Kural 0391 - 🌱 கல்வி வாழ்வாகுக – Let Knowledge Become Life
Thirukkural 391 on pure learning and living by it—wisdom, leadership, integrity in life. Insights, practices, story.
💡 சிந்தனை - Insight
Key Questions
- Universal – Why does learning often fail to change people’s lives?
- Universal – How can I ensure what I study truly transforms me?
- Universal – Is education about memory, or about the way I live?
- Scholar (leadership) – What is the bridge between knowledge and authentic leadership?
- Scholar (management) – How can organizations ensure learning translates into consistent practice?
- Scholar (business) – Why does strategy fail when knowledge is not executed?
- Scholar (philosophy/stoic) – What makes wisdom credible—knowing or embodying?
- Scholar (education) – How do we measure education’s success—by exams or by life lived?
- Scholar (entrepreneurship) – How can founders align learned insights with day-to-day execution?
- Scholar (Aristotle/ethics) – What turns knowledge into virtue and virtue into habit?
Key Insight
Thiruvalluvar: Knowledge is not possession but practice—learn without blemish, then stand unwavering in it; only then does wisdom breathe life into the world.
📜 குறள் – Kural
குறள் 391
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
[பொருட்பால், அரசியல், கல்வி]
சந்தி பிரிப்பு
கற்க கசடு அறக் கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக
Transliteration
Karka Kasatarak Karpavai Katrapin
Nirka Adharkuth Thaka
— (Transliteration)
kaṟka kacaṭaṟak kaṟpavai kaṟṟapiṉ
niṟka ataṟkut taka.
— (Transliteration)
English Translation
Learn what is worthy, free of fault;
Then live in a way that honors what you learned.
Purpose of This Kural
The purpose of this Kural is to remind us that education is not complete at the stage of learning alone. Its ultimate goal is to ensure that knowledge translates into action, so that life itself becomes aligned with the wisdom gained.
Relevance / Need in Today’s Context
In a world overflowing with information but starving for integrity, this Kural is deeply relevant. It urges us not only to seek clarity in what we learn but also to practice it consistently, bridging the dangerous gap between knowledge and action.
🔤📚பதவுரை - Design of Words
(Building blocks of the verse)
பதவுரை - Word Meanings in Tamil
கல் - kl - கற்கிறேன், கற்றேன், கற்பேன், கற்க, v. a. To learn, study, acquire knowledge, கல்விகற்க. 2. To practice arts, the use of arms, படைக்கலமுதலியபயில.
கற்க - கற்றல்; படித்தல்; பயிலுதல்
கற்க - கற்கத் தகும் நூல்களைப் கற்ககசடு - குற்றம்; அழுக்கு; மாசு; தழும்பு; ஐயம்திரிபுகளாகியகுற்றங்கள்; வடு; அடிமண்டி; குறைவு; பிழை
அற - அல்லாமல் கற்க
கற்பவை - நூல்களில் இருந்து கற்றவை, கற்ற அறங்கள்
கற்றபின் - கற்ற பிறகு
நில் - nil - நிற்கிறேன், நின்றேன், நிற்பேன், நிற்க, v. n. To stand, செங்குத்தாய்நிற்க. 2. To stand still; to stop, halt, tarry, தரிக்க. 3. To abide, endure, continue, தங்க. 4. To cease, be discontinued, stopped, suspend ed, ஒழிய. 5. To be steadfast, to preserve, persist in a course of conduct, நிலைநிற்க
நிற்க - நடக்க வேண்டும், பயில வேண்டும்
அதற்குத் தக - அதற்குத் தகுந்தார்ப்போல்
Unpacking Each Word — Its Meaning and Impact
கற்க (kaṟka) – to learn, to study, to practice
👉 Not just reading, but internal discipline and training. The opening repetition gives force: it is a call, almost an imperative—learning is the starting point.
கசடு அற (kasadu aṟa) – free from blemish, error, impurity
👉 A strong qualifier: not just “learn,” but “learn without distortions.” Purity of learning means without doubt, bias, shortcuts, or corruption. It raises the standard—knowledge must be exact, disciplined.
கற்பவை (kaṟpavai) – the things to be learned (scriptures, disciplines, rightful knowledge)
👉 This is the content—validated, worthy texts/arts, not random accumulation. It points to legitimacy: learning what ought to be learned, not merely what is convenient.
கற்றபின் (kaṟṟapin) – after having learned
👉 Sequence matters: first acquire, then embody. No premature “teaching” or authority without learning. It emphasizes process: order of life, stages of leadership.
நிற்க (niṟkka) – to stand, to persist, to endure, to abide
👉 More than “apply”—it means to live, stand firm, and remain steady. Leadership is not episodic; it is constancy. A leader must stand upon what is learned.
அதற்குத் தக (ataṟkuttaka) – befitting of that, worthy of that knowledge
👉 Climax of the kural: not everyone who “learns” is automatically dignified. True dignity comes only if one lives in a way befitting that knowledge. Knowledge demands responsibility.
Summary in style
கற்க (Learn) – the call to disciplined study.
👉 Learning is the entry gate, the leader’s foundation.
கசடு அற (Purely) – without blemish or distortion.
👉 Integrity in learning is non-negotiable; corrupted knowledge corrupts leadership.
கற்பவை (What is worth learning) – validated texts, disciplines.
👉 The content matters; learn what is true and elevating, not trivial.
கற்றபின் (After learning) – the sequence is sacred.
👉 Only after mastery does the right to act and guide emerge.
நிற்க (Stand firm) – not occasional, but a steadfast embodiment.
👉 Leadership requires constancy, not flashes of wisdom.
அதற்குத் தக (Befit the knowledge) – live in a manner worthy of what is learned.
👉 This is the crown: dignity comes not by knowing, but by becoming equal to the knowledge.
✨ Summary:
This kural raises the bar for leadership: Knowledge alone is not glory; its true power shines only when one embodies it with purity, stands firmly in it, and lives befittingly of it.
Contextual Understanding — Why, Where, What, When, How?
Why the repetition of கற்க?
The double use is deliberate. First, the act of learning itself. Second, the quality of learning (blemish-free). It shifts from action → purity. It makes us pause: “Learning, but what kind of learning?”
Where is this applied?
In leadership, governance, guidance roles. Not in idle philosophy. The kural belongs in the Aram → Leadership cluster: the leader who learns correctly gains the moral right to stand.
What is highlighted?
The transition from knowledge → embodiment. Knowledge is not ornamental. It is not prestige. It must become the ground upon which one stands.
When does it matter?
After one has “learned” (கற்றபின்). This is a stage-wise reminder: premature authority is dangerous. It is not enough to be in the process; only after ripening does leadership legitimacy emerge.
How is it poetically emphasized?
- Word order: கற்க upfront is the imperative opening. நின்று at the end is the climactic embodiment. Beginning → Ending mirror: Learn → Stand.
- Qualifiers: கசடு அற adds weight—purity is inserted before content (கற்பவை).
- Flow: Verb → Qualifier → Object → Stage → Verb → Befitting. This natural poetic order moves from action → refinement → content → sequence → embodiment → worthiness.
- Metaphor: To “stand” (நிற்க) is a physical metaphor. Knowledge is not a possession but a ground, a pillar to stand upon.
📝 பொழிப்புரை - Full Meaning
முழுப்பொருள் — Full Meaning in Tamil
வாழ்வில் பிறந்து இறந்தோம் என்றால் இவ்வாழ்விற்கு ஏதாவது அர்த்தம் உண்டோ? இல்லை என்பதே பதில். வாழ்வின் மெய்ப்பொருள் கண்டு வீடு அடைவதே வாழ்வின் சிறப்பாகும். அத்தகைய மெய்ப்பொருளை அறிய நாம் பல நூல்களை கற்க வேண்டும். இந்த உலகில் பிறந்துவிட்டால் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும். ஆகவே தான் ”கற்க” என்று கட்டளையாக கூறுகிறார் திருவள்ளுவர். [குறள் 356: கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் என்பதை நினைவில் கொள்க].
நாம் பல நூல்களை கற்றாலும் அவற்றை முறையாக கற்க வேண்டும். ஒரு ஆசான் அல்லது சான்றோரின் உதவியுடன் கற்றுக்கொள்ளுதல் உதவியாக இருக்கும். இங்கே நம்மிடம் இருக்கும் ஐயங்களை (கசடுகள்) நீக்கும் அளவிற்கு கற்தல் வேண்டும். நாளை நம்மை யாராவது வந்து உதவி கேட்டால் அவரிடம் இருக்கும் எத்தகைய ஐயங்களையும் களையும் அளவிற்கு கற்தல் வேண்டும். [குறள் 353: ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு என்பதை நினைவில் கொள்க].
நாம் பல நூல்களை கற்றாலும் அவற்றை முறையாக கற்க வேண்டும். ஒரு ஆசான் அல்லது சான்றோரின் உதவியுடன் கற்றுக்கொள்ளுதல் உதவியாக இருக்கும். இங்கே நம்மிடம் இருக்கும் ஐயங்களை (கசடுகள்) நீக்கும் அளவிற்கு கற்தல் வேண்டும். நாளை நம்மை யாராவது வந்து உதவி கேட்டால் அவரிடம் இருக்கும் எத்தகைய ஐயங்களையும் களையும் அளவிற்கு கற்தல் வேண்டும். [குறள் 353: ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு என்பதை நினைவில் கொள்க].
பாலில் கொஞ்சம் மோர் ஊற்றி உறையவிட்டல் அது தன் நிலையை மாற்றித் தயிராகிவிடுகிறது. அதை நாம் கெட்டுப்போன பால் என்று சொல்லுவதில்லை. உறைந்த தயிரை கடைந்தால் மோரும் ஆகும். அப்பொழுது வெண்ணெய் மேலே மிதக்கிறது. வெண்ணையை காச்சினால் (உருக்கி காச்சினால்) நெய் கிடைக்கும். அப்படி உருக்கிய நெய்யின் அடியில் கசடுகள் இருக்கும். ஆதலால் பாலில் இருந்து நெய்யை பிரித்து எடுக்க நாம் பலவற்றை பிரித்து எடுக்க வேண்டும். அதுப்போலவே கற்றலும், நமது ஐயங்களை பிரித்து எடுத்து நீக்க வேண்டும்.
இப்படி கற்றால் நம்மிடம் இருக்கும் அறிவு சிறப்பானதாக அமையும். ஆனால் அப்படி கற்பதனால் மட்டும் என்ன பயன்? ஒன்றுமில்லை. அது அகந்தைக்கே வழி வகுக்கும். அந்த நூல்கள் சொன்ன அறம் படி வாழ்க்கையை வாழ்தலே அவ்வறிவிற்கு சிறப்பாகும். அதுவே படித்தவருக்கும் சிறப்பாகும். அப்படி கற்ற அறம் படி வாழ்தலே மெய்ப்பொருள் உணர்ந்து வீடு அடைய உதவும்.
வாழ்வில் எதைவேண்டுமானாலும் கற்கலாமா? இல்லை என்பதே பதில். வாழ்வின் கால அளவு மிக சிறியது. ”நிற்க அதற்கு தக” என்று கூறுகிறார். பிறர் நம்மை சான்றோன் என்று கூறும் அளவிற்கு நிற்க (வாழ) வேண்டும். அதற்கு தேவையான அறிவு தரும் நூல்களை கற்தல் வேண்டும். அதனால் தான் கற்றதை மறவாதே அதன்படி நில் (வாழ்) என்பதனை ”பொச்சாவமை” அதிகாரத்தில் கூறியுள்ளார்
“குறள் 538
இப்படி கற்றால் நம்மிடம் இருக்கும் அறிவு சிறப்பானதாக அமையும். ஆனால் அப்படி கற்பதனால் மட்டும் என்ன பயன்? ஒன்றுமில்லை. அது அகந்தைக்கே வழி வகுக்கும். அந்த நூல்கள் சொன்ன அறம் படி வாழ்க்கையை வாழ்தலே அவ்வறிவிற்கு சிறப்பாகும். அதுவே படித்தவருக்கும் சிறப்பாகும். அப்படி கற்ற அறம் படி வாழ்தலே மெய்ப்பொருள் உணர்ந்து வீடு அடைய உதவும்.
வாழ்வில் எதைவேண்டுமானாலும் கற்கலாமா? இல்லை என்பதே பதில். வாழ்வின் கால அளவு மிக சிறியது. ”நிற்க அதற்கு தக” என்று கூறுகிறார். பிறர் நம்மை சான்றோன் என்று கூறும் அளவிற்கு நிற்க (வாழ) வேண்டும். அதற்கு தேவையான அறிவு தரும் நூல்களை கற்தல் வேண்டும். அதனால் தான் கற்றதை மறவாதே அதன்படி நில் (வாழ்) என்பதனை ”பொச்சாவமை” அதிகாரத்தில் கூறியுள்ளார்
“குறள் 538
உதாரணமாக உடற்பயிற்சி செய்வது நல்லது, அதனை எப்படி செய்யவேண்டும் செய்யக்கூடாது என்று ஐயமற கற்றப்பின்பு அதனை செய்யவில்லை என்றால் கற்றதனால் என்ன பயன்? அதனை கடைப்பிடித்தால் தான் பயன். அதேப்போல் ஒருவர் பலபலக்கபட்ட அரிசி (polished rice) அதீத மாவு சத்துக்கொண்டாது (refined carbohydrates), சர்க்கரை உடம்பில் தேவைக்கு அதிகமான பசியை தூண்டக்கூடிய தன்மைக்கொண்ட அம்மிலம் (chemical) உடம்புக்கு கேடுவிளைவிப்பது என்று அறிந்துக்கொண்டப்பிறகும் அவற்றை முற்றிலும் நிராகரிக்கவிட்டாலும் குறைந்தது அவற்றின் உட்கொள் அளவை குறைக்கவில்லை என்றால் கற்றதனால் என்னப்பயன்?
மேலும் எல்லா பொதுக்கல்வியும் சராசரி ஞானத்தையே அளிக்கின்றன. தற்கல்வி மட்டுமே தனியான ஞானத்தை அளிக்கிறது. தற்கல்வி என்பது பொதுக்கல்விக்கு மேலதிகமாகவே கற்கப்படும். ஒருவரின் பள்ளிப்படிப்பு பட்டப்படிப்பு படிப்பது பொதுக்கல்வி. ஒரு குருவிடமிருந்து அல்லது நீங்களே முயன்று பலவற்றை கற்றுக்கொள்வது தற்கல்வி. பொதுக்கல்வி பெற்று அதன் மேல் கூடுதல் தேடல்கொண்டுதான் நாம் தற்கல்வியைச் சென்றடைகிறோம்.
இக்குறளில் ”நவில்தொறும் நூல்நயம்” என்ற சொற்றொடரை மட்டும் எடுத்துக்கொண்டால், நாம் நூல்களை வாசிக்கும் தோறும் நமக்கு தென்படுவது அந்நூலுல் உள்ள கருத்தின் நயம், சொல்லின் நயம் போன்ற நயங்களை மட்டும் தான். அது மட்டும் கல்வியாகாது. வெறும் ஆணவம். அதை செயல்படுத்தும் போது தான் அதற்கு பொருள்.
ஆதலால் நிற்க அதற்கு தக.
நினைவில் கொள்க. நம் எப்படி செயல்புரிகிறோமோ அதற்கே பெருமை. அதாவது “நிற்க”. நாம் பெற்ற கல்வியினால் மட்டும் அல்ல. கல்வி ஒரு கருவி மட்டுமே. அதை பயன்ப்படுத்தி நிற்க வேண்டும்.
=====
Essence in Tamil
கற்க – வாழ்க்கை என்பது ஒரு தொடர்ந்த கல்விப் பயணம். பிறந்தவுடன் கற்கத் தொடங்கி, வாழ்நாளெல்லாம் கற்க வேண்டியது கட்டளையாக வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
கசடு அற – கற்றல் தூய்மையுடன் இருக்க வேண்டும்; ஐயங்கள், பிழைகள், மாசுகள் நீங்கிய தெளிவான கல்வி. ஆசான், சான்றோர் வழிகாட்டலால் கற்றல் பிழை நீக்கும் பயணம் ஆகிறது.
கற்பவை – எதை வேண்டுமானாலும் அல்ல; வாழ்வை உயர்த்தும் நூல்கள், அறத்தைக் காட்டும் கலைகள், சமூகத்திற்குப் பயனளிக்கும் அறிவு.
கற்றபின் – கற்றல் முதல் நிலை; அதுவே நிறைவு அல்ல. கற்றல் அடுத்த படிக்குத் தயாராக்கும்.
நிற்க – கற்றதை வாழ்வில் நிறுத்தல்; அடித்தளமாக்கல்; சற்றே கடைப்பிடிப்பது அல்ல, வாழ்நாள் முழுதும் நிலைத்திருத்தல்.
அதற்குத் தக – கற்ற கல்விக்கு உரியபடி வாழ்தல்; கல்விக்கு அவமானம் அல்ல, சிறப்பாகும் விதத்தில் நடந்து நிலைத்தல்.
Poetic Flow (Why word order matters)
கற்க (begin) → கசடு அற (purify) → கற்பவை (choose worthily) → கற்றபின் (ripen) → நிற்க (embody) → அதற்குத் தக (be worthy).
👉 The verse itself is a ladder of transformation: from raw learning → refined knowledge → lived leadership.
=====
மற்ற உரைகள் — Interpretations by Other Tamil Commentators
பரிமேலழகர் உரை
[அஃதாவது , அவ்வரசன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல் , அவையாவன , அறநூலும் , நீதிநூலும் , யானை குதிரை தேர்படைக்கலம் என்ற இவற்றின் நூல்களும் முதலாயின . அரசன் அறிவுடையன் ஆயக்கால் தன்னுயிர்க்கே அன்றி மன்னுயிர்க்கும் பயன்படுதல் நோக்கி , இஃது அரசியலுள் வைக்கப்பட்டதாயினும் பொதுப்படக் கூறுகின்றார் . மேல் ' தூங்காமை கல்வி ' (குறள் . 383 ) எனத் தோற்றுவாய் செய்த மாட்சியை விரித்துக் கூறுகின்றமையின் , இஃது இறை மாட்சியின் பின் வைக்கப்பட்டது .]
கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்தலினும் (நாலடி. 250)துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின்கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும்நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும்இதனாற் கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை
கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.
மு.வரதராசனார் உரை
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.
புலியூர்க் கேசிகன் உரை
கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
கற்றுத் தெளிந்ததில் காலமெல்லாம் வாழ்க.
அவனிவன் பக்கங்கள் - அஷோக் சுப்ரமணியன் உரை
அஷோக் உரை
யான் தமிழ் காணொளி
மேலும்/More
கல்லாப் பிழை சொல்லாப் பிழை நில்லாப் பிழை (நன்றி: ஜெயமோகன் / பொன்னியின் செல்வன் டீசர் வெளியிடு உரை @2:20)
1) கல்லாப் பிழை - நாம் நமது முன்னோர்கள் பெருமையை, வரலாற்றைப் கற்க வேண்டும். கற்கவில்லையென்றால் அது கல்லாப் பிழை.
2) சொல்லாப் பிழை - நாம் நமது முன்னோர்கள் பெருமையைப் பற்றி வரலாற்றைப் பற்றி அடுத்த தலைமுறையினர்க்கு சொல்ல வேண்டும். அப்படி பெருமைகளை எடுத்துச் சொல்லவில்லையென்றால் அது சொல்லாப் பிழை
3) நில்லாப் பிழை - நாம் கற்றவற்றில் இருந்து அதற்கேற்ப நடக்கவில்லை என்றால், நமது முன்னோர்களின் பெருமையடைய காரணமாய் இருந்த வழி நிற்கவில்லையென்றால் அது நில்லாப் பிழை
நோயின்றி வாழமுடியாதா? - மூ.இராமகிருட்டிணன். தமிழ்நாட்டின் முதல் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி. உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம்
மூளையின் செரியாமை
நமது உடலால் அல்லது செரிமான உறுப்புகளால் எவ்வளவு செரிக்க முடியுமோ அவ்வளவு நாம் உண்பதில்லை. ஒருநாளும் அளவறிந்து உண்பதில்லை. நமக்கு அளவு தெரியவும் தெரியாது.
அளவறியாமல் உண்பதினாலே நாம் பிணிகளால் பின்னப்படுவது போல நாம் அளவறிந்து படிப்பதும், கேட்பதும், சிந்திப்பதும் இல்லை. நம்முடைய மூளையாலும், மனதாலும் எவ்வளவு வாங்கி செரிக்க முடியுமோ அந்த அளவுக்கு மூளைக்கு வேலை, செய்தி கொடுப்பதில்லை.
வயிற்றுக்கு எப்படி செரிக்க முடியாத அளவுக்கு உணவு கொடுத்து வயிற்றையும், உடலையும் கெடுக்கிறோமே அது போல மனதிற்கும் செரிக்க முடியாத அளவிற்கு செய்திகளை கொண்டு போய்க் கொட்டிக் கொண்டே இருக்கிறோம். எவ்வளவுதான் செரிக்க முடியும் நம் மனதால். அளவு நமக்குத் தெரியாது. வயிற்றுக்கே தெரியவில்லை என்றால் மனதிற்கு எப்படித் தெரியும்?
எப்படி வயிற்றில் செரிக்கா விட்டால் பேதி ஆகிறதோ, வாந்தி ஆகிறதோ அது போல மூளை செரிக்காவிட்டால் அவன் பேசிக் கொண்ஏ இருப்பான். எதையாவது எழுதிக் கொண்டே இருப்பான். அப்புறம் பைத்தியமாகத் திரிவான். பைத்தியம் என்பது வேறொன்றும் இல்லை. மூளையின் செரியாமையினால் ஏற்பட்ட ஒரு எதிர் விளைவு.
மனதின் உள்வாங்கும் சக்திக்கேற்ப சரியான அளவு செய்திகளை, சிந்தனைகளை அளிக்க வேண்டும். வள்ளுவரும் கசடற கற்க, அதை அளவோடு கற்க, கற்றபின் எவ்வளவு உண்ணால் நிற்க முடியுமோ அதற்கேற்ப கற்க. கற்றலிலும் எந்த அளவிற்கு நம்மால் பின்பற்ற முடியுமோ அந்த அளவிற்குக் கற்க என்று வைத்துவிட்டால் படிக்க வேண்டிய நூல்கள் எவ்வளவு இருக்கும்? தெளிவான சிந்தனை ஒன்று இருந்தது என்றால் அவன் படிக்க வேண்டிய வேலையே இருக்காது. நாமே நூலாக மாறுகிறோம். ஆசிரியராக மாறுகிறோம். செயலாக மாறுகிறோம்.
Comprehensive English Meaning & Poetic Rendering
Thirukkural 391 emphasizes that learning is not merely the act of gathering information but the pursuit of pure and purposeful knowledge. “Learn what is to be learned” signals that one must be selective, seeking wisdom that uplifts life, society, and inner growth. “Without blemish” reminds us that knowledge must be free from distortions, half-truths, and errors, purified like gold refined of impurities.
Yet, the Kural insists that learning alone is not enough. After acquiring such untainted knowledge, one must allow it to shape life and conduct. The phrase “stand by what you learned” demands application—knowledge must not remain in books or memory but must manifest in daily decisions, behaviors, and leadership. Otherwise, learning remains ornamental, hollow, or even harmful.
Thus, the true worth of education is measured not by possession but by embodiment. This Kural teaches that when knowledge and action align, learning becomes wisdom, character becomes leadership, and life itself becomes a testimony to what one has studied. In this harmony of learning and living lies both personal fulfillment and social responsibility.
Kural 391: Leadership Lens – Educated Person vs. True Leader
1. Mere Educated Person (surface level)
- கற்க (learn): Reads, memorizes, collects facts.
- கற்பவை (what is to be learned): May even read noble texts but only as content, not life.
- கற்றபின் (after learning): Stops here. Knowledge becomes ornament or authority badge.
👉 This person knows but does not stand.
2. True Leader (Thirukkural’s standard)
- கற்க (learn): Not optional; foundational discipline.
- கசடு அற (without blemish): Their learning is untainted by shortcuts, misinterpretation, ego, or prejudice.
- கற்பவை (what must be learned): Chooses subjects of real relevance—virtues, laws, disciplines that guide life & society.
- கற்றபின் (after learning): Knowledge is not left in books. It passes into life.
- நிற்க (stand firm): Leadership is embodiment. The leader stands like a pillar on the knowledge, making it visible through action, justice, consistency.
- அதற்குத் தக (befitting it): The final stamp of legitimacy: does the leader live worthy of the knowledge they claim? If yes, they rise to the stature of a true leader.
Key Distinction
- An educated person can quote knowledge.
- A leader must stand upon it.
In Tamil poetic force:
- The kural does not end with “learn.” It ends with “stand befittingly.” That is deliberate:
- End word = climax.
- Leadership = not accumulation, but embodiment.
Leadership Application (Modern)
- Corporate: A manager may have MBAs (கற்றல்) but if their decisions don’t reflect fairness, courage, and consistency (நிற்க அதற்குத் தக), they remain “educated” but not “leaders.”
- Politics: A ruler who knows dharma/law but does not stand firmly by it fails the people.
- Family: A parent who teaches values but does not embody them is “instructive” but not a role model.
✨ Essence:
Kural 391 is a filter of legitimacy.
Not everyone who learns deserves to lead.
Only the one who lives in harmony with what they learned, without blemish, standing firm and befitting it is a true leader.
English Meaning - As I taught a kid - Rajesh
Learn well, learn good things, learn without mistakes and stand by what you have learnt and act accordingly.
Questions that I ask to the kid
How should you learn? What should you do after studying?
Poetic Rendering
Learn the truth, free of stain,
Not for pride, nor for gain.
Having learnt, let your life declare,
The worth of knowledge, lived with care.
Books may teach, but deeds endure,
Stand by wisdom—steadfast, pure.
📚🔭 சிந்தனைவெளி - Global Parallels
தமிழ் இலக்கியச் செல்வம் - ஒப்புமை — Parallels in Other Tamil Literary Works:
நாலடியார் (135) பாடலொன்று, கற்றலின் சிறப்பை இவ்வாறு கூறுகிறது.
“கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைப்பிற் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலூண் குருகிற் றெரிந்து”
அறநெறிச் சாரப்பாடல் (141) கற்றலின் பெருமையை இவ்வாறு கூறுகிறது.
“எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவதற்கு
மக்கட் பிறப்பில் பிறிதில்லை – அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்”
Parallels from World Thought:
- Aristotle (Ethics)
- “We are what we repeatedly do. Excellence, then, is not an act, but a habit.”
- True learning is not possession of knowledge but the cultivation of virtuous habits through practice.
- Epictetus (Stoic philosopher)
- “Don’t explain your philosophy. Embody it.”
- Wisdom is measured not by words but by the way one lives.
- Peter Drucker (Management thinker)
- “Knowledge has to be improved, challenged, and increased constantly, or it vanishes.”
- Knowledge without disciplined application and renewal becomes useless in leadership.
- Mahatma Gandhi
- “An ounce of practice is worth more than tons of preaching.”
- Learning achieves meaning only when lived out in action.
- Amartya Sen (Nobel laureate in Economics)
- Stressed “capability” over mere possession of resources.
- Similarly, education’s worth lies not in having it but in the capacity it creates to live and act differently.
- Robbins
- Learning is a relatively permanent change in behavior that occurs as a result of experience,”
🥁 எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு — Thematic Snippets from Venmurasu
எழுத்தாளர் ஜெயமோகன்’இன் வெண்முரசு-தீயின் எடை - 3 கீழ்க்காணும் வரிகள் வருகிறது.
கசப்புடன் புன்னகைத்து கிருபர் சொன்னார் “நன்று. இக்களத்தில் தெய்வங்கள் நிறைந்திருக்கின்றன என்கிறார்கள். இங்கு இவ்விருளில் எங்கேனும் காலம் கடந்து செல்லும் தெய்வம் ஒன்று நின்றிருக்குமெனில் நாளை இக்களத்தை எழுதப்போகும் புலவனின் காதில் இச்சொற்களை அது சென்று சொல்லட்டும். நூல்களை சொல்லாடிக் கற்பவன் ஒன்றையும் பெற்றுக்கொள்வதில்லை. பகுத்தும் பிரித்தும் மாற்றுத்தரப்பு கண்டும் சீர்தூக்கியும் வகுத்துக்கொள்ளும் அறமென்று ஒன்று இன்று இப்புவியில் இல்லை.”
“வில்லிலிருந்து எழுந்த கணமே சென்று தைக்கும் இலக்கு போன்றது அறம். வினா எழுந்த மறுகணமே விடையென நின்றிருப்பதே அறம். உசாவி அறிவது அறமல்ல. உள்ளெழுந்து நின்றிருப்பது மட்டுமே அறம். உசாவுவதும் மாற்று நோக்குவதும் மறித்து எண்ணுவதும் வீண் ஆணவம் மட்டுமே. ஆகவேதான் நவில்தொறும் நூல் நயம் மட்டுமே காண்பர் அறிஞர் என்று சொல்லப்பட்டிருக்கிறது” என்றபின் கைகளைக் கூப்பி கண்களை மூடினார் கிருபர்.
🧠 அகப்பயணம் – Inner Exploration
Scholar’s Questions — Valluvar’s Answers
- Universal – Why does learning often fail to change people’s lives?
Thiruvalluvar: Learning without cleansing doubts, pride, and errors is like pouring nectar into a muddy vessel—it cannot nourish the soul. - Universal – How can I ensure what I study truly transforms me?
Thiruvalluvar: When you learn without blemish, and then live by what you have absorbed, knowledge ceases to be memory—it becomes your measure of life. - Universal – Is education about memory, or about the way I live?
Thiruvalluvar: Knowledge rests not in the tongue but in the feet that walk it; truth shines when learning moves from lips into conduct. - Scholar (Leadership) – What is the bridge between knowledge and authentic leadership?
Thiruvalluvar: The leader who embodies what is learned becomes credible; command is hollow unless character stands behind it. - Scholar (Management) – How can organizations ensure learning translates into consistent practice?
Thiruvalluvar: Systems endure when what is trained is lived daily—policies written but not practiced dissolve into mere paper. - Scholar (Business) – Why does strategy fail when knowledge is not executed?
Thiruvalluvar: A plan without practice is a mirage; success belongs to the one who anchors knowledge in action. - Scholar (Philosophy/Stoic) – What makes wisdom credible—knowing or embodying?
Thiruvalluvar: Wisdom is not weighed by speech but by steadfastness—enduring in what is known when storms rise. - Scholar (Education) – How do we measure education’s success—by exams or by life lived?
Thiruvalluvar: True learning stands the test of life, not paper; the exam is not the hall but the world itself. - Scholar (Entrepreneurship) – How can founders align learned insights with day-to-day execution?
Thiruvalluvar: Insight matures into enterprise only when practiced relentlessly—ideas unpracticed are dust in the wind. - Scholar (Aristotle/Ethics) – What turns knowledge into virtue and virtue into habit?
Thiruvalluvar: Knowledge becomes virtue when freed from flaw, and becomes habit when the learner abides in it unbroken.
Thiruvalluvar: Knowledge is not possession but practice—learn without blemish, then stand unwavering in it; only then does wisdom breathe life into the world.
🧠 Think With Me — Questions for Curious Young Minds (Ages 13–21)
- Can you think of a subject you studied (like science, math, or a story) that changed the way you behave, not just what you remember?
This helps you see education as transformation, not just memory. - What is one rule or lesson at school/home you know well—but sometimes forget to follow? Why is it hard to live by what we know?
This builds self-awareness about the gap between knowing and doing. - If your best friend copied homework but you remembered the rule about honesty, would you just “know it” or would you stand by it?
This turns reflection into courage—the strength to live by knowledge.
🌿 கதைகள் - Stories
Story: The Carpenter Who Forgot His Tools
A skilled carpenter was hired to build a bridge. He had read hundreds of manuals and memorized every design. But when the day came, he stood empty-handed—he had brought no tools. Though he “knew,” he could not build. Another carpenter, less read but steady in practice, built the bridge that stood firm.
Moral (Essence of the story):
Knowledge unused is emptiness; practice is the tool that makes knowledge real.
Connection to Everyday Life:
In life, we often “know” what is right—exercise, honesty, patience—but it matters only when we stand in it daily.
🌙 Bedtime Story: The Boy Who Remembered and the Boy Who Stood
Two boys learned a lesson: “Always share.” The first boy could recite it a hundred times. The second boy, when he had two sweets, gave one away. Years later, the first boy was still reciting, while the second boy was remembered by all as the kindest in the village.
Moral (Essence of the story):
Real learning is not in memory but in action.
Connection to Everyday Life
This helps children see that small daily acts are what turn knowledge into who we are.
🛠️நடைமுறை - Practical Tools
Wisdom becomes powerful only when lived. This section offers simple, actionable ways to apply the kural’s insight in daily life.
1. Leadership (Harvard Kennedy-style):
Anchor credibility by walking what you teach. Use “walk-the-talk reviews” where leaders are evaluated not on words but visible actions.
2. Management (MIT Sloan-style):
Create systems of “knowledge into process”—after every training, assign live projects where lessons must be applied, not just tested.
3. Business Strategy (Wharton-style):
Use “Execution Dashboards”—track whether strategic learning is being applied in operations, not left in planning documents.
4. Education & Teams (Stanford B.school-style):
Practice “Embodiment Labs”—roleplay situations where principles must be lived out, not just recited.
5. Philosophical/Self (General):
Before sleep, reflect: Did I live one thing today I already knew? If not, the knowledge has not yet entered life.
Micro Practices:
- Every morning, pick one small lesson you already know (kindness, punctuality, patience) and practice it consciously that day.
- At night, ask: Did I stand by what I knew, even once, today?
🌸🧐💎🔍 நுட்பத்தின் இதழ்கள் — Petals of Subtle Insight (Applications in Today’s World)
Like petals of a flower, each kural opens to many meanings—this section shows its relevance through different lenses today. It’s about breadth of meaning, showing readers the range of modern applications of the kural.
Category: Leadership & Governance
Theme: Integrity is leadership’s backbone—learn rightly, then live by it.
Why: The Kural insists that credibility comes only when practice matches knowledge.
Category: Management & Organizations
Theme: Systems fail when learning stays in manuals, not in execution.
Why: Perfect fit for organizational learning and behavior.
Category: Education & Self-Mastery
Theme: True study means flaw-free learning that becomes habit.
Why: Education is tested not in exams but in life.
Category: Business & Strategy
Theme: Knowledge becomes value only when practiced daily.
Why: A strategy is nothing unless it is lived in operations.
Category: Philosophy & Stoicism
Theme: Stand firm in what you know; wisdom is endurance in conduct.
Why: Resonates with Stoic and ethical traditions.
Category: Entrepreneurship & Innovation
Theme: Insights turn to enterprise when they are embodied in daily grind.
Why: Founders succeed when learning is execution.
🌿 முக்தாய்ப்பு - Punchline
“கற்றதை நிலைநிறுத்து – Live the Knowledge.”
Learning is only the first step; its true glory lies in living by it with integrity, letting your life reflect what you know.
Join the conversation