குறள் 1130 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும்இவ் வூர் [காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்] பொருள் உவந்து - உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல் உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். உறைவு - தங்குகை; சிறுகுகை; உறைதல்; இருப்பிடம். உறைவி - உறைபவள் உறைவர் - இருக்கின்றார் உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை. உள்ளத்துள் - உள்ளத்தினில் - உள்ளத்தின் உள்ளே என்றும் - என்றைக்கும், எந்நாளும், எப்போதும் இகந்து - இகத்தல் - தாண்டுதல்; கடத்தல் அடக்குதல்; கைப்பற்றுதல் பிரிதல் பொறுத்தல் போதல் நீங்குதல் புடைத்தல் காழ்த்தல் நெருங்குதல் உறைவர் - இருக்கின்றார்; அன்பில்லா என் காதலர் ஏதிலர் - அயலார்; பகைவர்; பரத்தையர். என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். இவ் - இந்த ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.