Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

குறள் 418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி
[பொருட்பால், அரசியல், கேள்வி]

பொருள்
கேட்பினும் கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்

கேளாத் - கேளாமல் - கேட்காமல்

தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.

தகையவே - தன்மை  உடையனவே

கேள்வியால் - கேள்வி - கேட்டல்; கற்கை; வினா; நூற்பொருளைக்கற்றறிந்தவர்; சொல்வதைக்கேட்டல்; கல்வி; சத்தம்; வேதம்; நூல்; சொல்; அறிக்கை; விசாரணை; இசைச்சுருதி; ஏலம்கேட்டல்; யாழ்.

தோட்கப்படாத - துளைக்கப்படாத

செவி - காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை.

முழுப்பொருள்
செவிகள் படைக்கபட்டதே அறிவுச்செல்வத்தை கேள்வியறிவாக பெறத்தான் அதை செய்யவில்லை என்றால் அவை கேட்கும் தன்மையிருப்பினும் செவிடுகள் என்று கூறிகிறார் திருவள்ளுவர்.

கேள்விச்செல்வத்தால், அதாவது கேள்வி அறிவால் துளைக்கபடாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் கேளாதத்(/செவிட்டுத்) தன்மையைக் கொண்ட செவிகளாகவே கருதப்படும். அதாவது அறிவுச் செல்வத்தை கற்றறிந்தார் வாய்மொழியாக கேட்டறியாதவர்களின் செவிகள் அதன் உண்மை செயலை செய்யாது பயனற்று இருப்பதால் அவை வெறும் பொம்மை செவிகள். முகத்தில் புற முழுமைக்காக இருக்கிறது என்றும் நாம் கருதலாம்.

இரும்பல் காஞ்சி என்ற இலக்கியத்தில், 
எய்கணை விழுத்துளை அன்றே செவித்துளை 
மையறு கேள்வி கேளாதோர்க்கே” எனப்படுகிறது.  

சீவக சிந்தாமணி (1552) இன்னும் அழுத்தமாக, 
இரும்பிற் போர்த்த 
பழுதெண்ணும் வன்மனத்தார் ஓட்டைமரச் செவியார்..
....கேளார்” என்கிறது. 

கம்பராமயாணப் சவரிப்படலத்தில் “தோட்டவர்” என்ற சொல்லைப் இதேகருத்தைச் சொல்லியிருக்கும் அழகையும் சற்று பார்ப்போம். “கேள்வியாற் செவிகள் முற்றும் 
தோட்டவர் உணர்வின் உண்ணும் 
அமுதத்தின் சுவையாய் நின்றான்” (கம்பர்.சவரி.7)
என்கிறார் கம்பர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம், கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.
(ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஓசை மாத்திரம் கேட்டனவாயினும் அதுவுங் கேளாத செவி போலும்; நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி. இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.

மு.வரதராசனார் உரை
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

சாலமன் பாப்பையா உரை
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

Thirukkural - Management - Listening
Valluvar further adds, in Kural 418, that one's ears that are not used to active and deep listening and learning from that listening are similar to ears that are deaf, even if they have the capacity to hear sounds. Therefore, hearing is different from listening.

The ear Shut to learning
Though open is deaf.

There are two types of listening. They are listening to respond and listening to understand. Never  listen to respond. Listening to respond may give us ego satisfaction, but may not help us achieve more. Listening to understand helps us to make the other person feel important and learn to achieve personal and  professional significance.

Listen to your superiors when you are a follower. Listen to your followers when you a leader. You expect your superior to listen to you attentively when you a follower. Similarly, your followers expect you to listen to them when you are a leader. So, listen to your followers the way you want your superior to listen to you. When you are an employer, listen to your employees as you listen to your customers. We listen attentively to our customers because they will fire us if 
we do not. On the contrary, we do not listen to our employees or direct reports because they cannot fire us.

One of the outstanding qualities of a leader is listening. When you, as a leader, listen to your people, you can solve fifty percent of organizational problems. One of the reasons for industrial unrest in manufacturing industries is the top management's inability to listen to the employees.

No comments:

Post a Comment