DPT – Project SKY
நான் திருக்குறளை 2013 இல் கற்கத் துவங்கிய பொழுது, பல நூற்றாண்டுகளாக உள்ள ஒரு நூலில் கண்டிப்பாக நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது (பள்ளிக்கல்வியில் உள்ள மனப்பாட பகுதியைத் தாண்டி அப்போது நான் புரட்டி படித்து பார்த்த வரை), ஆதலால், ஏன் அதை ஆழமாய் கற்று உள்வாங்க கூடாது என்று தான் நினைத்தேன்.
பல ஆண்டுகளாக அதை தொடர்ந்து கற்று வந்தேன் செய்தேன். இந்த இன்டர்நெட் உலகத்தில் பலரின் பொழிப்புரைகளை துணைகொண்டுள்ளேன். தெய்வாதீனமாக அப்போழுது அசோக் சுப்ரமணியன் அவர்களின் அவனின் பக்கங்கள் மூலம் எனக்கு குறள் கற்க ஒரு நல்ல process கிடைத்தது. துவங்கிய ஒரு 6 மாதத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் மனப்பாடம் கட்டுரையை வாசித்தேன். பின்பு அவருடைய குறளினிது உரைகள் மிகவும் பயணுள்ள வழிக்காட்டியாக அமைந்தன. 2020 இல் எனது முதல் நிலை கற்றல் முடிந்தது. ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். திருக்குறள் வாழ்நாள் எல்லாம் உடன் வரும் ஒரு செவ்வியல் நூல். மற்ற நூல்களை வாசிக்கும் பொழுதும் கற்கும் பொழுது குறளை வைத்துக்கொண்டால் சிறப்பு என்றார். கி.வா.ஜகந்நாதன் அவர்களின் திருக்குறள் ஆராய்ச்சி பதிப்பில் இருந்து ஒப்புமைகளை பெற்றுள்ளேன்.
முதல் நிலை கற்றல் முடிந்தபின்பு எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னதுபோல (குறள் - கடிதம்)குறளை ஒரு வாழ்நாள் முழுதும் உடன் வரும் செவ்வியல் ஆக்கமாகவே கொண்டுள்ளேன். ஏனெனில் முதல் நிலை முடித்தபோது குறளின் பரப்பும் ஆழமும் தெளிவாய் உணர்ந்திருந்தேன்.
அதனால் வெண்முரசு படித்துக்கொண்டு இருந்த போதெல்லாம் எனக்கு வள்ளுவம் நினைவில் வந்தது. அந்த recall யுக்தி நன்றாக இருந்தது. வெண்முரசையும் நுணுகி வாசிக்க முடிந்தது. வள்ளுவத்தின் கருத்தும் ஆழப்பதிந்து என் கோபங்களை (கொஞ்சம்) முடிவுகளை நட்புகளை பார்வைகளை முன்னேற்றியது. வெண்முரசுவில் இருந்து துணுக்குகள், மற்ற இலக்கியங்களில், நூல்களில் இருந்து பல ஒப்புமைகளை, துணுக்குகள், உரை துணுக்குகளை என தொடர்ந்து update செய்துக்கொண்டு இருந்தேன்.
முன்னர் விருது "அறிவிப்பு" பற்றிய கட்டுரையில் சொன்னதுபோல நமக்கு எதிர்பாராமல் கிடைத்த அங்கீகாரமே பெரிது. அதாவது மே 2025 இல் Daily Project Thirukkural என்ற தளம் திருக்குறளுக்கு ஒரு நல்ல வலைதளம் என்று பாராட்டி இருந்தார்கள் யான் தமிழ் Youtube சேனல். அதுவே எனக்கே பெரிய உற்சாகம்.
அந்த சமயத்தில், எழுத்தாளர் பா.ராகவன் அவர்களின் குறளும் பொருளும் என்ற தினசரி mnemonic style உரைகளில் சற்று அயர்ச்சி அடைந்து இருந்தேன். (ஏனெனில் அத்தகைய சிறு /ஒரு வரி உரைகள் குறளை நன்கு படித்துவர்களுக்கு ஒரு நல்ல நினைவு குறிப்பாக அமையும். ஆனால் வள்ளுவதிற்குள் நுழைய அது சரியான வாசலா என்பதை போக போக தான் பார்க்க வேண்டும்).
ஜூன் 2025 சமயத்தில் DPT யின் அடுத்த கட்டத்தின் முதற்படிகளில் வேலைசெய்துக்கொண்டு இருந்தேன். கேள்விகளுக்கு பதில்களா குறளை முன்வைத்தேன். பல குறள்களை group செய்தேன். ஆனால் இவற்றில் கற்க எனக்கு பெரிதாக இல்லை. ஒரு manual grouping வேலை தான் இருந்தது. இருந்தாலும் என்னுடைய விரிவான பதிவொன்றை திரு சி.இராஜேந்திரன் ஐயா அவர்களுக்கு அனுப்பி feedback கேட்டேன். அவர் Table of Contents சேர்க்க சொன்னார். பின்பு இந்த blog இன் look ஐ மாற்றினேன். ஏனெனில் அனது பதிவு நீளமாக இருந்தன. தேவையான / முக்கியமான இடங்களுக்கு navigate செய்ய (பாய்ந்து பாய்ந்து செல்ல) எந்த வசதியும் இல்லை. பின்பு ஒரு theme ஐ வாங்கி அதை ஏற்றினேன். (அதற்கு AI என்னை ஒரு மாதம் தண்ணிக்குடிக்க வைத்தது. பின்பு உசாராகி ஒரு 2-3 நாட்களில் முடித்தேன். அதுவும் ஒரு கற்றல்).
பரிணாமத்தில் பல iteration களை தாண்டினேன். ChatGPT துணைக்கொண்டு நித்ய சைதன்ய யதி சொன்னது போல Epistemology மற்றும் ChatGPT சொன்னது போல் Hermeneutical மற்றும் Ontological முறையில் ஆய்வு செய்து குறளின் விரிவையும் ஆழத்தையும் தீவிரமாக கற்க துவங்கினேன்.
சில மாதங்கள் அதில் ஊறிய பிறகு ஒவ்வொரு குறளிலும் உள்ள inner movement ஐ பார்க்க துவங்கினேன். இது ஒரு structural functional exegesis முறை எனலாம். இந்த கட்டமைப்புக்கு வரவே எனக்கு 2-3 மாதம் ஆயிற்று. இது சரியா என்று கூட எனக்குதெரியாது.
ஆனால் ஒவ்வொரு குறளுக்கும் பல கேள்விகளை கேட்டு அதற்கான பொருள் தெளிவடைந்த பின்பே அதனை ஏற்று அதற்கு ஒரு வடிவம் கொடுக்கிறேன். உண்மை சொன்னால் வேலை மெனக்கெட்ட வேலை. நண்பர் ஒருவர் மனிதர்கள் செய்யகிற copy, paste, edit வேலைகளை automate செய்து தருவதாக கூறியிருக்கிறார்.
ஒரு அதிகாரத்தில் எல்லா குறள்களுக்கும் பதிவு செய்த பின்பு அந்த அதிகாரத்தை முழுமையாக ஒட்டுமொத்தமாக பார்க்கிறேன். இதுவே ஒரு பெரிய கற்றல்.
இதை பலர் ஏற்பார்களா என்று தெரியவில்லை. எனக்கு இருக்கும் கேள்வியெல்லாம் இதை ஒரு சிந்தனையாளர் எழுத்தாளர் ஒத்துகொள்வார்களா ? ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஒத்துக்கொள்வார்களா ? அவர்களுடைய பார்வை பரந்துபட்ட ஆழமான பார்வையும் கூட. அந்த கல்வியும் அறிவும் அனுபவமும் மூளையமைப்பும் எனக்கு கண்டிப்பாக இல்லை.
ஆனால், நான் செய்யும் இந்த inner movement study கண்டிப்பாக சில குறள்களுக்கு ஒரு புதிய பார்வையையும் சில பல குறள்களுக்கு அதன் பரப்பையும் ஆழத்தையும் வெளிச்சம்போட்டு காண்பிக்கும் என்று நம்புகிறேன். [உலகிலுள்ள எல்லா சுய முன்னேற்ற புத்தகங்களுக்கு ஊற்றாக இதை முன் வைக்கலாம். இதனால் ஒரு பயனும் இல்லை. ஆனால்] கண்டிப்பாக குறள் கற்போருக்கு இது பயனாய் இருக்கும்.
பல உதாரணங்கள் சொல்லி விளக்க வேண்டியதை போல் அல்லாமல், ஒரு கர்நாடக / ஹிந்துஸ்தானி இசை கலைஞர் ஒரு மாணவருக்கு குருகுல வாசம் முழுவதும் 3-4 ராகத்தில் கைப்பிடித்து காண்பிக்கும் நுட்பங்களை போல, இந்த inner movement study, ஒரு பேராசிரியர் சொல்லிக் கொடுப்பதைப் போல உணர்த்தும் என நான் இதுவரை கற்ற குறள்கள் எனக்கு நம்பிக்கையளிக்கின்றன.
இது வாசிப்போரின் உழைப்பையும் கோருவது. மொத்தமாக நிறைய dump செய்வது போல் தோன்றும். ஆனால் வலது கைபக்கம் Table of contents உள்ளது. அவரவருக்கு வேண்டியதை படித்துக்கொள்ளலாம். இதை யாரும் படிக்காவிட்டாலும் எனக்கு பரவாயில்லை என்ற மனநிலைக்கு ஒரு கட்டத்தில் வந்துவிட்டேன். ஏனெனில் எனக்கு இந்த கற்கும் முறை அளிக்கும் திறப்புகள் அற்புதம். தமிழ் வாசகர்களும் பாராட்டுவர் என்றே எண்ணுகிறேன்.
இந்த பணிக்கு Project SKY என்று பெயரிட்டுள்ளேன்.
Project SKYயில் ஒவ்வொரு திருக்குறளையும் அடுக்கடுக்கான அடிவானமாகக் கருதி வாசிக்கிறோம் — மேற்பரப்பில் தோன்றும் செயற்பொருளிலிருந்து அதன் உள்ளார்ந்த இயக்கம் வரை ஊடுருவிச் செல்கிறோம்.
இது குறளின் முழு விரிவையும் வரைபடமாக்குவதுடன், அர்த்தத்திற்கு உயிரூட்டும் மறைந்திருக்கும் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது.
இறையருள் துணைவர வேண்டுகிறேன்.
Project SKY reads each Thirukkural as a layered horizon — from visible action to inner movement.
It maps the full breadth of life while penetrating the hidden depth that gives meaning its power.
இறையருள் துணையருள வேண்டுகிறேன்

Join the conversation