குறள் 741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
[பொருட்பால், அரணியல், அரண்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
ஆற்று - ஆற்றுதல் - āṟṟu- 5 v. intr. 1. To becomestrong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. Tobe sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல் (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள்,
ஆற்றுபவர்க்கும் - வலிமையடைபவர்களுக்கும்,
அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
அஞ்சித் - அஞ்சித்து - பயப்படுதல்
தற் -தன்னை
போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்
போற்றுபவர்க்கும் -
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
முழுப்பொருள்
தன்னுடைய நாட்டை, தன்னுடைய படைகளை வலிமையாக வளர்த்துக்கொண்டு, பிற நாடுகள் மீது போர் தொடுக்கும் போது அரண் என்னும் பாதுகாப்பு கோட்டை நாட்டிற்கு ஒரு கவசமாய் அமையும். குறிப்பாக திடீர் தாக்குதல்களின் போது ஒரு கவசமாய் அமையும். அதே போல பிற நாடுகள் தன் நாட்டின் மீது போர் தொடுத்தால், அவர்களை நாட்டின் எல்லையிலேயே தடுக்க ஒரு நல்ல தற்காப்பாய் அமையும். அவர்கள் உள்ளே வந்து நாசம் செய்து நாட்டின் வளங்களை அழிக்கும் முன்பே எல்லையிலேயே அவர்களை தடுப்பது நல்லது. ஆதலால் சிறந்த ஒரு அரண் நாட்டிற்கு இன்றியமையாதது.
தன்னுடைய நாட்டை, தன்னுடைய படைகளை வலிமையாக வளர்த்துக்கொண்டு, பிற நாடுகள் மீது போர் தொடுக்கும் போது அரண் என்னும் பாதுகாப்பு கோட்டை நாட்டிற்கு ஒரு கவசமாய் அமையும். குறிப்பாக திடீர் தாக்குதல்களின் போது ஒரு கவசமாய் அமையும். அதே போல பிற நாடுகள் தன் நாட்டின் மீது போர் தொடுத்தால், அவர்களை நாட்டின் எல்லையிலேயே தடுக்க ஒரு நல்ல தற்காப்பாய் அமையும். அவர்கள் உள்ளே வந்து நாசம் செய்து நாட்டின் வளங்களை அழிக்கும் முன்பே எல்லையிலேயே அவர்களை தடுப்பது நல்லது. ஆதலால் சிறந்த ஒரு அரண் நாட்டிற்கு இன்றியமையாதது.
திரிகடுகம், வேந்தர்களுக்கு தேவையான அங்கமாக அரணைக்கூறுகிறது. “...............பலர் தொகினும்
எத்துணையும் அஞ்சா எயில் அரணும் ….
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு” (திரி.100)
புறநானூற்றுப் பாடலொன்று, “பாடல் சான்ற விறல் வேந்தனும்மே வெப்பு உடைய அரண் கடந்து துப்பு உறுவர் புறம் பெற்றிசினே” (புறம். 11) என்று பிறநாட்டின்மீது படையெடுத்துச் சென்று பகைவரது அரணை அழித்து வென்ற செய்தியைக் கூறுகிறது. மற்றொரு புறநானூற்றுப் பாடல், “ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி…” (புறம் 92) என்று நெடுமான் அஞ்சியின் வீரத்தைச் சொல்லுங்கால் கூறுகிறது. “நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,ஆங்கு இனிதிருந்த வேந்தனொடு…..” (புறம். 36) என்று பிரிதொரு புறப்பாடல் பாடுகிறது. சங்க இலக்கியங்களில் அரண் என்பதன் சிறப்பைப் பாடும் பாடல்கள் நிறையவே உள்ளன.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
[இனி , அந்நாட்டிற்கு உறுப்பாய் அடங்குமாயினும், பகைவரால் தொலைவு வந்துழி , அது தனக்கும் அரசன்றனக்கும் ஏமமாதற் சிறப்புப் பற்றிப் பிறிதோர் அங்கமாக ஓதப்பட்ட அரண் இவ்வதிகாரத்தால் கூறுகின்றார்.]
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் - மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் சிறந்தது; அஞ்சித்தன் போற்றுபவர்க்கும் அரண் பொருள் - அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது; (பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறனொருவன் வெளவாமல் வைத்துச் செல்ல வேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தார் போன்று ஏமங்காணாது இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் போற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான், அரணினது சிறப்புக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
வலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது; பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவதாம்; ஆதலால் அதனைச் செய்யவேண்டும்.
மு.வரதராசனார் உரை
(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா உரை
பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.English Meaning - As I taught a kid - Rajesh
A fortress is vital for those
1) on the offensive - i.e., when the country's well armed and well prepared military goes on war with other countries, fortress serves as a protection.
2) on the defensive to protect themselves - i.e., when the enemies attack the country without notice, fortress helps to stop the enemies at the fortress itself so that a) enemies don't spoil our resources and people and b) it gives an opportunity for the soldiers in the fortress to fight with the enemies and save the country.
Hence, a fortress is inevitable.
Questions that I ask to the kid
Is fortress vital? Why?
In today's times, is fortress inevitable? Why?
No comments:
Post a Comment