
வறுமையில் யாசித்தல் என்கிற காவல் இல்லாத தோணி மறைத்தில் என்னும் கடினமான வன்னிலத்தில் சென்று மோதி பிளந்துவிடும்.
யாசிப்பதை என்பது ஒரு வலிமையான செயல் அல்ல. ஆனால் வறுமையில் பாதுகாப்பு ஏது? ஏதுமில்லை. ஆனால் வறுமையை / யாசிப்பதை மறைத்தால் அது வலுவில்லாத தோணி கடினமான பாறையை மோதி பிளப்பதுப்போல பிளந்துவிடும்.
மேலும்: அஷோக் உரை
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி - இவ்வறுமை என்னும் கடலை இதனால் கடத்தும் என்று கருதி ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமமற்ற தோணி; கரவு என்னும் பார் தாக்கப்பக்குவிடும் - அதன்கண் ஓடுங்கால் கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின் பிளந்துபோம். (முயற்சியால் கடப்பதனை இரவால் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பு இல் தோணி' என்றார். ஏமாப்பு இன்மை தோணி மேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்றது அன்மையானும் நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம். இஃது அவயவ உருவகம்.).
மணக்குடவர் உரை
ஒருவன் வறுமையாகிய கடலை நீந்திக் கடக்க அமைத்துக் கொண்ட இரத்தலாகிய அரணில்லாத தோணி, இரக்கப்பட்டார் மாட்டுக் கரத்தலாகிய கல்லோடே தாக்க இறந்துவிடும். இஃது நல்குரவு தீராமைக்குக் காரணங் கூறிற்று.
மு.வரதராசனார் உரை
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.
சாலமன் பாப்பையா உரை
வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.
No comments:
Post a Comment