Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

வலியார்முன் தன்னை நினைக்கதான்

குறள் 250: அதிகாரம் : அருளுடைமை 

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லு மிடத்து.

வலியார் - (நம்மை விட)வலிமை உடையவர் 
நினைக்கதான் - நினைக்காதவன் 
மெலியார் -(நம்மை விட) எளியவர், நலிந்தவர் 
மேல் செல்லும் - வெகுண்டுழுதல்,அதிகாரம் செலுத்துதல் (dominate)

விளக்கம் :
தன்னை விட மெலிந்தவர், பலவீனமானவர் முன் தன பலத்தை பிரயோகிக்க முயலும் அருள் இல்லாதவன் , அவ்வாறு செய்யும் முன் , அவனை விட வலிமை உடையவர் முன் அவன் அஞ்சி நிற்க வேண்டிய நிலையம் வரும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என உரைக்கிறார் வள்ளுவர் .

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு " என்னும் சொல்லாடல் கூட இக்குறளை ஒற்றியே அமைந்து உள்ளது . 

இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, "திருவிளையாடல்" திரைப்படத்தில் ,ஹேவனாத  பாகவதராக வரும் பாலைய்யா - சிவா பெருமானாக வரும் சிவாஜி பகுதியை கூறலாம்.
தன பாட்டுக்கு பாண்டிய நாடே,மற்றும் ஆண்டவனே அடிமை  அடிமை என்றும், தன்னை மிஞ்ச எவரும் இல்லை என்றும் அகந்தையில் கூறும் ஹேவனாத பாகவதரை சிவா பெருமான் சாதாரண விறகு வெட்டி போல் தோன்றி அவரை மிஞ்சும் விதமாக பாடி அவர் அகந்தையை அடக்கி வலியவர்க்கு வலியவர் உலகில் உண்டு என உணர்த்துவார் .


பரிமேலழகர் உரை:
வலியார் முன் தன்னை நினைக்க - தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து - அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, 
அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.).

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: தன்னின் மெலியார்மேல் தான் செல்லும் இடத்து - தன்னினும் மெலியவர்மேல் தான் (வெகுண்டு) செல்லுங் காலையில், வலியார்முன் தன்னை நினைக்க‡(தன் மேல் வெகுண்டுவரும்) வலியார் முன் தன் நிலையை நினைக்கக் கடவன்.

அகலம்: தன்னின் வலியார் தன்மேல் வெகுண்டு வருங்கால் அவர் முன் தான்நடுங்கி நிற்றலை நினைக்கவே, தான் தன்னின் மெலியார்மேல் வெகுண்டு செல்லான் என்றவாறு. தன்னை என்பது ஆகு பெயர், தன் நிலைக்கு ஆயினமையால். தன் நிலை - தான் நிற்கும் நிலை. மெலியார்-செல்வம் முதலியவற்றால் எளியவர்.


கருத்து: இஃது அருளை அடைதற்கு வழி கூறிற்று.


No comments:

Post a Comment