Skip to main content

Posts

மனத்தொடு வாய்மை மொழியின்

குறள் 295 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு  தானஞ்செய் வரின் தலை [அறத்துப்பால், துறவறவியல்,  வாய்மை ] பொருள் மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு. மனத்தொடு - மனதுடன் வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி. மொழி - சொல்; கட்டுரை; சொற்றொகுதி; பேச்சுமுறை; வாக்குமூலம்; பொருள்; மணிக்கட்டு, முழங்கால், கணுக்கால்முதலியவற்றின்பொருத்து; மரக்கணு. மொழியின் - மொழிதல் - சொல்லுதல் தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ. தவத்தொடு - தவத்துடன்  தானம் - இடம்; இருப்பிடம்; பதவி; கோயில்; இருக்கை; சக்தி; துறக்கம்; செய்யுட்பொருத்தத்தில்வரும்நிலைகள்; எழுத்துப்பிறக்குமிடம்; எண்ணின்தானம்; நன்கொடை; யானைமதம்; நால்வகைஉபாயத்துள்ஒன்றாகியகொடை; குளித்தல்; இசைச்சுரம்; சாதகசக்கரத்திலுள்ளவீடு; ஆற்றலில்சமமாயிருக்கை; இல்லறம்; மகரவாழை. செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் செய்வரின் - செய்பவரை விட  தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உ...

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ

குறள் 1323 புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. [காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை] பொருள் புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல். ( நெஞ்சொடு புலத்தல்  என்ற அதிகாரம் தனியாக உண்டு) புத்தேள் - புதுமை, புதியவள், தெய்வம், தேவர், வானோர், முதற்கடவுள், தேவலோகம் நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண். உண்டு  - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் உண்டோ - இருக்கிறதா ? நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை. நிலத்தொடு - நிலத்துடன் நீரியைந் தன்னார் - நீர் + இயைந்து + அன்னார் நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. இயைந்து - இய...

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

குறள் 769 சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. [பொருட்பால், படைமாட்சி, படையில்] பொருள் சிறுமையும் - சிறுமை   - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை. செல் - போகை; வாங்கியகடனுக்குச்செலுத்தியதொகை; கடன்; கடன்செலுத்தியதற்குபத்திரமெழுதுங்குறிப்பு; கையொப்பம்; சென்றகாலவளவு; மேகம்; வானம்; குடி; வேல்; கறையான். செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். செல்லா   - செல்லாத  துனி - வெறுப்பு; சினம்; புலவிநீட்டம்; பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை. செல்லாத் துனியும் - நீங்காத வெறுப்பும் / வருத்தம் ; போகாத் துன்பம் உறுதலும் (போகாத் துன்பமாவது பெண்டிரைக் கைக் கொள்ளுதலும் இளிவரவு செய்தலும் போல்வன) வறுமையும் - வறுமை - ...

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்

குறள் 1082 நோக்கினாள்  நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து [காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்] பொருள்  நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். நோக்கினாள் -  பார்த்தாள், கவனித்தாள், விரும்பினாள் நோக்கு - கண்; பார்வை; அழகு; கருத்து; அறிவு; பெருமை; விருப்பம்; கதி; விநோதக்கூத்துக்களுள்ஒன்று; ஒருவகைச்செய்யுளுறுப்பு; ஓர்உவமவுருபு. எதிர் - வருங்காலம்; எதிரிடை; முன்; முன்னுள்ளது; முரண்; கைம்மாறு; இலக்கு; போர். நோக்குதல்  - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.   தாக்கு - அடி; போர்; படை; வேகம்; பாதிக்கை; சாதனை; குறுந்தடி; இடம்; பெருக்கல்; நெல்வயல்; பற்று; வளமை; ஆணை; நிலவறை; மிகுசுமை; எதிர்க்கை; எதிரெழுகை. தாக்குதல் - எதிர்த்தல்; மோதுதல்; முட்டுதல்; பாய்தல்; தீண்டுதல்; அடித்தல்; வெட்டுதல்; பற்றியிருத்தல்; எண்கூட்டிப்...

மலரினும் மெல்லிது காமம்

குறள் 1289  மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்  செவ்வி தலைப்படு வார். [காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்] பொருள் மலர் -  பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர். இனும் -   இன்னும் மலரினும் - மலரை விட. மெல்லிது - மென்மைவாய்ந்தபொருள்; ஒல்லி. காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை, காதல் ( புணர்ச்சி ). சிலர் - சிலபேர், மிக சிலர் மட்டுமே. அதன் - அதனுடைய, It's   It's   It's   செவ்வை - நேர்மை; மிகுதி; வழிமுதலியவற்றின்செப்பம்; சரியானநிலை செவ்வை - cevvai   n. id. 1. [M. cevva.]Correctness, fitness, accuracy, straightness;நேர்மை. தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி(சிலப். வழக். 68). 2. Abundance; மிகுதி செவ்வையாய்க் கொடுத்தான். 3. Evenness, smoothness வழி முதலியவற்றின் செப்பம் அந்தவழி செவ்வையாகஉள்ளது. 4. Sound condition, as of mind, body,etc.; சரியான நிலை அவனுக்குத் தேகம் செவ்வ...

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

குறள்  475  பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்  சால மிகுத்துப் பெயின் [பொருட்பால், அரசியல்,  வலியறிதல்] பொருள்  பீலி - மயில்தோகை; மயில்; சிற்றாலவட்டம்; வெண்குடை; பொன்; மகளிரிடும்கால்விரலணி; சிறுசின்னம்; வாத்தியப்பொது; பெருஞ்சவளம்; மலை; மதில்; நத்தைஓடு; பனங்குருத்து; நீர்பாய்தொட்டி; பந்தயமுறி.  சாகாடு - வண்டி; வணடியுருளை; உரோகிணிநாள் அச்சு -  வண்டியின் அச்சாணி ; அடையாளம்; உயிரெழுத்து வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு வலிமை அச்சம் துன்பம் பண்டம் -  பொருள்; பாண்டம்முதலியன; தின்பண்டம்; பயன்; பொன்; நிதி; ஆடுமாடுகள்; வயிறு; உடல்; உண்மை; பழம். சால  - மிகவும்  மிகுத்துப் - மிகு-த்தல் - miku-   11 v. tr. Caus. ofமிகு¹-. [K. migisu.] 1. To augment, makelarge; அதிகப்படுத்துதல். சால மிகுத்துப் பெயின்(குறள், 475). 2. To excel, surpass; விஞ்சுதல்.3. To increase; பெருக்குதல். 4. To regard withpride; பெருமையாகக் கருதுதல். இவ்வாறு செய்தேமென்று தன்னை மிகுத்ததுவும் (புறநா. 77, உரை). 5.See மிகுத்து-. பெயின் -  ப...

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

குறள் 279 கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன  வினைபடு பாலால் கொளல். [அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கணை -  திரட்சி; அம்பு; அம்பின்அலகு; பூரநாள்; வளைதடி, காம்பு; மூங்கில்; சிவிகையின்வளைந்தகொம்பு; கரும்பு; திப்பிலி; ஒலி; ஒருநோய் கணை - தோற்றத்தில் / வடிவில் நேராக இருக்கும் அம்பு. கொடிது   - கொடியது. தீங்கு விளைவிப்பது, கொடுமையானது யாழ் - பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் என்னும் நால்வகை நரம்புக்கருவி; மிதுனராசி; அசுவினிநாள்; திருவாதிரைநாள்; பண்; ஆந்தை. கோடு -  வளைவு; நடுநிலைநீங்குகை; யானையின்தந்தம்; விலங்குகளின்கொம்பு; ஊதுகொம்பு; நீர்வீசுங்கொம்பு; மரக்கொம்பு; யாழ்த்தண்டு; 'கெ', 'கே'முதலிவற்றின்தலைப்பிலுள்ளகொம்புக்குறியீடு; பிறைமதி; சங்கு; குலை; மயிர்முடி; மலையுச்சி; மலை; மேட்டுநிலம்; வரி; ஆட்டம்முதலியவற்றிற்குவகுத்தஇடம்; நீர்க்கரை; குளம்; காலவட்டம்; வரம்பு; ஆடைக்கரை; முனை; பக்கம்; அரணிருக்கை; கொடுமை; நீதிமன்றம் யாழ்கோடு - யாழ் என்னும் இசைக் கருவி. இதன் கழுத்து வள...