குறள் 1049 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் நெருப்பினுள் - நெருப்பு - அக்கினி; இடி; உடற்சூடு; கோபம் முதலியவற்றின் கடுமை; ஒழுக்கத்தில் ஒருபோதும் தவறாதவர். துஞ்சலும் - துஞ்சல், v. n. sleep, death. ஆகும் - நடக்கும் நிரப்பினுள் - நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச்சூழப்போடும்நெல்; மங்கலக் குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி. யாது - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு ஒன்றும் - ஒன்றும் கண்பாடு - கண் இமை பொருந்துதல், உறக்கம், நித்திரை அரிது - அரியது, அருமை; பசுமை நல்குரவு - வறுமை முழுப்பொருள் நெருப்பு என்னும் அக்கினி உடலினை சுட்டெரித்து மனிதனை சாம்பலாக்கிவிடும். அத்தகைய நெருப்பினில் ஒருவர் அமர்ந்து கூட உறங்கவிட முடியும் [புராணங்களில் நாம் தவ ஆற்றலால் யோக வலிமையால் அது முடியும் என்று நாம் அறிவோம்], ஆனால் வறுமையின் நினைவால் (கவலையால்) கண் சோர்வடைந்து உறக்கம் இல்லாமல் இருப்பது மிக மிக அரிதாகும் என்கிறார் திருவள்ளுவர். வறுமை அவ்வளவு கொடியது...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.