குறள் 766 மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு [பொருட்பால், படையில், படைமாட்சி] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மறம் - வீரம்,வலிமை; வெற்றி; போர்; மானம் - கௌரவம், பெருமை, கற்பு, வானம்,பெருந்தன்மை, மதிப்புடைமை, அன்பு மாண்ட - மாண்(ணு)-தல் - மாட்சிமைப்படுதல், மிகுதல், நன்றாதல், வழிச் செலவு - படைகள் செல்லும் பொழுது வழி நெடுக்க ஆகும் செலவு தேற்றம் - தெளிவு; மனங்கலங்காமை; உறுதி; ஆறுதல்; செழிப்பு; சூளுறவு. என நான்கே - என்ற நான்கும் ஏமம் - வலிமை, பொன் , காவல் , இன்பம் படைக்கு - போர் புரிய (ப்போகு)ம் படைகளுக்கு முழுப்பொருள் ஒரு சேனைக்கு எது வலிமை என்று கூறுகிறார் திருவள்ளுவார். அவர் நான்கு குணங்களை படைகளின் வலிமைக்கு தேவையானதாக கூறுகிறார் 1) மறம் - ஒரு படைக்கும் வீரம் மிக அவசியமான ஒன்று. போர் குணம் மிக அவசியம். அஞ்சா நெஞ்சம் வேண்டும் 2) மானம் - படைகளுக்கு என்று ஒரு மதிப்பு வேண்டும். அவர்களின் தொழில் மக்களால் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் செய்வது நாட்டின் ப...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.