மூதுரை - 01
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
பொருள்
நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.
ஒருவர்க்குச் - ஒருவர்
செய்தக்கால் - செய்தால் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்
அந்நன்றி - அந்த நன்றி, உதவி
என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.
தருங்கோல் - தருதலால் - தருதல் - trutl v. noun. Giving, &c. See தா, v., கொடை
என - என்று
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.
வேண்டா - விரும்பாத
நின்று - எப்பொழுதும்; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்படவரும்ஒர்இடைச்சொல்.
தளரா ; niṉṟu see under நில்; 2. an expletive, அசைச்சொல்.
வளர்- வளர்தல் -பெரிதாதல்; மிகுதல்; நீளுதல்; களித்தல்; உறங்குதல்; தங்குதல்.
தெங்கு - தென்னைமரம்; தித்திப்பு; போர்ச்சேவலின்தன்மைகுறிக்கும்குழூஉக்குறியுள்ஒன்று; ஏழுதீவுகளுள்ஒன்று.
தாள் - கால்; மரம்முதலியவற்றின்அடிப்பகுதி; பூமுதலியவற்றின்காம்பு; வைக்கோல்; முயற்சி; தாழ்ப்பாள்; படி; திறவுகோல்; ஒற்றைக்காகிதம்; சட்டையின்கயிறு; விளக்குத்தண்டு; விற்குதை; ஆதி; கடையாணி; வால்மீன்; சிறப்பு; கொய்யாக்கட்டை; தாடை; கண்டம்.
உண்ட - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.
நீரைத்- நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.
தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.
தலையாலே - தலையினால்
தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.
தருத லால் - தருதல் - கொடை, v. noun. Giving, &c. See தா, v.
முழுப்பொருள்
ஒருவருக்கு உதவி செய்த உடன் பதிலுக்கு அவர் எப்பொழுது நமக்கு உதவி செய்வார் என்று நினைக்க வேண்டாம் என்று ஔவையார் கூறுகிறார். ஏனெனில் பல வருடங்கள் நின்று நிதானமாக வளரும் உயரமான தென்னைமரமானது தன் கால் அடியில் இருக்கும் நிலத்தில் இருந்து நீரைப்பருகுகிறது. ஆனால் அது இன்சுவைக்கொண்ட இளநீராக பல வருடங்கள் கழித்தே மற்றவர்களுக்கு பயனதருகிறது. அத்தனை வருடங்களில் தென்னையின் பயனாக (நிலத்திற்கு) ஒன்றுமில்லை. தென்னைமரம் அதிக நிழலைக் கூட நிலத்திற்கு கொடுக்காது. மேலும், இந்த இளநீரானது நிலத்திற்கு பயனாகவும் அமையவில்லை. அது வேறு ஒருவருக்கு பயனாக சென்று சேர்கிறது.
ஆதலால், நாம் ஒருவருக்கு உதவி செய்தால் அவர் நமக்கு எப்போது உதவி செய்வார் என்று எதிர்ப்பார்க்க கூடாது. வளர்தென்னைமரம் போன்று அவரும் வேறு ஒருவர்க்கு சில ஆண்டுகள் கழித்து உதவிப்புரிவார்.
மேலும் நமக்கும் பலர் இவ்வுலகில் உதவிகளை செய்து இருப்பர். அவர்கள் எல்லோருக்கும் நாம் உதவிசெய்து விட முடியாது. அப்படியெல்லாம் கணக்கை நேர் செய்வதுவிடவும் முடியாது. ஆதலால் நன்றியுடனும் பிறருக்கு உதவி செய்வது நமது கடமை என்று நினைந்து எதிர்ப்பார்ப்பில்லாமல் பிறருக்கு உதவி செய்தல் வேண்டும்.
உதாரணம்: இம்மூதுரைப் படித்த உடன் எனக்கு தேவர் மகன் படத்தில் வரும் வசனம் ஞாபகத்துக்கு வருகிறது. ”விதை விதைச்ச உடனே பழம் சாப்பிடனும்னு நினைக்க முடியுமோ? இன்னிக்கி நான் விதைக்குறேன், நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ. அப்புறம் உன் பையன் சாப்புடுவான். அதுக்கு அப்புறன் அவன் பையன் சாப்புடுவான். அதெல்லான் இருந்து பாக்க நான் இருக்க மாட்டேன். ஆனா விதை நான் போட்டாது. இதெல்லான் என்ன பெருமையா? கடமை. ஒவ்வொருத்தவனோட கடமை”