செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

குறள் 516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்
[பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
செயல் தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செய்வானை - செயலை புரிபவன் / செய்பவன்

நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு.

நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு.

நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்

காலத்தோடு - பொழுதுடன் ; தக்க காலத்தில்

எய்த - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்

உணர்ந்து - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
ஒரு செயலை செவ்வென செய்ய யாரிடம் கொடுத்து செய்ய வேண்டும் ?
அதற்கு கீழ்க்காணுபவற்றை பின்பற்ற வேண்டும்

1) அச்செயலை செய்யபோகிறவரின் தகுதிகளை ஆராயவேண்டும். ஒவ்வொரு செயலுக்கு ஒவ்வொரு விதமான தகுதிகள் தேவைப்படும். ஆதலால் அத்தகுதிகள் உண்டா என்று அவரிடம் பார்க்க வேண்டும்.

2) அச்செயலின் தன்மை அதனை புரிய அதுகேட்கும் தகுதிகளை ஆராய வேண்டும். அவை அந்தச் செயலை செய்வோரிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அச்செயலை செய்வதற்குத் தேவையான அனுபவம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

3) ஒரு செயலை ஆற்றும் பொழுது அதனை செய்யக்கூடிய ஆற்றல் காலத்தையும் பொருத்து இருக்கும். உதாரணமாக விரைவாக செய்து முடிக்க வேண்டிய பணிகள் செய்ய ஒரு சில தகுதியும் அனுபவமும் உய்த்துணரும் திறன்(thought process) தேவைப்படும். அது செய்வோர்க்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதுவே அகழ்வாராய்ச்சி போன்ற பணிகளுக்கு பொறுமையும் விவேகமும் அவசியம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செய்வானை நாடி - முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி - பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து, காலத்தொடு எய்த உணர்ந்து செயல் - பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க.
(செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.).

மணக்குடவர் உரை
வினை செய்வானையும் ஆராய்ந்து அவ்வினையினது இயல்பையும் ஆராய்ந்து அதுமுடியுங் காலத்தோடே பொருந்த அறிந்து, பின்பு அவ்வினை அவன் செய்வானாக அமைக்க வேண்டும்.

மு.வரதராசனார் உரை
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.

Thirukkural - Management - Delegation
In addition to the suggestions provided in Kural 517, Kural 516 provides three other factors that influence the effectiveness of delegation. They are: the person, the task, and the time.

Weigh well the agent, the task and the tier
Before you act.

This Kural advises us to assess three things before assigning a task. One is the competence of a person to complete the task to be assigned. Competence includes qualities, skills, experience, exposure, and expertise to undertake a task. Two is the complexity of the task. Complexity includes expectations, quality, and challenges in the process of doing. And three is the right time to do the task. Delegate the task after assessing all these three so that the direct report will complete the task effectively. This practice is indeed truly a scientific way of delegating  tasks to others.

English Meaning - As I taught a kid - Rajesh
Who should be chosen or recruited to successfully execute a job? 

A person has to be recruited based on following qualities 1) A person's qualifications and experience needs to be analyzed. 
2) Match of of qualification and experience for the role and responsibilities of the job to be done
3) The timing and duration of the job also need to be considered w.r.t the person's qualification and experience because certain jobs need to be done in firefighting mode in less time whereas some jobs like excavation needs patience and wisdom. Hence, the person needs to realize the timing and time's value of the jobs

Questions that I ask to the kid
How should I give a job to be a person?

No comments:

Post a Comment