குறள் 595
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
வெள்ளத்து - வெள்ளம் - நீர்ப்பெருக்கு; பெருக்கம்; கடல்; கடலலை; நீர்; ஈரம்; மிகுதி; ஒருபேரெண்; உண்மை.
அனைய - அத்தன்மையான; ஒத்த.
மலர் - பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர்.
நீட்டம் - நீளம்; ஓசையின்நீட்சி; நீட்டுகை; தாமதம்.
நீடுதல் - நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுகடத்துதல்; தேடுதல்; பெருகுதல்
மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்.
தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.
உள்ளத்தினில் - உள்ளத்தின் உள்ளே
உள்ளத்து - உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.
அனையது - அத்தன்மையான; ஒத்த.
உயர்வு - மிகுதியாதல்; உயர்ச்சி உயரம் விருத்தி, மேன்மை வருத்தம் உயர்வுநவிற்சியணி
முழுப்பொருள்
நீர் மலர்களான ஆம்பல், அல்லி, தாமரை முதலியவை அதன் நீர் மட்டத்தின் உயர்த்திற்கு ஏற்ற அளவிற்கு ஏற்றார்ப்போல் வளரும். நீர் மட்டம் உயரமாக இருப்பின் தண்டின் உயரமும் அதிகமாக இருக்கும் மலரும் பெரிதாக இருக்கும். நீர் மட்டம் குறைவாக இருப்பின் தண்டின் உயரமும் சிரிதாக இருக்கும் மலரும் சிரிதாக இருக்கும். (மலரை தாங்கும் தண்டு உயரமாக இருந்தால் தான் பெரிய மலர்களை தாங்க முடியும் என்பதுக்கூட காரணமாக இருக்கலாம்). அதுப்போல ஒருவரின் உள்ளத்து ஊக்கத்தின் அளவிற்கே அவரது உயர்வும் / உயர்ச்சியும் இருக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். நீரின் மேல் அலைகள் இருக்கும். ஆழத்தில் அசைவுகள் இருக்காது. நம் ஊக்கத்திலும் அசைவுகள் இருக்கக் கூடாது.
ஆதலால், ஒருவர், தான் வாழ்வில் பெரிய இடத்திற்கு செல்வோம் பெரிய சாதனைகள் படைப்போம் என்று நம்பிக்கையாக இருப்பார் என்றால் அதற்கு உழைத்தார் என்றால் அவர் பெரிய இடத்திற்கு செல்லக்கூடும்.
பி.கு: பல உரைகள் நீரின் அளவு உயரமாக இருந்தால் மலரும் உயரமான இடத்தில் மலரும் (அல்லது நீரின் உயரம் தண்டின் உயரம்) என்று பொருள் உரைத்துள்ளன. ஆனால் உயரத்தில் மலர்வதை மட்டும் திருவள்ளுவர் கூறவில்லை. நீர் உயரத்திற்கு ஏற்ப மலரின் அளவும் பெரிதாகும் என்பதே கூறவந்தது. உயர்வைப் பற்றிச் சொல்வதால் நீளம் மட்டுமே போதுமான உவமை என்று எடுத்துக்கொள்கின்றன. மலர்ச்சி என்றால் மலர்களில் சிறிதாக மலர்பவையும், பெரிதாக மலர்பவையும் அழகே. கொண்டாடப்படுபவையே! இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால், திருக்குறளெல்லாம் மனோரஞ்சிதப் பூவைப் போன்றவை எனலாம். ஆனால் அத்தகைய விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இல்லை.
ஏனெனில் பெரிதாக பூக்கக்கூடிய மலர் பெரிதாக பூத்தால் தானே அழகு? சிறிதாக பூத்தால் காண்போரின் மனம் மலர் சிரிதாகவேனும் பூத்ததே என்று மகிழ்ச்சி அடைந்தாலும் அதன் முழு வீர்யம் காண்பவர்க்கு தெரியும் தானே?
மேலும் நீட்டம் என்றால் நீடுதல் (அகராதி:: நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுகடத்துதல்; தேடுதல்; பெருகுதல். )
வெள்ளம் (நீர்) - ஊக்கம்
மலர் (பூ) - உயர்வு
நீர் அதிகமாக இருந்தால் தண்டு தானாகவே அதிகமாக இருக்கும். ஆதலால் மலர் நன்றாக மலரும். நாம் எல்லோரும் காண்பது மலரை தான். நீர் (ஊக்கம்) தான் தண்டு (உழைப்பு) வளர முக்கியமான காரணம். நாம் வெளியே காண்பது மலர் (என்னும் உயர்வு).
மேலும், ”மலர்” நீட்டம் என்று தானே வள்ளுவர் கூறுகிறார். தண்டு நீட்டம் என்று சொல்லவில்லையே.
இரண்டாவதாக ஒரு செம்பருத்தி செடியினை ஒரு 1.5 அடி ஜாடியில் வைத்தால் அது ஒரு 2-3 அடியளவு உயரம் வளரும். அதுவே தரையில் வைத்தால் 5-6 அடி வளரும். இங்கே நாம் முதலில் வைப்பது ஜாடி (ஊக்கத்தையே). வேர் (உழைப்பு) ஆழ பாய்வது அதன் பின்பு தானே? வேர் ஆழம் பாயிந்தால் செடியும் நன்றாக வளரும். அதன் பூக்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கும். மேலும் பெரிய ஜாடியாக இருப்பினும் தரையில் இருப்பினும் அச்செம்பருத்திக்கு தண்ணீர் போதுமானதாக இல்லையேல் அம்மலர்கள் சும்பிபோய் சிறிதாக பூக்கவும் கூடும். (எங்கள் வீட்டில் தண்ணீர் கம்மியாக இருந்த நாட்களில் மலர்கள் முழுவதுமாக மலரமால் சிறிதாக பூத்ததனால் என் மனம் வாடிய நினைவுகள் உண்டு)
ஆதலால் திருவள்ளுவர் தண்டை விட மலரை உயர்வாக கூறி இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறேன்.
Standard-size lotus grow well in containers that are 3 to 4 feet in diameter, while smaller or dwarf-size lotuses can be planted in smaller, bushel-size vessels. Again, though, the largest and deepest possible pot is preferred.
When choosing a size, ask yourself, “How much room do I have? How big do I want my lotus to be?” Lotus can be found in many sizes, from tiny Exquisite of Bowl Lotus (also called micro lotus) between 6 and 8 inches tall, to small or dwarf lotus (1 to 2 feet tall), to medium lotus (2 to 4 feet tall), to large/tall lotus (giant plants standing more than 4 feet tall).
ஔவை மூதுரையில் நுண்ணறிவு கற்ற நூல்களின் அளவே இருக்கும் என்பதற்கு இதைப்போன்ற ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லுகிறார் – “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு”. இவ்வரிகளும் இக்குறளின் கருத்தை ஒட்டியிருப்பதைக் காணவும்.
“வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்தனையது உயர்வு”
இக்குறளில் மரபான வாசிப்பு இரண்டாம் பகுதிக்கு அதிக அழுத்தம் தந்து, அதற்கான உதாரணமாக முதல் பகுதியை, அவ்வுவமையை, கண்டு வந்தது. நவீன வாசிப்பு வெள்ளத்தை ஒரு படிமமாக [poetic image] எடுத்துக் கொள்ளும். அப்போது அப்படிமம் சர சரவென்று வளர்ந்து காட்சிகளை உருவாக்கியபடியே போகும். வெள்ளத்தின் அலை, ஆழம், அதன் நிழற் கோலங்கள், அதில் ஊடுருவும் ஒளி, அதன் அடிப்பரப்பின் சேற்றுத் தடம், அங்கு வேர் விட்டு மேலெழுந்த மலர்… அம்மலர் எது என்ற கற்பனை அவனை மேலதிக கவிதைக் கற்பனைகளுக்கு இட்டுச் செல்லும். உள்ளத்தின் அடியாழத்தில் வேர் கொண்டு மேலெழுந்து, அலைகளில் ததும்பி நின்றாடி, விண் நோக்கி மலர்ந்து, ஒளி உண்டு, மிளிரும் அம்மலர் அவன் மனதிலும் விரியக் கூடும்.அக்கணமே கவிதையின் மெய்க் கணம்.
இங்கிருந்து நீங்கள் விழையும் செல்வம் அனைத்தையும் கொண்டு செல்லலாம்” என்றாள் நந்தை. “வடக்கின் அரசன் அளித்த அம்பு அன்றி வேறேதும் கொண்டுசெல்லப்போவதில்லை” என்றான் அர்ஜுனன்.
“வீரரே, நீரின் தலைவனை வென்றுகடக்கும்பொருட்டு கிளம்புகிறீர்கள். நீரின் உண்மை இரண்டு. ஒளிப்பரப்பாக அலையடிக்கும் மேல்தளம் அதன் முகம். இருண்டு இருண்டு செல்லும் அசைவற்ற ஆழம் அதன் அகம்” என்றாள் மீனாட்சி. “நீர்முகத்தில் மலர்ந்திருக்கும் தாமரைகளின் தேவி பதுமை. நீராழத்தில் படிந்திருக்கும் சங்குகளின் அரசி சங்கினி. சங்கு ஆழத்து வெண்தாமரை. வெண்தாமரை அலைமேல் மலர்ந்த சங்கு.”
“சங்கும் தாமரையும் ஏந்திய வருணன்” என்றாள் மீனாட்சி. “
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் - நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு - அது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி.
('மலர்' ஆகுபெயர். நீர்மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட 'வெள்ளத்து அனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான் மிகுதல்.).
மணக்குடவர் உரை
புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி; அதுபோல மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம். இஃது ஊக்கம் இதனானே உண்டாமென்றது.
மு.வரதராசனார் உரை
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
சாலமன் பாப்பையா உரை
நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.
Thirukkural - Management - Thoughts
Positive thoughts are an everlasting wealth. Let us see what a person's thoughts can do to his
success. Valluvar uses a simile in Kural 595.
The lotus rises with the water,
And a man as high as his will
The length of the root of a lotus plant depends on the depth of the water in which it grows. Similarly, the height of a person's success, personal and professional, depends on the depth of his thoughts. That thought establishes the connection between a person's thoughts and his personal and professional achievements.
English Meaning - As I taught a kid - Rajesh
The taller the water tank the taller the stem of the lotus. The taller the stem of the lotus, more the flower blossoms. Similarly the more a person has will power and perseverance, and relentlessly puts efforts, the more the growth would be
Questions that I ask to the kid
When and how will your growth be high?
What does Lotus flower signify you?
No comments:
Post a Comment