Posts

Showing posts with the label Index 041 கல்லாமை

041 கல்லாமை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - கல்லாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் குறள் 402 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று குறள் 403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின் குறள் 404 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார். குறள் 405 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் குறள் 406 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்  களரனையர் கல்லா தவர் குறள் 407 நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று குறள் 408 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு குறள் 409 மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு குறள் 410 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் பதிவு வரிசை