Skip to main content

Posts

Showing posts with the label கள்ளுண்ணாமை

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

  குறள் 928 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் [பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை] பொருள் கள்  - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை களித்து - களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல். அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். அறியேன் - அறியாதவன் ; நினைக்ககாதவன் என்பது -  என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை ) கைவிடுக - கைவிடுதல் - கைவிட்டுவிடுதல், விட்டொழிதல் நெஞ்சத்து - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. ஒளித்தல் - மறைத்தல்; மனத்திலடக்குதல்; பதுங்குத...

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

  குறள் 930 கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு [பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை] பொருள் கள்  - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். உண்ணாப் - உண்ணாமை - உணவு உட்கொள்ளாமல் இருத்தல், (பொருள்களை) நுகராது இருத்தல், (பொருள்களை) அனுபவிக்காமல் இருத்தல்; போழ்தில் - பொழுது; நல்வேளை; காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன். களித்தல்  - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல். களித்தானைக் - கள்ளை உண்டு களித்திருப்போர் கால் - ஒருவினையெச்சவிகுதி காணுங்கால் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்; பார்த்தல் உள்ளா-தல் -  uḷ-ḷ-ā-   v. intr. id. +. 1.To submit; வசப்படுதல் 2. To be involved asin suffering; உட்படுதல் துன்பத்திற்குள்ளானான். 3.To become privy to an affair; உடன்படுதல் (W.)   கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவ...

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

  குறள் 927 உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர் [பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை] பொருள் உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. ஒற்றி -    ஒற்றுதல் -  ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்குதல்; தாங்குதல்; தீண்டுதல்; தழுவுதல்; துடைத்தல்; தள்ளுதல்; அடுத்தல்; கட்டுதல்; வீழ்த்துதல்; தத்துதல்; காற்றுவீசுதல்; ஒட்டிக்கொள்ளுதல்; மோதுதல்; ஒற்றடம்போடுதல்; நினைதல்; உய்த்துணர்தல்;  மறைதல் ; உளவறிதல். ஊர்தல் - நகருதல்; பரவுதல்; தினவுறுதல்; நெருங்குதல்; வடிதல்; ஏறிச்செல்லுதல்; கழலுதல்; ஏறுதல். உள்ளூர் - ஊர்நடு; சொந்தஊர். நகப்படுவர் - நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல். எஞ்ஞான்றும் -  எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும். கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை ஒற்றிக் -  ஒற்றுதல் -  ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்...

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

குறள் 926 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர் [பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் துஞ்சுதல்  - தூங்குதல்; துயிலுதல்; சோம்புதல்; தொழிலின்றிஇருத்தல்; சோர்தல்; இறத்தல்; வலியழிதல்; குறைதல்; தொங்குதல்; தங்குதல்; நிலைபெறுதல் துஞ்சினார் - உறங்கினாலும்  செத்தல் - சாதல்; தேங்காய்நெற்று; உலர்ந்துசுருங்கியபனம்பழம், மிளகாய், வாழைமுதலியன; மெலிந்தது; அறக்காய்ந்தது, பசுமையற்றது. செத்தாரின் - செத்தார் -  இறந்தவர் ; மெலிந்தவர் ;  வேறு -  பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல் அல்லர்  - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும். நஞ்சு - விஷம்; விடம்; தீயது; குழந்தைபிறந்தபின்வெளிப்படும்தசைமுதலியன. உண்பார் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல்...

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

குறள் 925 கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல் [பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை] பொருள் கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம். அறியாமை - அறியாத்தன்மை; மடமை உடைத்தே - உடைத்து - உடையது; இருக்கும் பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. கொடுத்து - கொடுத்தல் - ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை. மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; ...

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

குறள் 923 ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி [பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை] பொருள் ஈன்(னு)-தல் -  īṉ-   8 v. tr. [T. īnu, K. M.īn.] 1. To bear, bring forth, yean; கருவுயிர்த்தல் (நாலடி. 400.) 2. To produce, yield, bring intobeing; உண்டாக்குதல் நயனீன்று நன்றி பயக்கும்(குறள், 97). ஈன்றாள் - īṉṟāḷ   n. id. Mother; தாய் ஈன்றாள் பசிகாண்பா னாயினும் (குறள், 656). முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம். தேய்தல் - உரைசுதல்; குறைதல்; மெலிதல்; வலிகுன்றல்; கழிதல்; அழிதல்; சாதல். இன்னாது - தீது; துன்பு இன்னாதால் - துன்பத்தால் என் -  என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிள...

உண்ணற்க கள்ளை உணில்உண்க

குறள் 922 உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார் [பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை] பொருள் உண்ணுதல் -உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். அற்கு -  aṟku  கிறேன், அற்கினேன், வேன், அற்க, v. n. To be permanent, to remain, endure, நிலைக்க. உண்ணற்க - என்றும் எப்பொழுதும் உண்ணாதே ; உட்கொள்ளாத கள்ளை - கள்  - கள்ளு, மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை. உணில் - அப்படி (சொல்வதையும் மீறி) உண்டால் உண்க - நீ அனுபவிப்பாய் சான்றோரான் - அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன், சூரியன் எண்ணம் - நினைப்பு; நோக்கம்; நாடியபொருள்; மதிப்பு; இறுமாப்பு; நம்பிக்கை; சூழ்ச்சி; கவலை; கருத்து; ஆலோசனை; குறிப்பு; கணிதம் எண்ணப்பட - எண்ணத்தில் , மதிப்பில் வேண்டுதல் -  விரும்புதல் வேண்டாதார் - விரும்பாதவராய் முழுப்பொருள் கள் என்னும் மதுவை உண்ணாதே என்கிறார் திருவள்ளுவர்.  அற்கு என்றால் நிலைத்து (எப்பொழுதும்) என்று பொருள். அற்க என்றால் என்றென்றும் வேண்டாம். ஆதலால் கள்ளினை என்றென்ற...

உட்கப் படாஅர் ஒளியிழப்பர்

குறள் 921 உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் [பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை] பொருள் உட்கண் - அறிவு, ஞானம் உட்கப் படாஅர் - பகைவரால் அஞ்சபடார்; மதிக்கபடார் ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ். இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு. இழப்பர் - இழப்பார்கள் எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும். கள்   - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை, பொய் காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல். கொண்டு - கொள், குறித்து ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல். ஒழுகுவார் - நடந்துக்கொள்வோர் முழுப்பொருள் கள் உண்டால் உடம்பு மட்டும் இன்றி உள்ளம் அறிவு சிந்தனை ஆகியவற்றையும் சிதைத்துவிடும். ஆதலால...

களித்தானைக் காரணம் காட்டுதல்

குறள் 929 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று. [பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை] பொருள் களி - மகிழ்ச்சி; கள்முதலியனஅருந்திக்களிக்கை; தேன்; கள்; கட்குடியன்; உள்ளச்செருக்கு; யானைமதம்; குழைவு; குழம்பு; மாவாற்கிண்டியகளி; கஞ்சி; வண்டல்; உலோகநீர்; களிமண். களித்தானைக் - காரணம் - மூலம்; ஏது; கருவி; நோக்கம்; வழிவகை; சிவாகமங்கள்இருபத்தெட்டனுள்ஒன்று காட்டுதல் - காண்பித்தல், அறிவித்தல், நிரூபித்தல், நினைப்பூட்டுதல், பிரதிபலிக்கச்செய்தல், உண்டாக்குதல் கீழ் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம். நீர்க் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. குளி - குளித்தல்; முத்துக்குளி. குளித்தானைத் தீத் - காயச்செய்தல், காந்தவைத்தல், பயிர்முதலியன கருகச்செய்தல் துரீ - நெசவுப்பாவாற்றி (நெய்வார்குச்சு) இயற்று - பாத்திரம் முழுப்பொருள் கள் (மது)  உண்டு மகிழ்ச்சி கொள்...

நாணென்னும் நல்லாள்

குறள் 924 நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்  பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. [பொருட்பால், நட்பியல்,கள்ளுண்ணாமை] பொருள் நாண் -  பெண்டிர் குணம் நான்கு - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு நாணம் -  எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்  நாணுதல் -  வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல். என்னும் -  என்கிற குணத்தினை (உடைய); யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். நல்லாள் - குணத்திற் சிறந்த பெண், நற்குணமுடையவள்; தக்கவர். புறம் -  வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில் . கொடுத்தல் -  ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை. புறங்கொடுத்தல் - தோற்றோடுதல், புறங்காட்டுதல். கள் -...