Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பெருமை யுடையவர் ஆற்றுவார்

குறள் 975
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் 
அருமை உடைய செயல்
[பொருட்பால், குடியியல், பெருமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை

உடையவர் - ஆன்மாக்களை அடிமையாக உடையவர்; சுவாமி ஆன்மார்த்தலிங்கம்; செல்வர் இராமானுசர்;

உடையவர் - uṭaiyavar   n. உடைமை Hon. pl. 1. Master, lord; சுவாமி உடையவர்கோயில் (பெரியபு. திருஞான. 664). 2. Šiva-liṅgaused in private worship; ஆன்மார்த்த லிங்கம் 3. Rāmānuja, the Guru of Šrī Vaiṣṇavas; இராமானுசர் (ஈடு, 10, 7, 1.)  

உடைமை - உடையனாகும்uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).  தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றுவார் - செய்வார்கள்; வலிமை அடைய செய்வார்கள்; உண்மையை தேடுவார்கள்;

ஆற்றின் - எப்படி ஆற்றுவார்கள் என்றால்; எப்படி செய்வார்கள் என்றால்?

அருமை - அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

உடைய - உடைய uṭaiya   part. உடை-மை.Particle of the genitive case; ஆறாம் வேற்றுமைச்சொல்லுருபு. (நன். 300, சங்கர.)

செயல் -  தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
மாட்சிமை உடையவர்கள், புகழ் உடையவர்கள், வல்லமை உடையவர்கள் அதனை ஒருநாளில் பெற்றிடவில்லை. அவர்கள் பலகாலமாக செய்த செயல்களுக்காக பெற்ற வினைபயனே பெருமையாகும். அவர்கள் செய்த செயல்கள் எல்லாம் அரிய செயல்கள், எளிமையான செயல்களும் அல்ல, சிறுமை கொண்ட செயல்களும் அல்ல. இச்செயல்களை எல்லாம் பொத்தாம் பொதுவாக அவர்கள் செய்யவில்லை. அவர்கள் அச்செயல்களை அருமையாக, திருந்த (செய்வன திருந்த செய்) செய்யவேண்டிய விதத்தில் நேர்த்தியாக நெடுங்காலமாக செய்தார்கள்.

அவர்கள் உண்மையை (சத்தியத்தை) அரிய முற்பட்டார்கள் அதனால் தான் தன்னை வலிமை படுத்திக்கொள்ள ஒரு தேடலில் (தேடலும் ஆற்றுதலில் ஒரு செயல்) செய்யவேண்டியவற்றையெல்லாம் செய்து தன்னிடம் நீக்கவேண்டியவற்றையெல்லாம்  (நீக்குதலும் ஆற்றுதலில் ஒரு செயல்) நீக்கினார்கள். ஆதலால் தான் பெருமை பெற்றார்கள்.

மற்று ஒன்று, பெருமை அடைந்தோர் என்று கூட சொல்லியிருக்கலாம் ஆனால் பெருமை உடையவர் என்று தான் சொல்லுகிறார். ஏனெனில் இப்பெருமை பின்பு ஒருநாள் சிறுமை செய்தால் குறையும்/அழியும் என்பதை குறிக்கவே.

இக்குறளின் மற்றொரு பொருள் சிறிய செயல்களையும் சிறுமை கொண்ட செயல்களையும் செய்வோர் ஒரு செயலை அரைகுறையாக செய்வோர் சிறுமை யென்று வகுக்கபடுவர். அவர்களுக்கு புகழ் என்பது கிட்டாது. அதுமட்டும் இன்றி பெருமை என்பது தான் பிறந்த குலத்தினால் பெற்றது அல்ல தான் செய்த செயலினால் பெறுவது என்பதை சொல்லாமல் சொல்லுகிறார் திருவள்ளுவர்.

கம்பராமாயணம் இதையே வேறுவிதமாகச் சொல்கிறது. 
பெருமையோ ராயினும் பெருமை பேசலார் 
கருமமே யல்லது பிறிதென் கண்டது”, (கம்ப.கலன் காண் 16) என்று!

அதனால் தான் ஒளவையார் சொல்லி இருக்கிறார் போல் இருக்கு "செய்வன திருந்த செய்" என்று.


”செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்” (பெரிய.இயற்பகை 29)

இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
நரிமா உளம்கிழித்த அம்பினின் தீதோ
அரிமாப் பிழைப்பெய்த கோல் 152

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பெருமை உடையவர் - அவ்வாற்றால் பெருமையுடையராயினார்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - தாம் வறியராய வழியும் பிறரால் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர். ('வறியராய வழியும்' என்பது முன் செய்து போந்தமை தோன்றப் 'பெருமை உடையவர்' என்றதனானும், 'ஆற்றுவார'¢ என்றதனானும் பெற்றாம். இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பெருமையாவது செருக்கின்மை: சிறுமை செருக்கினை மேற்கொண்டொழுகுதலான். மேல் குலத்தினாலும் பெரியாரைப் பெரியாரென்று கொள்ளல் படாதென்றார். இனிப் பெருமை யிலக்கணங் கூறுவார், முற்படச்செருக்கின்மை பெருமையென்று கூறினார்.

மு.வரதராசனார் உரை
பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
Great people and people who had earnt greatness/fame achieved it by doing rare deeds and things that are difficult for others(mundane) people. In other words, if one wants to achieve greatness one has to do rare deeds and difficult things. Remember அரும்பயன் ஆயும் அறிவினார், பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும், செயர்கரிய செய்வார் பெரியர் 

Questions that I ask to the kid
What does great people do ?

No comments:

Post a Comment