Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

Thursday, April 3, 2014

வேலொடு நின்றான் இடுவென்

குறள் 552
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் 
கோலொடு நின்றான் இரவு
[பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை]

பொருள்
வேல்நுனிக்கூர்மையுடையஆயுதவகை; திரிசூலம்; ஆயுதப்பொது; ஆயுதவகை; முருகன்வேல்; வெல்லுகை; பகை; மரவகை; வெள்வேல்; உடை; மூங்கில்.

வேலொடு - வேல் உடன்

நில்லுதல் -nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

நின்று எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் படவரும் ஒர்இடைச்சொல்.

நின்றான் - நிற்கின்றான்

வேலொடு நின்றான் - கூர்மையான ஆயுதம்  நின்று 

இடு - ṭu   IV. v. t. put, deposit, வை; 2. give, ஈ; 3. put on as ornaments, தரி; 4. designate, விதி; 5. throw, எறி; 6. distribute, பரிமாறு; 7. pour. shower சொரி; 8. lay, as an egg, முட்டையிடு; 9. as an expletive it is joined to the adv. part. of other words as செய்திட்டான், he has done it entirely. In the 3 conjugations it is joined to the roots as, பேசிட்டேன், I spoke, compound verbs. as பின்னிடு, பங்கிடு, கூப்பிடு, சத்தமிடு, சாப்பிடு, etc. see in their places.

இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை.

என்று - என்று

இடுவென் றது - கொடு என்றது 

போலும் - pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.)

கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.

கோலொடு - செங்கோல் (மன்னன் கையில் உள்ள) கொண்டு 

நில்லுதல் -nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

நின்று எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் படவரும் ஒர்இடைச்சொல்.

நின்றான் - நிற்கின்றான்

இரவு - இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

முழுப்பொருள்
செங்கோல் கொண்டு ஆட்சி புரியும் மன்னன், மக்களை சரியாக புரிந்து கொள்ளாமல், அவர்கள் வருமானத்தை அறிந்து கொள்ளாமல், அதிகாரத்தை பயன்படுத்தி கூடுதல் வரி அல்லது வேறு பொருள் கேட்டு நிற்பது, வழிப்பறி கொள்ளைக்காரன், வேல் போன்ற ஆயுதங்களை கொண்டு மக்களிடம் பணம் பறிப்பதற்கு சமமாகும் எனக் கூறுகிறார் வள்ளுவர்.

மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரி, மற்றும் பிற வருமானங்கள் (அரசு சேவைகளுக்கு), அரசாங்கத்தை வழி நடத்த இன்றி அமையாதது ஆகும். ஆனால் அது மக்களின் சுமை அறிந்து, அவர்களின் கொடுக்கும் தகுதி அறிந்து, அளவோடு இருக்க வேண்டும். மனம் போன போக்கில் லாபத்தை கணக்கில் கொண்டு, மக்களின் மேல் திணிக்கப்படும் வரியோ, அல்லது வேறு வகையிலான பொருள் கோருதலோ, வழிப்பறிக்கு சமமாகும் .

உதாரணமாக, இரு வருடங்களுக்கு முன் ஒரே சமயத்தில் மக்களின் கூடுதல் சுமை அறியாமல், தமிழக அரசால் விலை ஏற்றப்பட்ட பால், பேருந்து, மின்சார கட்டணம் ஆகியவற்றை கூறலாம்.

அது போக, அரசே வியாபாரியாக, லாபம் கருதி, மதுவை விற்கும் அவலத்தையும் கூறலாம்.

நன்றி: tamilmurasuaustralia.com

"இதையே சற்று வேறுவகையாகக் கற்பனை செய்கிறார் பிசிராந்தையார். நெல் விளைந்து செழித்துக் கிடக்கும் ஒரு வயல். அதில் கதிரறுத்து நெல்மணி பிரித்து அரிசியாக்கிப் பின் சோற்றுக் கவளமாக்கி யானைக்கு உண்ணத் தந்தால். ஒரு துண்டு நிலத்தில் விளையும் அரிசியும் கூட அந்த யானைக்குப் பலநாள் உணவாகும். அப்படிச் செய்யாமல் அந்த யானையையே வயலுக்குள் சென்று பயிரை மேயுமாறு விட்டு விட்டால் நூறு நூறு ‘செறு’[ஏக்கர் போல அந்தக் காலத்துக் கணக்கு] அளவு கொண்ட நிலமாக இருந்தாலும் அதன் வாய்க்குள் செல்லும் நெல்லை விட அதன் கால் பட்டுக் கசங்கும் கதிர்களே மிகுதியாக இருக்கும். இந்த எடுத்துக் காட்டைச் சொல்லும் புலவர் பிறகு ஒப்பீட்டுக்கு வருகிறார்.

அறிவுத் தெளிவு வாய்ந்த அரசன் தன் குடிமக்களின் வாழ்க்கை நிலை, தகுதிப்பாடு, பொருளாதார நிலை ஆகியவற்றை எடை போட்டுப் பார்த்து அவரவர் திறனுக்கு ஏற்றபடி நெறிமுறையோடு வரி கொண்டால் கோடிக் கணக்கில் பொருளை ஈட்டி விட முடியும். நாடும் வளம் கொழிக்கும் திருநாடாகும். மாறாக அறிவுக் குறைபாட்டால் அவசர கதியில் எந்தத் தர வரிசையும் பிரிக்க அறியாத அமைச்சர்களின் துணை கொண்டு. வரித் திணிப்புச் செய்து - சிறிதும் இரக்கமின்றித் தன் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்ய அவன் முற்பட்டால். அந்த நாடு ‘’யானை புக்க புலம்’’ போல. அவனுக்கும் பயன் தராமல், மக்களும் பயன் கொள்ள வழியில்லாமல் சீர்கெட்டுச் சிதையும் என்று தன் உவமையைக் கொண்டு வந்து அரசின் நெறிமுறைகளோடு ஒருங்கிணைக்கிறார் பிசிராந்தையார்.

"காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப் புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவனாகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே’’

இக்குறளுக்கு ஒப்பான பிசிராந்தையார் பாடல் 

மேலும்: அஷோக் உரை

“அன்றாட நெறியின்மைகளினூடாக இயங்குவதே அரசு என்று என் அன்னை சொல்வதுண்டு. அதை காணும் கண்கொண்ட அரசன் கோல்கொண்டு அரியணை அமர முடியாது. தானறிந்த சிறு வட்டத்திற்குள் நெறிநின்று ஆட்சிபுரப்பதாகவே அவன் எண்ணிக்கொள்ளவேண்டும். அது ஒன்றே வழி…” என்றாள். “போர்நிகுதிக்கு ஆணையிடப்பட்டதுமே கொள்ளை தொடங்கிவிட்டது. வேலோடு நின்றான் இடு என்பதும் கோலோடு நின்றவன் கொடு என்பதும் நிகரே.”

“நகரின் செல்வத்தில் பெரும்பகுதி வேல்முனையில் கொள்ளப்பட்டுவிட்டது. அவற்றில் பெரும்பகுதி இந்நகரிலேயே எங்கெங்கோ புதைக்கப்பட்டிருக்கும். போருக்குப் பின் திரும்பிவந்து வாழ்வதற்கு அவை தேவை என வீரர்கள் எண்ணியிருக்கலாம். போருக்குப் பின் திரும்பி வருவோம் என்னும் நம்பிக்கை இல்லாது படையில் சென்ற எவரும் இருக்க முடியாது. அச்செல்வம் இந்நகருக்கு அடியில் கூறப்படாத சொல் என இனி பல நூறாண்டுகள் இருக்கும். உணவில்லாவிட்டாலென்ன, நாமனைவரும் செல்வத்தின் மேல் அல்லவா நடமாடிக்கொண்டிருக்கிறோம்.”

கனகர் எண்ணியிராதபடி சினம்கொண்டார். அவர் விழிகளில் அதைப் பார்த்த அவள் “அவர்களும் எதுவும் செய்யமுடியாதுதான்…” என்றாள். கனகர் “எவரும் எதுவும் செய்யமுடியாது. அவர்களுக்கு ஆணையிட்டவர்களுக்கும் வேறுவழியில்லை. இத்தகைய போர்நகர்வுக்கு எல்லையில்லாத செல்வம் தேவையாகிறது… அஸ்தினபுரியே அத்தனை படைகளுக்கும் செலவிட வேண்டியிருந்தது” என்றார். “எவரையும் குறைசொல்ல முடியாது… அவரவர் ஊழ்நெறிப்படி இயங்கினர்” என்ற ராகினி 

ஒப்புமை
“குடிபுர வரிக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன்” (புறநா 75:4-5)

பரிமேலழகர் உரை
வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத்தனியே வேல் கொண்டு நின்ற கள்வன், இடு என்றது போலும் - ஆறுசெல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடுஒக்கும், கோலொடு நின்றான் இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்றஅரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல். ('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால்இறைப்பொருள் அன்மையும் பெற்றாம், தாராக்கால்ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின் இரவாற் கோடலும் கொடுங்கோன்மைஆயிற்று,இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையதுகுற்றம் கூறப்பட்டது.)
   
மணக்குடவர் உரை: 
தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென்றல்போலும்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல். கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு. 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கோலொடு நின்றான் இரவு - கொலைவரைத் தண்டிக்கும் அதிகாரத்தைத் தாங்கிய ஆட்சியொடு கூடிய அரசன் குடிகளிடம் பொருள் வேண்டுதல் ; வேலொடு நின்றான் இடு என்றது போலும் - கொல்லும் வேலை ஏந்திநின்ற வழிப்பறிக்கள்வன் வழிச்செல்வானை நோக்கி உன்கைப்பொருளைக் கீழே வை என்று சொல்வதனோ டொக்கும்.

அரசன் குடிகளிடம் அச்சுறுத்திக் கேளாவிடினும் ; குடிகள் கொடாவிடின் தப்பாது தண்டிக்கப்படுவர் . என்னும் குறிப்பிருத்தலால் , அவன் இரப்பதும் வழிப்பறிக்கள்வன் ஏவல் போன்றதே யென்றார் . 'வேலொடு நின்றான்' என்பதனால் வழிப்பறிக்கள்வன் தனியன் என்பதும் , 'இடு' என்னும் ஏவலொருமையால் வழிச்சொல்வோன் ஒன்றியென்பதும் , 'இரவு' என்றதனால் கொடுங்கோல் அரசன் இரப்பது குடிகள் முறைப்படி செலுத்தவேண்டிய புரவுவரியன்றென்பதும் பெறப்படும்.

மு.வ உரை
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.

3 comments:

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...