Skip to main content

Posts

Showing posts with the label Milestones

1 Million பார்வைகள்

இந்த வலைத்தளம் 1 மில்லியன் பார்வைகளை 6-Oct-2022 அன்று தொட்டது. Stats அப்படித்தான் சொல்கிறது. ஒரு விள்ளல் சந்தோஷம்.  நவம்பர் 2022 இல் 70580 பார்வைகள் பெற்று ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சற்றும் எதிர்பாராதது. ஒவ்வொரு மாதமும் 45000-53000 பார்வைகள் தான் வரும். பார்வையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் google தேடலில் மேலே வந்துக்கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன். பார்வையாளர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். அன்புடன் ராஜேஷ்

திருக்குறள் (முதல் நிலை கற்றல்) - நிறைவு

நான் எடுத்த ”நாளும் ஒரு திருக்குறள்” [ http://DailyProjectThirukkural.blogspot.com/ ] என்னும் செயலை/குறிக்கோளை நேற்று 14 அக்டோபர் 2020 இரவு முடித்தேன். இச்செயலை 11 டிசம்பர் 2013 அன்று துவங்கினேன். சரியாகச் சொன்னால் 2500 நாட்கள்.  இதில் சுமார் பாதி நாட்கள் தான் 1330 குறள்களுக்கு எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நடுவில் பல நாட்கள் சோம்பேறித் தனம் என்று நினைக்கையில் வெட்கமாகவே உள்ளது. ஏனெனில் “ குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் ”  என்றென்பதே வள்ளுவன் வாக்கு. அதாவது தான் படித்தும் அதனை பிறர்க்கு எடுத்துரைத்த போதிலும் தான் அதை பின்பற்றவில்லை என்றால் அவனைப்போன்று பேதை வேறு யாரும் இல்லை. நான் சோம்பலை கடந்து இச்செயலை குறைந்தது 2000 நாட்களிக்குள்ளாவது முடித்து இருக்க வேண்டும் (2000?ஏனெனில் நடுவில் இரு ஆண்டுகள் MBA படிக்கச் சென்றுவிட்டேன்). ஆனால், கடந்த 2.5 வருடங்களாக நாளும் உரை எழுதி முடித்துள்ளேன் என்பது ஆறுதல். 1330 குறள்களை கற்றுள்ளேன். இதில் கண்டிப்பாக சில குறள்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உதாரணமாக நான் எழுதிய முதல் குறள் “...

சமர்ப்பணம்

தமிழ்க்கடல்  நெல்லை கண்ணன் பேரன்பிற்குரிய நெல்லை கண்ணன் ஐயா அவர்களே, வணக்கம்.    என் பெயர் ராஜேஷ். சுமார் 2009-2010 ஆண்டு வாக்கிலும் 2013-இலும் நான் அலுவல் நிமித்தமாக தில்லியிலும் பெங்களூரிலும் வசித்தபோது விஜய் டிவியில் நீங்கள் பங்கேற்று நடத்திய "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியை தொடர்ந்து ஆர்வமுடன் கண்டுகளித்தேன். அந்த நிகழ்ச்சியையும் உங்களது youtube காணொளிகளையும் கண்டுப் பயனுற்ற பல பேர்களில் நானும் ஒருவன். அது என்னுள் வாசிப்பு தாகத்தை விதைத்து தேடலின் சுகத்தையும் காண்பித்தது.  அதன் பிறகு பல புத்தகங்களை தொடர்ந்து வாசித்து என் அறிவையும் என்னையும் செம்மைப்படுத்திக்கொண்டே இருக்கிறேன். இன்றைய நாட்களில் ஒரு அரைமணிநேரம் புத்தகம் வாசிக்காமல் உறங்குவதில்லை.  2013 ஆண்டு நான் நாளும் ஒரு திருக்குறள் என்ற ஒரு project ஐ துடங்கினேன். ஒவ்வொரு குறளையும் எடுத்து அதிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பல பொருள்களை அகராதியில் ஆராய்ந்து ஒவ்வொரு குறளின் மெய்யான குரலை உணர முற்பட்டு வருகிறேன். நான் உணர்ந்த பொருளை ஒரு பத்து வரிகளில் எழுதி https://dailyproject...