குறள் 310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை [அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல் இறந்தார் - மிகுந்தோர் (சினத்தில் என்று சொல்லாமல் உணர்த்தப்படுகிறது) இறந்தார் - செத்தவர் அனையர் - They are like. அன்னர்--அன்னார். Such persons சினத்தைத் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல். துறந்தார் - துறந்தவர்கள் துறந்தார் - துறவினர்கள் துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்) முழுப்பொருள் அளவுக்கு அதிகமான சினத்தை கொண்டவர் என்றால் அவர் உயிரோடு இருந்தாலும் அவர் இறந்தவருக்கே ஒப்பாவார். இறந்த ஒரு உடல் பிணம் எனப்படும். பிணம் துர்நாற்றம் வீசும். கிருமிகளைதந்து அவ்விடத்தை அசுத்தமாக்கும். அதனால் அருகில் இரு...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.