குறள் 398 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து [பொருட்பால், அரசியல், கல்வி] பொருள் ஒருமை - ஒரேதன்மை; ஒற்றுமை; தனிமை; ஒப்பற்றதன்மை; மனமொருமிக்கை; ஒருமையெண்; மெய்ம்மை; ஒருபிறப்பு; இறையுணர்வு; வீடுபேறு. கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். ஒருமைக்கண் - ஒரு பிறப்பில் தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல். கற்ற - கற்கை - படித்தல் கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி. ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு எழுமையும் - உயர்ச்சி; ஏழ்வகை; ஏழுவகைப்பிறப்பு; ஏழுமுறைபிறக்கும்பிறப்பு. ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து. உடைத்து - உடைதல் - இருக்கும் முழுப்பொருள் ஒருவர் தன்னுடைய பிறப்பில் கற்றவை அந்தப் பிறவியில் மட்டும் பயன் தராமல் மேலும் பிறக்கப்போகும் ஏழுபிறவிக்கும் பயன் தரும் தன்ம...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.