குறள் 752 இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. [பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை] பொருள் இல்லாரை - பொருள் இல்லாதவர் எல்லாரும் - எல்லோரும், எல்லா மக்களும் எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல். எள்ளுவர் - இகழ்வார், கீழே தள்ளுவார்கள் செல்வரை - பொருட்செல்வம் உள்ளவரை எல்லாரும் - எல்லோரும், எல்லா மக்களும் செய்வர் - செய்வார்கள் சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு. சிறப்புச்செய்தல் - ஒப்பனைசெய்தல்; போற்றுதல்; விழாக்கொண்டாடுதல். பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. முழுப்பொருள் இக்குறளுக்கு எல்லா உரைகளும் சொல்லும் பொருள் பொருள்/பணம்/செல்வம் இல்லா...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.