Skip to main content

Posts

Showing posts with the label Management_Listening

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

குறள் 418 கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் கேட்பினும் -  கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல் கேளாத் - கேளாமல் - கேட்காமல் தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு. தகையவே - தன்மை  உடையனவே கேள்வியால் - கேள்வி - கேட்டல்; கற்கை; வினா; நூற்பொருளைக்கற்றறிந்தவர்; சொல்வதைக்கேட்டல்; கல்வி; சத்தம்; வேதம்; நூல்; சொல்; அறிக்கை; விசாரணை; இசைச்சுருதி; ஏலம்கேட்டல்; யாழ். தோட்கப்படாத -  துளைக்கப்படாத செவி - காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை. முழுப்பொருள் செவிகள் படைக்கபட்டதே அறிவுச்செல்வத்தை கேள்வியறிவாக பெறத்தான் அதை செய்யவில்லை எ...

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்

குறள் 411 செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை [பொருட்பால், அரசியல், கேள்வி] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் செல்வம்  -  கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்(சுவர்க்கம்), ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு. செல்வத்துள் - எல்லா செல்வங்களிலும் செல்வம் - செல்வம் எனப்படும் செவிச்செல்வம் - கேள்வியறிவாகிய ஐசுவரியம் அச்செல்வம் - அந்த செல்வம் செல்வத்துள் - செல்வங்களிலும் எல்லாம் - எல்லாவற்றிலும் தலை -   சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு முழுப்பொருள் முந்திய அதிகாரத்தில் கல்வியின் சிறப்பை திருவள்ளுவர் கூறியிருப்பார். ஆனால் முறையான கல்வியானது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைத்தும் விடாது ஏனெனில் நன்கு கற்று உணர்ந்து தெளிந்து பிறர்க்கு கற்பிக்கும் ஆற்றல் கொண்ட குருமார்களும் மிக குறைவே. அது மட்டும் அல்லாமல் ...

எனைத்தானும் நல்லவை கேட்க

குறள் 416 எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். [பொருட்பால், அரசியல், கேள்வி] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எனை - eṉai   adv. என் What, why;என்ன.  , eṉai   எ³. adj. All; எல்லாம் சுட்டுணர்வெனப்படுவ, தெனைப்பொருளுண்மைகாண்டல் (மணி. 27, 62).--adv. However much;எவ்வளவு. எனைப்பகை யுற்றாரும் (குறள், 207). தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில் போடப்படும் காய்கறித் துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல். எனைத்தானும் -  எவ்வளவு சிறிதாயினும் நல்லவை -  நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை. கேட்க -  செவி வழியாக சான்றோர்களிடமாவது கேளுக அனைத்தானும் - அந்த அளவில் ஆன்ற -  மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன. பெருமை -  மாட்சிமை, மிகுதி, வல்லமை, கீர்த்தி, அகந்தை, அருமை, புகழ், பருமை தரும் -  ஈன்றும் முழுப்பொருள் எவ்வளவு சிறிதாயினும் சிறிது நேரமாயினும் எவ்வளவு சிறிது பயன...

கற்றில னாயினுங் கேட்க

குறள் 414 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு  ஒற்கத்தின் ஊற்றாந் துணை. [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் கற்று - கற்றல் - பயிலுதல் , படித்தல் இலன் - இல்லை என்று, இல்லாதவன் கற்றிலன் - நூல்களை கற்கவில்லை  ஆயினும் - என்றாலும்; ஆனாலும்; ஆவது உம்மைப் பொருளில் வரும் எண்ணிடைச்சொல். கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல் கேட்க - செவி வழியாக சான்றோர்களிடமாவது கேளுக அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி அஃது - அத்தகைய கேள்விச் செல்வம் ஒருவற்கு - ஒருவருக்கு, ஒருவனுக்கு ஒற்கத்தின் - ஒற்கம் - தளர்ச்சி; வறுமை; குறைவு; அடக்கம்; பொறுமை. ஊற்று - ஊற்றுத்துளை; நிலத்தடியில்நீர்ஊற்றுள்ளஇடம் - ஊன்றுப் போல் ஆம் - போன்று, நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அ...