Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இன்றி அமையாச் சிறப்பின

குறள் 961
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
[பொருட்பால், குடியியல், மானம்]

பொருள்
இன்றி - இல்லாமல்

அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

அமையாச் - அமையாத; தகுதியாகாத; பொருந்தாத; உண்டாகாத; உடன்படாத

சிறப்பின - சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

குன்ற - குன்றுதல் - குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.

வருப - வருகின்ற

விடல் - viṭal   n. விடு¹-. 1. Leaving;renunciation; முற்றும் நீங்குகை. சமந்தமம் விடல்(கைவல். தத்துவ. 9). 2. Pouring; ஊற்றுகை.(நாமதீப. 695.) 3. Fault; குற்றம். (சது.)


முழுப்பொருள்
ஒரு பொருள் இல்லாமல் நமக்கு இந்த காரியம் (உதாரணமாக பசி தீர) ஆகாது என்று இருந்தாலும் அந்த பொருளை தவறான அறமற்ற வழியில் ஈட்டினால் அதனால் தற்காலிகமாக அந்த காரியம் நடக்கும் ஆனால் தன்னுடைய மாண்பு குறையும். அது ஒரு அவமானமான செயலாகும். குடி / குல / குடும்ப இழிவுக்கும் காரணமாகும். ஆதலால் எந்த தருவாயிலும் அவமானம் தரக்கூடிய செயலை செய்யக்கூடாது.

புலியானது பசியால் உயிர் வருந்துவதாயினும் இடப்பக்கத்தில் வீழ்ந்த விலங்கினை உண்ணாமையும், வலப்பக்கத்தே வீழ்த்தி உண்ணுதலும் ஆகிய இயல்பினையுடைய தென்பது ‘கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென; அன்றவண் உண்ணாதாகி வழிநாள்,..இருங்களிற்றொருத்தல் நல்வலம் படுக்கும், புலிபசித்தன்ன’ என்ற புறநானூற்றுச் சித்திரத்தால் புலனாகும். ஐந்தறிவினதாகிய புலிக்கே மானம் உண்டென்பதைச் சொன்னதும் தமிழ். அகநானூற்றுப் பாடலொன்றும் இதே கருத்தை “தொடங்கு வினைதவிரா அசைவில் நோன்றாள், கிடந்துயிர் மறுகுவதாயினும் இடம்படின், வீழ்களிறு மிசையாப் புலியினும்’ என்கிறது.

ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானந் தலைவருவ செய்பவோ? – யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை யவர். (நாலடி 198)

யானையின் புள்ளிகளையுடைய முகத்தைப் புண்படுத்தவல்ல கூரிய நகங்கள் பொருந்திய வலிய கால்களையுடைய சிங்கத்தைப் போன்ற முயற்சி வலிமை யுடையோர் நிலை குறைவாகி வீட்டில் அலுவலில்லாது தங்கி வருவாயின்றி இறக்க நேரினும், குற்றம் உண்டாகக்கூடிய செயல்களைச் செய்வார்களோ? செய்யார், என்கிறது சிங்கத்தின் மானத்தை மேற்கோளாகக் காட்டும் மேற்கண்ட நாலடியார் பாடல்

கடமான் தொலைச்சிய கானுறை வேங்கை 
இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும்; -இடமுடைய 
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர், 
மானம் மழுங்க வரின் (நாலடி.300)

மதம் பொருந்திய யானையை அதன் வலி தொலைத்து வீழ்த்திய காட்டிலுறையும் புலி, தனக்கு இடப்பக்கம் வீழ்ந்த அந்த யானையை, தான் பசி மிகுதியால் உயிர்துறக்குந் தறுவாயிலிருப்பினும், உண்ணாமல் உயிர்விடும்;

கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்றவண் உண்ணா தாகி வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்
திருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்
துரனுடை யாளர் (புறநா.190:6-11)

“தொடங்குவினை தவிரா அசைவில் நோன்தாள்
கிடந்துயிர் மறுகுவ தாயினும் இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வில் உள்ளம் (அகநா 29:1-4)

உதாரணம் 1
நான் சிறுவயதில் (எனக்கு ஒரு 13-15 வயது இருக்கும்) நான் தங்கியிருந்த அரசு குடியிருப்பு அருகே உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றேன். அங்கே ஒரு செம்பருத்தி செடியை ஒரு 1/2 அடி அளவிற்கு உடைத்தேன் (வீட்டில் பதியம் போட்டு வளர்பதற்காக). அப்போழுது அங்கு இருந்த ஒரு பூங்கா சம்பந்தமான அலுவலர் என்னையும் எனது சைக்கிளையும் கையும் களவுமாக பிடித்தார். அந்த அலுவலர் நீ எப்படி திருடலாம் என்று என்னிடம் கேட்டார். எப்போழுது எனது புணலை பார்த்தார். எளனமாக சிரித்தார். அருகில் இருப்பவர்களிடம் அதை பார்க்க சொன்னார். அவர்களும் நகைத்தனர். எனக்கு மிகவும் அவமானமாய் போயிற்று. நான் செய்த சிறு தவறினால் (திருட்டினால்) எனது குலத்தின் (அந்தனன் என்ற குலத்தவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதாகும்) பெயருக்கு கலங்கம் கொண்டு வந்துவிட்டேனே என்று. அது (சிறு) தவறு செய்தால் அடையும் மானக்கேட்டினை (குன்றுதல்) எனக்கு உணர்த்தியது.

உதாரணம் 2

https://youtu.be/nMRpd6dhKpk?t=4m50s 
From 4:50 to 8:20

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி , குடிப்பிறந்தார்க்கு உரியவாய குணங்கள் கூறுவான் தொடங்கி , முதற்கண் மானம் கூறுகின்றார் .அஃதாவது , எஞ்ஞான்றும் தம் நிலையில் தாழாமையும் , தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம் . இஃது அக்குடிப் பிறப்பினை நிறுத்துதலுடைமையின் , அச்சிறப்புப் பற்றி முன் வைக்கப்பட்டது.]

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; குன்ற வருப விடல் - தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக. (அமையாமை - இறத்தல். 'குடிப்பிறப்பு' என்பது அதிகார முறைமையான் வந்தது. 'இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநுல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்.).

மணக்குடவர் உரை
இன்றியமையாத சிறப்புடையனவாயினும் தமது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும் விடுக. இது பொருளும் இன்பமும் மிகினும் தன்மை குறைவன செய்யற்க வென்றது.

மு.வரதராசனார் உரை
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.

No comments:

Post a Comment