பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

குறள் 248
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

அற்றார் - பொருள்இல்லாதவர்; முனிவர்

பூப்பர் - பூத்தல் - மலர்தல்; தோன்றுதல்; உண்டாதல்; பொலிவுபெறுதல்; பூப்படைதல்; கண்ணொளிமங்குதல்; பூஞ்சணம்பிடித்தல்; பயனின்றிப்போதல்; தோற்றுவித்தல்; படைத்தல்; பெற்றெடுத்தல்.

ஒருகால் - ஒரு காலத்தில் 

அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

அற்றார் -  பொருள்இல்லாதவர்; முனிவர்

அற்றார் -  பொருள்இல்லாதவர்; முனிவர்

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

அரிது அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

முழுப்பொருள்
பொருள் இவ்வுலகத்தில் வாழ தேவையான ஒன்று அதுப்போல துறவறத்தில் வாழ அருள் அவசியம் என்று முன்னர் கூறியிருந்தார். ஆனால் இல்லறத்தில் பொருள் தேவையான ஒன்று தானே தவிர அடிப்படை தகுதி அல்ல. ஆனால் துறவறத்தில் அருள் என்பது அடிப்படை தகுதியாகும்.

அதனால் தான் திருவள்ளுவர் கூறுகிறார் இல்லறத்தில் பொருள் இல்லாதவர் ஒருவர் (வறியவர்) ஒரு காலத்தில் செல்வத்தை பெற்று பொலிவடைய முடியும். உழைப்பு, சூழல், ஊழ்வினை, குடும்ப சொத்துக்கள் என்று ஏதாவது வந்து கைக்கொடுக்க கூடும். ஆனால் அருள் ஒருவனை விட்டு விலகியது என்றால் அதனை அவன் மறுபடியும் பெறுவது மிக மிக அரிது. அதாவது ஒருவதடவை போன அருளை மறுபடியும் பெறுவது மிக மிக மிக கடினம். மீண்டும் அருளுள்ளவராய் ஆதல் முடியாது. அருள் இல்லாதவருக்கு துறவறமும் இல்லை அதனால் வீடுபேறும் இல்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பொருள் அற்றார் ஒருகால்பூப்பர்- ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர், அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது - அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒருகாலத்தும் ஆதல் இல்லை. ( 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது, மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.).

மணக்குடவர் உரை
பொருளில்லாதார் ஒருகாலத்தே பொருளுடையராதலும் கூடும்; அருளில்லாதார் கெட்டார், பின்பு ஆக்கமுண்டாகாது. இது பொருளின்மையேயன்றி எல்லாக் கேடு முண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.

Thirukkural - Management - Ethical Behavior
We are familiar with the phrase overnight-riches. If person does not have wealth or if a person loses his properly earned wealth, he can earn them over a period. However, if a person does not have grace, virtue or kindness, he can never become a noble person, even if he becomes wealthy, admonishes Kural 248.

The poor may be rich one day, but the graceless
Will always lack grace.

A person with only wealth but not kindness will lose his wealth and lose his popularity. That sort of loss is huge, irreparable, and destructive to self.

No comments:

Post a Comment