குறள் 199 பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர் [அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை] பொருள் பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. தீர்ந்த - தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல். தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல். பொச்சாப்பு - மறதி; பொல்லாங்கு; குற்றம்; உறுதியின்றி மனம் நெகிழ்ந்திருக்கை பொச்சாந்தும் - பொச்சா-த்தல் - poccā- 12 v. tr. 1. Toforget; மறத்தல். புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க (குறள், 719). 2. To deride, ridicule; இகழ்தல். கொடையளிக்கட் பொச்சாவார் (ஆசாரக். 67). சொல்லார் - சொல்லமாட்டார்கள் மருள் - மயக்கம்; திரிபுணர்ச்சி;...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.