Skip to main content

Posts

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம்

குறள் 1007 அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று. [பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்] பொருள் அற்றார் - aṟṟār   n. id. 1. Destitute persons; பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல்(குறள், 226). 2. Those who have dedicatedthemselves to the service of God; த ம்மை ஒன்றற்கென்றே யொப்படைத்தவர் . முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10).   அற்றார்க்கு - பொருள் இல்லாதவர்களுக்கும், மக்கள் சேவை புரிகிறவர்களுக்கும் ஒன்று - ஒன்று என்னும் எண்; மதிப்பிற்குரிய பொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் ஆற்றாதான் - செய்யாதவன்; தேடாதவன்; உதவாதவன் செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு. மிகு - miku   மிகு¹-. adj. Great; ...

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப

குறள் 991 எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்  பண்புடைமை என்னும் வழக்கு [பொருட்பால், குடியியல், பண்புடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எண் - எண்ணிக்கை; கணக்கிடுதல்; எண்ணம்; ஆலோசனை; அறிவு; மனம்; கவலை; மதிப்பு; இலக்கம்; கணக்கு; சோதிடநூல்; இலக்கியம்; வரையறை; தருக்கம்; மாற்று; மந்திரம்; அம்போதரங்கம்; எளிமை; வலி; எள். பதம் - பக்குவம்; உணவு, சோறு; அவிழ்; தண்ணீர்; ஈரம்; கள்; அறுகம்புல்; இளம்புல்; இனிமை; இன்பம்; அழகு; ஏற்றசமயம்; தகுதி; பொழுது; நாழிகை; கூர்மை; அடையாளம்; அளவை; பொருள்; காவல்; கொக்கு; முயற்சி; மாற்றுரு; செய்யுளடிநாலிலொன்று; பூரட்டாதிநாள்; மொழி; காண்க:பதபாடம்; இடம்; பதவி; தெய்வபதவி; வழி; தரம்; கால்; வரிசை; ஒளி; இசைப்பாட்டுவகை. பதத்தால் -  எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது. என்ப -  என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல். யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலிய...

கடன்என்ப நல்லவை எல்லாம்

குறள் 981 கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து  சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு [பொருட்பால், குடியியல், சான்றாண்மை] பொருள் கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு. கடன் - kaṭaṉ   s. a debt, loan of money or goods, இருணம்; 2. duty, கடமை; 3. nature, natural attribute, இயல்பு; "கடனென்ப நல்லவையெல்லாம்" குறள்; 4. order, plan, system, முறைமை; 5. observances such as the daily ablutions and other devotional exercises enjoined by religion, வைதிகக்கிரியை; 6. honour, மானம்; 7. measure, definite quantity அளவை; 8. tribute, tax, கப்பம், வரி. என்ப -  என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல். நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை. எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்...

பெருமை யுடையவர் ஆற்றுவார்

குறள் 975 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்  அருமை உடைய செயல் [பொருட்பால், குடியியல், பெருமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை உடையவர் -  ஆன்மாக்களை அடிமையாக உடையவர்; சுவாமி ஆன்மார்த்தலிங்கம்; செல்வர் இராமானுசர்; உடையவர் - uṭaiyavar   n. உடைமை Hon. pl. 1. Master, lord; சுவாமி உடையவர்கோயில் (பெரியபு. திருஞான. 664). 2. Šiva-liṅgaused in private worship; ஆன்மார்த்த லிங்கம் 3. Rāmānuja, the Guru of Šrī Vaiṣṇavas; இராமானுசர் (ஈடு, 10, 7, 1.)   உடைமை - உடையனாகும்uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).  தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை. ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையா...

இன்றி அமையாச் சிறப்பின

குறள் 961 இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் [பொருட்பால், குடியியல், மானம்] பொருள் இன்றி - இல்லாமல் அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அமையாச் - அமையாத; தகுதியாகாத; பொருந்தாத; உண்டாகாத; உடன்படாத சிறப்பின - சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு. ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல். குன்ற - குன்றுதல் - குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல். வருப - வருகின்ற விடல் - viṭal   n. விடு¹-. 1. Leaving;renunciation; முற்றும் நீங்குகை. சமந்தமம் விடல்(கைவல். தத்துவ. 9). 2. Pouring; ஊற்றுகை.(நாமதீப. 695.) 3. Fault; குற்றம். (சது.) முழுப்பொருள் ஒரு பொருள் இல்லாமல் நமக்கு இந்த காரியம் (உதாரணமாக பசி தீர) ஆகாது என்று இருந்தாலும் அந்த பொருளை தவறான அறமற்ற வழியில் ஈட்டினால் அதனால் தற்காலிகமாக அந்த காரியம் நடக்கும் ஆனால...

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

குறள் 953 நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு [பொருட்பால், குடியியல், குடிமை] பொருள் நகை -  சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு. ஈகை - கொடை; பொன் கற்பகம் இண்டு புலிதொடக்கி காடை காற்று மேகம் கற்பகமரம்; இல்லாமை ஈதல் கொடுத்தல் இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை. சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். இகழ்தல் - அவமதிப்பு; குற்றம் விழிப்பின்மை; வெறுப்பு இகழாமை - இகழாதிருத்தல் நான்கும் - ஆகிய நான்கும் வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க...

மிகினும் குறையினும் நோய்செய்யும்

குறள் 941 மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்  வளிமுதலா எண்ணிய மூன்று [பொருட்பால், நட்பியல், மருந்து] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மிகினும் - மிகுதல் - அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல். குறையினும் - குறைதல் - சிறுகுதல்; இடம்பொருள்ஏவல்முதலியவற்றால்தாழ்தல்; பற்றாமற்போதல்; அரைகுறையாதல்; விலையேறும்படிபண்டம்அருகுதல்; எழுத்துக்கெடுதல்; வருந்திஉயிரொடுங்குதல்; குறைவுற்றுவருந்துதல்; ஊக்கங்குன்றுதல்; தோல்வியுறுதல்; அழிதல். நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். நூலோர் - நூலாசிரியர்; கற்றோர்; அமைச்சர்; பார்ப்பனர். வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய் குடலிறக்கம், விரைவாதம்) (cf. balin. Hernia); சிறியகாலவளவுவகை; வாதமாகிய வாயு முதலாகிய முதலா - முதல் எண்ணிய - எண்ணிக்கை மூன்று -...